Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 23 ஜூலை, 2019

வார்த்தை வட்டம்..

Image result for வார்த்தை வட்டம்..


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


விளையாட்டு குழந்தைகளின் உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி அளிப்பதை போலவே, குழந்தைகளின் கற்றலுக்கும் வழிவகுக்கிறது. சில விளையாட்டுகளின் மூலமாக குழந்தைகள் கூட்டல், கழித்தல் கணக்குகளை சுலபமாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. மேலும், சில விளையாட்டுகளின் மூலமாக புதிய புதிய சொற்களையும் விளையாட்டு போக்கிலேயே குழந்தைகள் கற்றுக்கொள்வதும் உண்டு.

அப்படியான ஒரு விளையாட்டுதான் 'வார்த்தை வட்டம்".

எத்தனை பேர் விளையாடலாம்?

இந்த விளையாட்டை 15 முதல் 20 குழந்தைகள் வரை விளையாடலாம்.

எப்படி விளையாடுவது?

முதலில் மூன்று போட்டியாளரை தேர்வுசெய்து கொள்ள வேண்டும்.

மைதானத்தில் ஒரு பெரிய வட்டமொன்றை போட வேண்டும். வட்டத்திலிருந்து சற்று தூரமாக விளையாடுபவர்கள் எல்லோரும் நின்றுகொள்ள வேண்டும். வட்டத்திற்கும், விளையாடுபவர்களுக்கும் நடுவே மூன்று போட்டியாளர்களும் நின்றுகொள்வார்கள்.

மூன்று போட்டியாளர்கள் : 'சொல்லப்போறோம், சொல்லப்போறோம்... எழுத்து சொல்லப்போறோம்..!" என்று சொல்ல,

மற்றக் குழந்தைகள் : 'நீங்க சொல்லப்போற எழுத்துக்கு விடை சொல்லப்போறோம்" என்று எதிர் பதிலை சொல்வார்கள்.

மூன்று போட்டியாளர்களில் யாராவது ஒருவர், ஏதாவது ஓர் எழுத்தைச் சொல்வார்.

உதாரணமாக, 'மு" என்ற எழுத்தை சொல்லிவிட்டால், உடனே விளையாட்டில் உள்ளவர்கள் ஆளுக்கொரு 'மு" என்ற எழுத்தில் தொடங்கும் ஏதாவது ஒரு பொருளின் பெயரை சொல்ல வேண்டும்.

'முறுக்கு", 'முள்ளங்கி", 'முட்டைகோஸ்", 'முந்திரி" என ஒவ்வொருவரும் ஒரு பொருளின் பெயரை சொல்ல வேண்டும். அப்படி சொல்லிவிட்டு, வட்டத்துக்குள் போய் நின்றுகொள்ளலாம்.

பொருளின் பெயரேதும் சொல்லாமல் நிற்பவர்களை பிடிக்க போட்டியாளர்களில் இருவர் துரத்திச் செல்வார்கள்;.

மூன்றாவது போட்டியாளர், பொருளின் பெயரை சொல்லாதவர்கள் யாரும் வட்டத்தின் அருகே வராதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.

போட்டியாளர்கள் சொல்லும் எழுத்தில் பெயரை சொல்லாதவர்கள், வட்டத்துக்கு பாதுகாப்பாக நிற்கும் போட்டியாளரை ஏமாற்றிவிட்டு, வட்டத்துக்கு அருகே வருவார்கள்.

அப்போது, வட்டத்துக்குள் இருப்பவர்களின் கையில் அடித்து 'பாஸ்" எனச் சொல்லிவிட்டு வட்டத்துக்குள் சென்றுவிடலாம். இப்படி செய்தால் அனைவரும் பாஸ்.

போட்டியாளர்கள் சொல்லும் எழுத்தில் பெயரை சொல்லாதவர்கள், வட்டத்துக்குள் இருப்பவர்களின் கையை தொட்டு பாஸ் சொல்லாத வண்ணம் அவர்களை பிடிக்க (தொட) வேண்டும். அவ்வாறு தொட்டுவிட்டால் அவர்கள் 'அவுட்".

போட்டியாளர்கள் முதலில் எந்த மூன்று பேரை தொடுகிறார்களோ, அவர்கள் அடுத்த போட்டியாளர்களாக மாறிவிடுவார்கள்.

பலன்கள் :

புது புது வார்த்தைகளை கற்றுக்கொள்ளலாம்.

குழு ஒற்றுமை மேம்படும்.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக