இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
நாம் வாழ்ந்து வரும் இப்பூமியில் பல அதிசயங்களும், ஆச்சரியங்களும் நிறைந்துள்ளன. இன்றும் பல அதிசயங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது.... பல மர்மங்கள் நிறைந்த கிணற்றை பற்றி தான்.
இங்கிலாந்திலுள்ள யார்க்ஷயரில் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றை பார்க்கவே உலகில் பல இடங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
இந்த கிணற்றில் அப்படி என்ன அதிசயம்-னு கேட்கறீங்களா?
அதிசயம் இருக்கே!.....
இந்த கிணற்றில் எந்தவொரு பொருளை போட்டாலும் ஒரு வாரம் கழித்து அந்தப் பொருள் கல்லாக மாறிவிடுமாம்.
சைக்கிள், கிரிக்கெட் பேட், பொம்மைகள் என எதை போட்டாலும் அவையனைத்தும் ஒரு வாரம் கழித்து கல்லாக மாறிவிடும் விந்தை இன்றும் நடக்கிறது.
ஆய்வாளர்கள் சிலர், அந்த கிணற்றில் சில பொருட்களை கயிறால் கட்டி கிணற்றுக்குள் தொங்கவிட்டுச் சென்றுள்ளனர்.
அந்த ஊரிலேயே ஒரு வாரம் தங்கியிருந்து மீண்டும் அந்த கிணற்றிற்கு சென்று பார்த்தப்போது, அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதிசயமும் காத்திருந்தது.
கிணற்றில் போட்ட பொருட்கள் எல்லாம் கல்லாக மாறியிருந்தன. எப்படி இந்த அதிசயம் நிகழ்ந்தது? என்று திகைத்து நின்றுள்ளனர்.
இந்த கிணற்றில் அதிகமாக பொம்மைகள் தான் போடப்படுகிறதாம்... இதனாலேயே இந்த கிணற்றுக்கு அருகில் பலர் பொம்மை கடைகளை வைத்து விற்பனை செய்கின்றனர்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பொம்மைகளை வாங்கி கிணற்றுக்குள் போட்டு விட்டுச் செல்கின்றார்களாம்.
அப்பகுதியில் வாழும் சிலர், இந்த கிணற்றில் கடவுள் இருக்கிறார் என்றும், சிலர் இக்கிணற்றில் ஆவிகள் குடிகொண்டுள்ளன என்றும் கூறுகின்றனர்.
ஆனால், அந்த கிணற்றில் அப்படி என்னதான் இருக்கிறது?
ஏன் எதைப்போட்டாலும் கல்லாக மாறிவிடுகின்றன? என்ற கேள்விக்கான விடை மட்டும் இன்றும் யாராலும் கண்டறியப்படவில்லை.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக