இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கிராமப்புறங்களில்
விளையாடும் விளையாட்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். விளையாடுவதற்கும்
குஷியாக இருக்கும். பல்வேறு பெயர்களில் பல விளையாட்டுக்கள் கிராமப்புறங்களில்
விளையாடப்படுகிறது. அதில் ஒன்று தான் பூப்பறிக்க வருகிறோம் என்னும் விளையாட்டு.
இவ்விளையாட்டை குழந்தைகள் குழுவாக விளையாடுவார்கள்.
எத்தனை பேர் விளையாடலாம்?
ஐந்திற்கும்
மேற்பட்டோர் விளையாடலாம்.
எப்படி விளையாடுவது?
முதலில்
குழுத்தலைவர்களாக இரண்டு நபர்களை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பின்
இரண்டிரண்டு நபர்களாக தங்களது ஜோடிகளை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு
ஜோடியும் தனியாகச் சென்று யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஒரு பெயரை வைத்துக்கொள்ள
வேண்டும். (பழங்கள், பூக்கள், மரங்கள் என எந்த பெயராகவும் கூட வைக்கலாம்)
ஆளுக்கொரு பெயரை வைத்துக்கொண்டு குழுத்தலைவர்களின் அருகில் வருவார்கள்.
உதாரணமாக,
மாம்பழம் வேண்டுமா? கொய்யாப்பழம் வேண்டுமா? எனக் கேட்பார்கள். குழுத்தலைவர்
மாம்பழம் வேண்டும் எனக் கேட்டால் மாழ்பழம் பெயர் கொண்டவர் அவரின் குழுவிற்கு
சென்றுவிட வேண்டும். மற்றொருவர் அடுத்த குழுத்தலைவரின் குழுவிற்கு சென்றுவிட
வேண்டும். இவ்வாறு தங்களது குழுக்களை முதலில் பிரித்துக்கொள்ள வேண்டும்.
அதன்பின்
இரண்டு குழுத்தலைவர்களும் தங்களது குழுவில் உள்ளவர்களுக்கு ஏதாவது பூவின் பெயரையோ,
மாதத்தின் பெயரையோ வைக்க வேண்டும்.
இரண்டு
குழுவினரும் தங்களது குழுவினருடன் நேரெதிராக நிற்க வேண்டும்.
பூப்பறிக்க
வருகிறோம்... வருகிறோம்.. இந்த நாட்டிலே எனப் பாடிக்கொண்டு இரண்டாவது குழுவினரை
நோக்கி முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
எந்த
பூ வேண்டும்... வேண்டும்... இந்த நாட்டிலே என பாடிக்கொண்டு முதலாவது குழுவினரை
நோக்கி முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
தாமரைப்பூ
வேண்டும்.... வேண்டும்.... இந்த நாட்டிலே எனப் பாடிக்கொண்டு இரண்டாவது குழுவினரை
நோக்கி முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
அதன்பின்
தாமரைப்பூவின் பெயரை கொண்டவர் முன்னே வர வேண்டும். மற்றொரு குழுவில் இருந்து
ஒருவர் முன்னே வர வேண்டும்.
இப்பொழுது
அந்தந்த குழுவை சேர்ந்தவர்கள் அவர்களை ஒருவர் பின் ஒருவராக இடுப்பை இறுக
கட்டிப்பிடித்து கொள்ள வேண்டும்.
முன்னே
வந்த இருவரும் ஒருவர் கையை மற்றொருவர் இறுக பிடித்து இழுக்க வேண்டும்.
அவரவர்கள்
குழுவில் இருக்கும் மற்றவர்கள் அவருக்கு உதவியாக பின்னால் நின்று இழுக்க
ஆரம்பிப்பார்கள். அப்படி இழுக்கும்போது, ஏதாவது ஒரு குழுவில் இருக்கும் முதல் நபர்
மற்றொரு பக்கம் இழுக்கப்படுவார். யார் இழுக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்ற
குழுவாகும். அதன்பிறகு மீண்டும் முதலிலிருந்து விளையாட வேண்டும்.
பயன்கள் :
குழந்தைகள்
தங்களுக்குள் இருக்கும் பாடும் திறனையும், கேள்வி கேட்கும் திறனையும், பதில்
சொல்லும் திறனையும் வளர்த்துக்கொள்வதற்கு இந்த விளையாட்டு உதவுகிறது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக