இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இறைச்சி,
முட்டையைப் போல் புரதச் சத்தும் அதிக அளவில் நிறைந்துள்ளது.
பயறு வகைகளை முளைக் கட்டி
சப்பிடுவதில் இருக்கும் சத்து வேறெதிலும் இருக்க முடியாது என்பார்கள். அதில்
ஒன்றுதான் பச்சைப் பயறு. இதில் இறைச்சி, முட்டையைப் போல் புரதச் சத்து அதிக அளவில்
நிறைந்துள்ளது. இது தவிர பல ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. எனவே இதை அப்படியே
சாப்பிடுவது அலுத்துப்போனால் இப்படி தோசையாக செய்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கும்
கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்
- பச்சை பயறு - 1 கப்
- வெங்காயம் - 1
- பச்சரிசி மாவு - 1 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- இஞ்சி - சிறிதளவு
- பச்சை மிளகாய் - காரத்திற்கு ஏற்ப
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
பச்சை பயறை முதல் நாள் இரவே நன்குக் கழுவி ஊற வைக்கவும். மறுநாள் காலை ஊறிய பயறுடன் பச்சை மிளகாய், சீரகம், இஞ்சி மற்றும் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த மாவில் பச்சரிசி மாவையும் சேர்த்துக்கொள்ளவும்.
தற்போது மாவை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அதை மாவில் கலந்தும் தோசையாக ஊற்றலாம் அல்லது தோசை ஊற்றிய பின் அதன் மேல் தூவினாலும் பரவாயில்லை.
தற்போது தவாவை தோசையாக ஊற்றி அதன் மேல் வெங்காயத்தை தூவி இரண்டு புறமும் பதமாக புரட்டிப்போட்டு எடுங்கள்.
சுவையான தோசை தயார். இதற்கு எந்த சட்னியும் பொருத்தமாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக