இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பிரேசில் நாட்டை சேர்ந்த கிளாவினா டா சில்வா என்பவர் சிறையிலிருந்து
தப்பிப்பதற்காகத் தனது மகள் போல கச்சிதமாக வேடமிட்டு சிறையிலிருந்து தப்பிக்க
முயற்சி செய்திருக்கிறார். சிறைக்குள் பெண் வேடமிட்டு வெளியேற முயன்ற கிளாவினா டா
சில்வாவின் வீடியோ பதிவு தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
போதைப் பொருள் கடத்தல் குழு தலைவன் சில்வா
போதைப் பொருள் கடத்தல் குழு தலைவன் சில்வா
கிளாவினா டா சில்வா, பிரேசிலில் போதைப் பொருள் கடத்தல் செய்து
வந்திருக்கிறார். சட்ட விரோதமாகப் போதைப் பொருள் கடத்தல் செய்ததற்காக அந்நாட்டு
போலீசாரால் அவரை வலை வீசி தேடபட்டு வந்திருக்கிறார். பல நாட்களாக போலீசார் கையில்
சிக்காமல் தலைமறைவாக போதை பொருட்களை கடத்தல் செய்திருக்கிறார்.
மிரட்டி போதைப் பொருள் கடத்தல்
மிரட்டி போதைப் பொருள் கடத்தல்
போதைப் பொருள் விற்பதே
குற்றம், அதிலும் கிளாவினா டா சில்வா கடலோர கிராம மக்களை மிரட்டி அவர்களையும் போதை
பழக்கத்திற்கு பழக்கியிருக்கிறார். இன்னும் சிலரை மிரட்டி போதைப் பொருள்
கடத்தலுக்குச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
தப்பித்துச் செல்ல திட்டம்
தப்பித்துச் செல்ல திட்டம்
போதைப் பொருள் கடத்தல் போலீசாரால், கிளாவினா டா சில்வா கைது
செய்யப்பட்டு அண்மையில் தான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அவருக்கு
எப்படியாவது சிறையை விட்டுத் தப்பித்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம்
எழுந்துள்ளது.
சிறைக்குள் முகமூடி
சிறைக்குள் முகமூடி
சிறையிலிருந்து தப்பிப்பதற்கு அவரின் மகளைப் போல வேடமிட்டு
அவர் சிறைக்கு வரும் நாளில் தப்பித்துச் செல்ல திட்டம் தீட்டியுள்ளார். கிளாவினா
டா சில்வாவிற்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி சிறைக்குள் முகமூடி, பெண்களின்
ஆடை, தலை சவுரி என அனைத்தையும் வரவழைத்துள்ளார்.
பெண் வேடமிட்டு முரட்டு அம்பாளை நடை
பெண் வேடமிட்டு முரட்டு அம்பாளை நடை
அவரை காண அவர் மகள் சிறைக்கு வந்த நேரத்தில் கிளாவினா டா சில்வா
அவரை போலவே பெண் வேடமிட்டுத் தப்பித்துச் செல்ல முயன்றிருக்கிறார். வேடம் என்னவோ
பக்காவாக தான் போட்டிருக்கிறார், ஆனால் பெண் வேடமிட்டு முரட்டு அம்பாளை நடை
நடந்ததால் போலீசார் சந்தேகப்பட்டு அவரை பிடித்து விசாரித்துள்ளனர்.
வீடியோ வைரல்
வீடியோ வைரல்
சிறையிலிருந்து தப்பிக்கப் பெண் வேடமிட்ட கிளாவினா டாவை
போலீசார் கைது செய்ததும், அவர் அணிந்திருந்த வேடத்தைக் கலைக்கச் செய்ததும் வீடியோ
பதிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளம்
முழுதும் வைரல் ஆகிவருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக