இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மேட்டூர் என்றாலே அனைவருக்கும் டக்கென்று ஞாபகத்திற்கு வருவது மேட்டூர் அணை தான். மேட்டூர் மட்டுமல்ல தமிழகத்திற்குமான அடையாளமாகவும் மேட்டூர் அணையைச் சொல்லலாம்.... ஏனெனில், இதுதான் தமிழகத்தின் மிகப்பெரிய அணை!
மேட்டூர் அணை சேலத்திலிருந்து ஏறத்தாழ 52 கி.மீ தொலைவிலும், நாமக்கலில் இருந்து 95கி.மீ தொலைவிலும், ஈரோட்டிலிருந்து 57 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
சிறப்புகள் :
16 கண் மதகுகளை கொண்ட மேட்டூர் அணை காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. மேட்டூர் அணை மற்றும் காவிரி ஆற்றிலிருந்து பல மாவட்ட பொதுமக்களின் குடிநீர், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்காகவும் தண்ணீர் எடுத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேட்டூர் நீர்த்தேக்கம் என்றழைக்கப்படும் ஸ்டான்லி நீர்த்தேக்கம் தமிழகத்தின் மிகப்பெரிய அணையாகும்.
நீர் இருந்தாலும், குறைந்தாலும் எப்பொழுதும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுப்பதோடு சிதைந்த, காலத்தின் அழியா நினைவு சின்னங்களையும் தன்னுள் அடக்கிநின்று காலத்தின் பெருமையை உணர்த்தி மக்கள் மனதை குளிர்விக்கின்றது மேட்டூரின் ஸ்டான்லி நீர்த்தேக்கம்.
அணையின் நீர்மட்டம் குறைந்தால் அணையின் நடுவில் இருக்கும் நந்தி சிலை இன்றும் அடையாள சின்னமாய் உள்ளது.
அணையிலிருந்து விழும் நீரை பார்க்கும்போது பயம் கலந்த பரவசமாக இருக்கும். அணைக்கு எதிரில் அழகிய புல்தரைகளுடன் கண்ணை கவரும் விதத்தில் அழகு மிகுந்ததாக காட்சியளிக்கும் பூங்காவும் உள்ளது. அங்குள்ள பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்றவாறு விளையாட்டுகள் அமைந்துள்ளது. பூங்காவில் உள்ள மரங்களுக்கு அடியில் ஓய்வெடுக்கலாம்.
இப்பூங்காவில் அரியவகை பாம்பு வகைகளையும், மான்களையும் காண முடியும். மேலும், அங்கு வரும் பயணிகள் சுவையான மீன்களை சுவைத்தும், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கவும் ஏற்ற இடமாக மேட்டூர் அணை திகழ்கிறது.
எப்படி செல்வது?
முக்கிய நகரங்களிலிருந்து சேலத்திற்கு பேருந்து வசதிகள் உள்ளது. சேலத்திலிருந்து மேட்டூருக்கு பேருந்து வசதிகள் உள்ளது.
விமானம் வழியாக :
சேலம் விமான நிலையம்.
ரயில் வழியாக :
சேலம் ரயில் நிலையம்.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
சேலம் மற்றும் மேட்டூரில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளது.
பார்க்க வேண்டிய இடங்கள் :
பூங்கா.
சிறுவர் விளையாட்டு இடங்கள்.
இதர சுற்றுலாத்தலங்கள் :
சங்ககிரி கோட்டை.
ஏற்காடு.
உயிரியல் பூங்காக்கள்
கோயில்கள் மற்றும் மசூதிகள்.
1008 சிவலிங்கம் கோவில்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக