Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 23 ஜூலை, 2019

ஜான் எஃப். கென்னடி


Image result for ஜான் எஃப். கென்னடி

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


'நாடு உனக்கு என்ன செய்ய முடியும் என்று கேட்காதே, நீ நாட்டுக்கு என்ன செய்ய முடியும் என்று கேள்" என்று முழங்கிய மாமனிதர்.

பொறுப்பில் இருந்தது மொத்தம் இரண்டு ஆண்டுகள் பத்து மாதங்கள் இரண்டு நாட்கள் மட்டுமே. அந்த குறுகிய காலத்திற்குள் நாட்டிற்கு சுய கௌரவம், தைரியம், பெருமிதம் ஆகியவற்றை பெற்றுத்தந்தவர்.

1962ஆம் ஆண்டு உலகம் அணுஆயுத போரின் விளிம்பில் நின்று கொண்டிருந்தது. அமெரிக்காவுக்கும், அப்போதைய சோவியத் யூனியனுக்கும் இடையே பெருத்த பலப்பரீட்சை உருவெடுத்திருந்தது.

கியூபாவில் இரகசியமாக அணுஆயுதங்களை நிலைநாட்டி அமெரிக்காவின் மீது அதனை பயன்படுத்த திட்டமிட்டிருந்தது, சோவியத் யூனியன்.

எந்த நேரத்திலும் போர் வெடித்து உலகம் அழியக்கூடும் என்று அனைவரும் அஞ்சினர். ஆனால், ஒரு துளி இரத்தம்கூட சிந்தாமல் ஒரு மாபெரும் அணுஆயுத போர் தவிர்க்கப்பட்டது.

இதற்கு அடிப்படை காரணம் தனியொரு மனிதனின் தைரியமும், தொலைநோக்கும், உன்னதமான தலைமையத்துவப் பண்பும்தான்.

அமெரிக்க மக்கள் மட்டுமல்லாமல் உலக மக்கள் அனைவராலும் நேசிக்கப்பட்டவர். போரில் வெற்றி பெற்றதற்காக மட்டுமல்லாமல் போரைத் தவிர்த்ததற்காக நாட்டு மக்களால் புகழப்பட்டவர்.

அமெரிக்கா அதிபர்கள் வரலாற்றில் பலர் முத்திரை பதித்திருந்தாலும் ஒரு சிலரைத்தான் இன்றும் அன்போடு நினைவு கூறுகின்றோம். அவர்களில் முக்கியமானவர் இவர்.

அவர்தான் அமெரிக்க வரலாற்றிலேயே மிக இளைய வயதில் அதிபரான ஜான் எஃப். கென்னடி.

ஜான் ஃபிட்ஸ்ஜெரால்ட் கென்னடி (துழாn குவைணபநசயடன முநnநெனல) 1917ஆம் ஆண்டு, மே 29ஆம் தேதி, ப்ரூக்ளின் மாஸசூசெட்ஸ் நகரில் தொழிலதிபரான ஜோசப் பேட்ரிக் 'ஜோ" கென்னடிக்கும், ரோஸ் எலிசபெத் ஃபிட்ஸ்ஜெரால்ட் கென்னடிக்கும் இரண்டாவது மகனாக பிறந்தார்.

இவருடைய தாத்தா பி.ஜே.கென்னடி மாசசூசெட்ஸ் மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். ஜான் எஃப் கென்னடி உடன் மொத்தம் பிறந்தவர்கள் ஒன்பது பேர்.

மூத்த சகோதரர் ஜோசப் ஜூனியர்

ஜான் ஃபிட்ஸ்ஜெரால்ட் கென்னடி

ரோஸ்மேரி

கேத்லீன் ஆக்னெஸ் கென்னடி

யூனிஸ் கென்னடி ஷிரிவர்

பாட்ரிசியா கென்னடி லாஃபோர்ட்

ராபர்ட் ஃபிரான்ஸிஸ் பாபி கென்னடி

ஜீன் கென்னடி ஸ்மித் மற்றும்

எட்வர்ட் மூர் கென்னடி ஆவார்கள்.

ஜான் எஃப் கென்னடி தனது வாழ்க்கையில் முதல் பத்து வருடங்கள் ப்ரூக்ளினில் வாழ்ந்தார். இவர் தனது பள்ளிப்படிப்பை நுனறயசன னுநஎழவழைn ளுஉhழழட மற்றும் ழேடிடந யனெ புசநநழெரபா டுழறநச ளுஉhழழட மற்றும் னுநஒவநச ளுஉhழழட-ல் படித்தார். இவரது குடும்பம் 1927ஆம் ஆண்டு ப்ரூக்ளின் நகரத்தில் இருந்து நியூயார்க்-க்கு இடம் பெயர்ந்தது.

ஜான் எஃப் கென்னடியின் குழந்தைப்பருவம் மகிழ்ச்சியானதாக அமைந்தது.

1940ஆம் ஆண்டு ஹார்வர்ட் (ர்யசஎயசன ஊழடடநபந) பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்ற ஜான் எஃப் கென்னடி அமெரிக்க கடற்படையில் அதிகாரியாக சேர்ந்தார்.

1943ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின்போது ஜான் எஃப் கென்னடியின் பொறுப்பிலிருந்த கடற்படைப் படகை ஜப்பானியப் போர்க்கப்பல் தாக்கி மூழ்கடித்தது.

அவர் கடுமையாக காயமடைந்தாலும் ஆபத்தான கடற்பகுதியில் நீந்தி துணிகரமான முறையில் செயல்பட்டு தனக்கு கீழ் இருந்த வீரர்களை காப்பாற்றினார்.
காயமடைந்த வீரர் ஒருவரை அவர் சுமார் மூன்று மைல் தூரம் கடலில் நீந்து வந்து கரை சேர்த்தார். அந்த துணிகர செயலுக்காக அவருக்கு 'Pரசிடந ர்நயசவ" என்ற போர் வீரப்பதக்கம் வழங்கப்பட்டது.

போர் முடிந்து வந்ததும் ஜான் எஃப் கென்னடி அரசியலில் ஈடுபட்டார். அமெரிக்க மக்களவையில் டெமேக்ராட்டிக் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

ஜான் எஃப். கென்னடியின் திருமணம் :

1952ஆம் ஆண்டு ஜான் எஃப். கென்னடி மற்றும் ஜாக்குலின் லீ பௌவியர் இருவருக்கும் விருந்தொன்றில் அறிமுகம் ஏற்பட்டது. கென்னடியின் உடல்தோற்றம், அழகு ஜாக்குலின் லீ பௌவியரை கவர்ந்தது.

நாட்கள் செல்ல செல்ல இருவருக்குமிடையே இருந்த நட்பு காதலாக மலர்ந்தது. கென்னடி தன் காதலை ஜாக்குலின் லீ பௌவியரிடம் வெளிப்படுத்தினார்.

முதலில் சிறிது கால அவகாசம் கேட்ட ஜாக்குலின் லீ பௌவியர், கென்னடியின் காதலுக்கு சம்மதம் தெரிவித்தார். அதன் பின்பு இவர்களின் திருமணம் 1953ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி நியூபோர்ட்டிலுள்ள புனித மேரி தேவாலயத்தில் நடந்தது.
திருமணம் முடிந்து சில ஆண்டுகளில், இருவரும் பல தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு ஆளாகினர். கென்னடி தாங்க முடியாத முதுகு வலிக்கும், அடிசன் நோய்க்கும் ஆளானார்.

அதேசமயம் 1955ல் ஜாக்குலினுக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. அதன்பின்பு 1956ல் பிறந்த பெண் மகவு இறந்து பிறந்தது. இறுதியில் இருவருக்கும் 1957ல் கரோலின் என்ற மகள் பிறந்தார். அதன்பின் 1960ல் பிறந்த குழந்தைக்கு ஜான் எஃப். கென்னடி இளையவர் (துழாn துச.) எனப் பெயரிட்டனர். அதன்பிறகு 1963ல் பிறந்த இரண்டாவது மகனும் இருநாட்களிலேயே உயிரிழந்தார்.

ஜான் எஃப் கென்னடி திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் கழித்து கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு முதுகுதண்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

நீண்ட நாட்களாக குணமடைந்து வந்தபோது அவர் 'Pசழகடைநள in ஊழரசயபந" என்ற நூலை எழுதினார். அந்த நூலுக்காக அவருக்கு 1957ஆம் ஆண்டுக்கான 'Pரடவைணநச Pசணைந" வழங்கப்பட்டது.

1960ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் 'சுநிரடிடiஉயn" பிரிவு வேட்பாளரான ரிச்சர்ட் நிக்ஸனை (சுiஉhயசன Niஒழn) குறுகிய வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து அமெரிக்காவின் 35வது அதிபராக ஜான் எஃப் கென்னடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அமெரிக்காவின் முதல் ரோமன் கத்தோலிக்க அதிபர் இவர்தான். அப்போது அவருக்கு வயது 43 மட்டுமே. அதிபரான பிறகு அவர் ஆற்றிய முதல் உரையே வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. அவர் அதிபராக பதவியேற்கும்போது கூறிய வரிகள்தான் இன்றளவும் நாட்டுப்பற்றுக்கு உதாரணமாக கூறப்படுகிறது. 'நாடு உனக்கு என்ன செய்ய முடியும் என்று கேட்காதே, நீ நாட்டுக்கு என்ன செய்ய முடியும் என்று கேள்" என்று முழங்கினார் ஜான் எஃப் கென்னடி. இவ்வரிகள் வரலாற்றுப் பக்கங்களில் நிரந்தரமாக இடம்பெற்றுவிட்டது.

ஜான் எஃப். கென்னடி அமெரிக்காவின் அதிபரான நேரத்தில் அவருக்கு சவாலான பல பணிகள் காத்திருந்தன. உலகமெல்லாம் கம்யூனிச தேசங்கள் அமெரிக்காவிற்கு எதிராக திரண்டு கொண்டிருந்தன.

மிக அருகிலேயே கியூபாவில் இருந்து கொண்டு பிடல் காஸ்ரோ அமெரிக்காவிற்கு சவால் விடுத்துக் கொண்டிருந்தார். அணுஆயுத போட்டியோ அதிகரித்துக் கொண்டிருந்தது. விண்வெளியில் சோவியத் ஒன்றியம் முந்திக்கொண்டிருந்தது.

1961ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி கியூபாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்தை செயல்படுத்துவது என குறிக்கப்பட்ட நாள்.
அமெரிக்காவின் அதிபராக ஜான் எஃப். கென்னடி பதவியேற்று சிறிது காலங்கள் மட்டுமே ஆகியிருந்தன. அமெரிக்கா நேரடியாக போர்களில் ஈடுபடக்கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனாலும், அதிபருக்கே தெரியாமல் சில விமானங்கள் கியூபாவில் தாக்குதல் நடத்தியிருந்தன. 6 நாட்கள் நடந்த மறைமுக யுத்தத்தில் அமெரிக்காவிற்கு பெரும் தோல்வி ஏற்பட்டது.

முற்றுகையிட சென்றவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். பலகோடி ரூபாய் இழப்பீடு கொடுத்த பிறகே அவர்களை விடுவிக்க பிடல் காஸ்ரோ சம்மதித்தார். இந்த சுதந்திர யுத்தத்தால் லத்தீன் நாடுகளுக்கிடையே அமெரிக்காவிற்கு எதிரான மனநிலை தோன்றியது.

சோவியத் யூனியனுக்கு, கியூபாவிலும் மற்ற நாடுகளிலும் மரியாதை உயர்ந்தது. பிடல் காஸ்ரோ வலுவான தலைவராக உயர்ந்தார். ஜான் எஃப். கென்னடிக்கோ நெருக்கடி முற்றியது.

இளமை துடிப்புக்கொண்ட புத்திசாலி என்றாலும் முடிவெடுப்பதில் அனுபவமற்றவர் என்று ஜான் எஃப் கென்னடி பற்றி சோவியத் ஒன்றிய ஊடகங்கள் கேலி செய்தன. பெரும் சவால்களை எதிர்கொள்ளும் அளவிற்கு துணிச்சல் இல்லாதவர் என்றும் சிலர் விமர்சித்தனர்.
அடுத்ததாக ஆப்ரேஷன் மங்கூஸ் மேற்கொள்ளப்பட்டது. பிடல் கேஸ்ரோ பயன்படுத்தும் சுருட்டில் விஷம் வைப்பது, அவரது தாடியை வளரவிடாமல் அவரது தோற்றத்தை சீர்குலைப்பது, கம்யூனிசத்திற்கு எதிரான கருத்துகளை பரப்புவது என்று பல யோசனைகள் ஜான் எஃப். கென்னடியின் முழுமையான ஆதரவு இல்லாமல் தான் மேற்கொள்ளப்பட்டன. இதனால் ஆப்ரேஷன் மங்கூஸ் மிக மோசமான தோல்வியை கண்டது.

தோல்வி மனநிலையில் இருந்த ஜான் எஃப். கென்னடிக்கு, கியூபா இன்னொரு அச்சுறுத்தலை தந்தது. சோவியத் ஒன்றியத்தின் அணுவெடிப்பொருளை கொண்டு செல்லும் ரஷ்யாவின் ஏவுகணைகள் கியூபாவில் நிறுவப்பட்டன.

வேறு வழியின்றி சோவியத் ஒன்றியத்திடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தும் நிலைக்கு ஜான் எஃப். கென்னடி தள்ளப்பட்டார். ஒருவகையில் இது தோல்வியாக கருதப்பட்டாலும் போரை தவிர்த்தற்காக பலராலும் பாராட்டப்பட்டார்.

அதிபரான பின் இவர் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகளால் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அமெரிக்கா அதிக பொருளாதார வளத்தை கண்டது. அவர் பதவியேற்ற இரண்டு ஆண்டுகளுக்குள் 'கியூபா" பிரச்சனையை சுமூகமாக கையாண்டு போரை தவிர்த்ததோடு மட்டுமல்லாமல் சோவியத் யூனியனுடான உறவு மேம்படவும் வழிவகுத்தார்.

இவரது ஆட்சிக்காலத்தில் கியூபா ஏவுகணை விவகாரம், பெர்லின் சுவர் பிரச்சனை, விண்வெளி ஆய்வுப் போட்டி, அமெரிக்க குடியுரிமை விவகாரம், வியட்நாம் போர் ஆரம்பம் ஆகிய பல முக்கிய நிகழ்வுகள் உலகில் நடந்தன. அவை எழுப்பிய சவால்களை இவர் தீர்க்கமாக எதிர்கொண்டார்.

ஜான் எஃப் கென்னடியின் மரணம்!!

நாட்டுக்காக நல்ல காரியங்களில் கவனம் செலுத்திய ஜான் எஃப் கென்னடிக்கு எதிராக சில தீய சக்திகள் உருவெடுத்தன. கம்யூனிஸ்ட் கொள்கைகளுக்கு எதிராக இருந்த அவரை கம்யூனிஸ்ட் ஆதரவாளர் என்று கூறும் முழுப்பக்க விளம்பரம் ஒன்று 1963ஆம் ஆண்டு பத்திரிகையில் வெளியானது.

அறியாமை என்பது ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து ஜான் எஃப் கென்னடி ஒரு நிகழ்ச்சியில் பேச வுநஒயள மாகாணத்திற்கு விமானம் மூலம் சென்றார்.

டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகருக்குச் சென்றார். விமான நிலையத்திலிருந்து வணிக வளாகத்திற்கு மனைவி ஜாக்குலினுடன் காரில் ஊர்வலமாகச் சென்றபோது, ரோட்டின் இருபுறமும் திரளான மக்கள் கூடி நின்று வரவேற்றனர். மக்களைப் பார்த்து கை அசைத்தபடி சென்று கொண்டிருந்தார், ஜான் எஃப் கென்னடி.
திடீரென்று, ஒரு கட்டிடத்தின் 6வது மாடியிலிருந்து சீறி வந்த இரண்டு துப்பாக்கிக் குண்டுகள் கென்னடியின்; கழுத்திலும், தலையிலும் பாய்ந்தன. ஜான் எஃப் கென்னடி காருக்குள் சுருண்டு விழுந்தார். அச்சமயம் ஜாக்குலின் காரின் பின்புறம் எதையோ தேடினார். அதேசமயம் அதிபரின் பாதுகாவலர் காரின் மீது ஏறி அதிபரை காக்க முயன்றார். கண்மூடிக் கண் திறப்பதற்குள் இந்தச் சம்பவம் நடந்துவிட்டது.

என்ன நடந்தது என்பதுகூட பொதுமக்களில் பலருக்கு தெரியவில்லை. காரிலிருந்த மெய்க்காவலர்கள், காரை அருகில் இருந்த மருத்துவமனையை நோக்கித் திருப்பினார்கள். கென்னடியை பரிசோதித்த மருத்துவர்கள் கொண்டு வரும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ஜான் எஃப் கென்னடி கொல்லப்பட்ட 70 நிமிடங்களில் ஆஸ்வால்டு என்ற 24 வயது இளைஞன் கைது செய்யப்பட்டான். ஆஸ்வால்டு, சோவியத் ஒன்றியத்திலிருந்து வந்து கடற்படையில் பணியாற்றியவன். சிறையில் வைக்கப்பட்டிருந்த அவனைக் கோர்ட்டில் ஆஜர் படுத்துவதற்காக 1963ஆம் ஆண்டு நவம்பர் 24ந்தேதியன்று போலீசார் வெளியே அழைத்து வந்தனர். ஜெயிலுக்கு முன்னால் பெரும் கூட்டம் கூடியிருந்தது.

கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஜாக் ரூபி என்பவன், ஆஸ்வால்டை வெகு அருகிலிருந்து சுட்டான். குண்டு குறி தவறாமல் நெஞ்சில் பாய்ந்தது. ஆஸ்வால்டு அதே இடத்தில் செத்து விழுந்தான். ஆஸ்வால்டு கொல்லப்பட்டதால், ஜான் எஃப் கென்னடியை அவன் எதற்காக சுட்டுக்கொன்றான், அதன் பின்னணி என்ன, அவனை யாரும் தூண்டிவிட்டார்களா என்பதே தெரியாமல் போய்விட்டது.

ஆஸ்வால்டை சுட்டுக்கொன்ற ரூபியை உடனே போலீசார் கைது செய்தனர். ரூபி இரவு விடுதி ஒன்றின் சொந்தக்காரன். அவன்மீது வழக்கு தொடரப்பட்டது. அவனுக்கு 1964ஆம் ஆண்டு மார்ச் 14ம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவன் மனநோயாளி என்று டாக்டர்கள் கூறியதால் தூக்கில் போடப்படாமல் காவலில் வைக்கப்பட்டிருந்தான். சிறையிலேயே 1967 ஜனவரி 3ந்தேதி மரணம் அடைந்தான்.

கொலை விசாரணையை நடத்திய வாரன் கமிஷன் ஆஸ்வால்ட் என்பவன் வேறு எவரின் உதவியுமின்றி தனித்தே கென்னடியை சுட்டுக் கொன்றதாக தெரிவித்தது.

ஒரு மாபெரும் தலைவனை இழந்து அமெரிக்க தேசம் அழுதது. போரை வென்றதற்காக அல்ல போரை தவிர்த்ததற்காக நாட்டு மக்களால் பெரிதும் போற்றப்பட்டவர் கென்னடி. அவர் அதிபர் பொறுப்பில் இருந்தது மொத்தம் இரண்டு ஆண்டுகள் பத்து மாதங்கள் இரண்டு நாட்கள் மட்டுமே.

அந்தக் குறுகிய காலத்திற்குள் அவர் அமெரிக்கர்களுக்கு சுய கௌரவம், தைரியம், பெருமிதம் ஆகியவற்றை பெற்றுத் தந்தார். அவர் இறந்தபோது அவருக்கு வயது நாற்பத்தி ஆறுதான்.

அமெரிக்காவின் முன்னேற்றத்திற்காக கென்னடி தீட்டியிருந்த உயரிய திட்டங்களை அவருக்குப் பின் அதிபரான லிண்டன் ஜான்சன் நிறைவேற்றினார்.

அமெரிக்கா அதிபர்கள் வரலாற்றில் பலர் முத்திரை பதித்திருந்தாலும் ஒரு சிலரைத்தான் அமெரிக்கர்கள் இன்றும் அன்போடு நினைவு கூறுகின்றனர். அவர்களில் முக்கியமானவர் ஜான் எஃப் கென்னடி.

இளைய வயதிலும் அமெரிக்காவின் மற்றும் உலகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கிய முடிவுகளை எடுக்க அவருக்கு உறுதுணையாக இருந்த பண்புகள் தொலைநோக்கு, தெளிந்த சிந்தனை, காரியத் துணிவு, மனசாட்சியைத் தவிர வேறு எதற்கும் அஞ்சாத தைரியம், உலக அமைதியே நிரந்தரம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவைதான். அந்தப் பண்புகளில் சிலவற்றை நாம் பின்பற்றினால்கூட நமக்கும் நாம் விரும்பும் வானம் நிச்சயம் வசப்படும்.

ஜான் எஃப் கென்னடி மற்றும் ஆப்ரகாம் லிங்கன்!!

அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன் வாழ்க்கைக்கும், மற்றொரு ஜனாதிபதியான ஜான் எஃப். கென்னடியின் வாழ்க்கைக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

ஆப்ரகாம் லிங்கன் காங்கிரஸ் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 1846.
ஜான் எஃப் கென்னடி தேர்ந்தெடுக்கப்பட்டது சரியாக நூறு வருடம் கழித்து 1946.

ஆப்ரகாம் லிங்கன் துணை தலைவர் பதவிக்கான தேர்தலில் தோற்றது 1856
ஜான் எஃப் கென்னடி துணை தலைவர் பதவிக்கான தேர்தலில் தோற்றது 1956.

ஆப்ரகாம் லிங்கன் ஜனாதிபதியாக பதவி ஏற்றது 1860ல்,
ஜான் எஃப் கென்னடி ஜனாதிபதி ஆக பதவி ஏற்றது சரியாக நூறு வருடங்களுக்குபின் 1960ல்.

லிங்கன் தோற்கடித்த ஸ்டீபன் டக்லாஸ் பிறந்தது 1813.
கென்னடி தோற்கடித்த ரிச்சர்ட் நிக்ஸன் பிறந்தது 1913.

லிங்கனை அடுத்து பதவியேற்ற ஆன்ட்ரூ ஜான்சன் 1808ல் பிறந்தவர்.
கென்னடியை அடுத்துப் பதவியேற்ற லிண்டன் ஜான்சன் 1908ல் பிறந்தவர்.
இவர்கள் இருவருமே அமெரிக்க செனட்டில் பதவி வகித்தவர்கள்.

லிங்கனின் செயலாளர் பெயர் கென்னடி.
கென்னடியின் செயலாளர் பெயர் லிங்கன்.

லிங்கனின் துணைத் தலைவர் பெயர் ஆண்ட்ரூ ஜான்ஸன்.
கென்னடியின் துணைத் தலைவர் பெயர் லிண்டன் ஜான்ஸன்.
இருவருடைய துணைத் தலைவரது பெயரும் ஜான்ஸன் என்று பொருந்திப்போகிறது.
கொலையாளிகள் இருவரும் மூன்று விதமான பெயரில் அழைக்கப்பட்டார்கள். லிங்கனைக் கொன்றவர் ஜான் என்றும், வில்க்ஸ் என்றும், பூத் என்றும் மூன்று வகையாக நண்பர்களாலும், உறவினர்களாலும், தங்கள் அதிகாரிகளாலும் அழைக்கப்பட்டார்.

அதுபோல் கென்னடியை கொன்றவர் லீ என்றும், ஹார்வி என்றும், ஒஸ்வால்ட் என்றும் அழைக்கப்பட்டார்.

கொலையாளிகள் இருவருடைய பெயரிலும் மொத்தம் 15 எழுத்துக்கள் இருந்தன.

லிங்கன் கொல்லப்பட்ட தியேட்டரின் பெயர் 'ஃபோர்ட்".
கென்னடி கொல்லப்பட்டது லிங்கன் என்ற பெயர் கொண்ட 'ஃபோர்ட்" தயாரித்த காரில்.

லிங்கனைக் கொன்ற ஜான் தியேட்டரிலிருந்து தப்பி ஓடி ஒரு கிடங்கில் பிடிபட்டான்.
கென்னடியை கொன்ற ஒஸ்வால்ட் ஒரு கிடங்கிலிருந்து தப்பி ஓடி தியேட்டரில் பிடிபட்டான்.

லிங்கனின் மனைவி மேரி லிங்கனும், கென்னடியின் மனைவி ஜாக்குலீன் கென்னடியும் வெள்ளைமாளிகையில் வாழ்ந்த காலத்தில்தான் அவர்களுடைய மகன்களை மரணம் தழுவியது.

லிங்கனின் மகன்கள் பெயர் ராபர்ட் மற்றும் எட்வர்டு.
எட்வர்டு மூன்று வயதில் இறந்து போனார். ராபர்ட் உயிரோடு வாழ்ந்தார்.

கென்னடியின் சகோதரர்கள் பெயரும் ராபர்ட் மற்றும் எட்வர்டு. ராபர்ட் கொல்லப்பட்டார், எட்வர்டு உயிரோடு வாழ்ந்தார்.

இரண்டு ஜனாதிபதிகளுமே தங்கள் மனைவியருடன் இருக்கும் போதுதான் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.
இருவருக்கும் பின் தலையில்தான் குண்டடிப்பட்டது.
இருவருமே வெள்ளிக்கிழமையன்றுதான் சுடப்பட்டார்கள்.

லிங்கனையும், கென்னடியையும் கொலை செய்த இருவரும் அமெரிக்காவின் தெற்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். அதே தெற்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களால்தான் இருவரும் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டனர்.

பூத் மற்றும் ஓஸ்வால்ட் இருவருமே தங்கள் தண்டனையை அனுபவிக்கும் முன்னரே கொல்லப்பட்டனர்.

ஜான் எஃப் கென்னடியின் பொன்மொழிகளில் சில...!!

நாடு உங்களுக்கு என்ன செய்தது என்று கேட்பதை விட, உங்களால் இந்த நாட்டிற்கு என்ன செய்ய முடியும் என்று கேட்டுப்பார்க்க வேண்டும்.

மோசமான தோல்வியை எதிர்கொள்ளும் தைரியம் உடையவர்களே மிகப்பெரிய வெற்றியை பெறமுடியும்.

சிக்கல்கள்தான் மிகப்பெரிய சாதனைகளையும், மிக உறுதியான வெற்றிகளையும் உருவாக்குகிறது.

தாங்கள் செய்யும் தவறுக்கு அவரவர்கள் சூட்டிக்கொள்ளும் பெயர்தான் அனுபவம்.

மாற்றமே வாழ்க்கையின் விதி. கடந்த காலம் அல்லது நிகழ்காலத்தை மட்டுமே கவனிப்பவர்கள் நிச்சயமாக தங்களது எதிர்காலத்தை இழக்கிறார்கள்.

நமது தேசத்தின் முன்னேற்றம் என்பது கல்வியில் நாம் அடையும் முன்னேற்றத்தைவிட வேகமாக இருக்க முடியாது. மனிதனின் மூளைதான் நமது அடிப்படை வளம்.

எதிர்காலத்தை உற்று நோக்குங்கள்...! அங்குதான் உங்கள் வாழ்க்கையைக் கழிக்கப் போகிறீர்கள்.

வாழ்க்கை என்பது வாய்ப்புகளால் நிரம்பியது, நாம் பயன்படுத்தும் வாய்ப்பை பொறுத்தே நம் வாழ்க்கை அமையும்.

பிரச்சனைகள் தான் மிகப்பெரிய சாதனைகளையும், மிக உறுதியான வெற்றிகளையும் உருவாக்குகின்றன.

நமது அறிவு பெருகப் பெருக நமது அறியாமையின் அளவும் அதிகரித்துக்கொண்டே போகிறது.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக