இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
20 நாட்கள் பேட்டரி திறன் உள்பட பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய Amazfit Verge Lite ஸ்மார்ட் வாட்சை Huami நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.
Xiaomi நிறுவனத்தின் கீழ் இயங்கிவரும் Huami நிறுவனத்தின் Amazfit Verge Lite ஸ்மார்ட் வாட்ச் தற்போது ஃபிள்ப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை 6,999 ரூபாயாகும்.
இந்த ஸ்மார்ட் வாட்சில் 1.3 இஞ்ச் AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இது Corning Gorilla Glass 3 மற்றும் anti-fingerprint coating திறன்களை பெற்றுள்ளது. இந்த வாட்சின் அணியக்கூடிய பகுதி silicone மற்றும் polycarbonate கலவையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் IP68 தரத்திலானது என்பதால் தண்ணீர் மற்றும் தூசி உட்புகாது. இது ஆண்ட்ராய்ட் 4.4 அல்லது ஐஓஎஸ் 9.0 அதற்குமேல் பதிப்புகளை கொண்ட இயங்குதளங்களை சப்போர்ட் செய்கிறது.
24 hours heart rate monitor மற்றும் outdoor running, walking, indoor cycling, exercise, treadmill, outdoor cycling, elliptical training போன்ற 7 வித உடற்பயிற்சி நடவடிக்கைகளை கண்காணிக்கும் வசதி இதில் உள்ளது.
ஜி.பி.எஸ், புளூடூத் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள், 4 ஜிபி ஆன்போர்ட் ஸ்டோரேஜ் வசதி போன்றவையும் இடம்பெற்றுள்ளன. இதில் உள்ள 390 mAh li-polymer பேட்டரி 2.5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடுகிறது. இதன் மூலம் 20 நாட்கள் இந்த ஸ்மார்ட் வாட்சை பயன்படுத்த இயலும் என்பது அசர வைப்பதாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக