இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பொதுவாக சிவராத்திரி விழா என்றால் சிவன் கோவிலும், நவராத்திரி என்றால் அம்மன் கோவிலும் நினைவிற்கு வரும். ஆனால், சக்தியின்றி சிவன் இல்லை என்ற அடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டம் சத்திரம் கிராமத்தில் 64 பரிவார தெய்வங்களுடன் கொலு வீற்றுள்ள காமாட்சியம்மன் கோவிலின் சிறப்புகள் பற்றி தெரிந்துக் கொள்வோம்.மூலவர் : காமாட்சியம்மன்
பழமை : 500 வருடங்களுக்குள்
தல வரலாறு :
சிதம்பரம் அருகே உள்ள நல்லினம் கிராமத்தில், சில நூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு பூசாரி குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோவிலில் வசித்து வந்தார். பின்பு புகுந்த வீட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த பெண் அங்கிருந்து கைக்குழந்தையாக இருக்கும் மகனையும் தூக்கிக்கொண்டு தான் வழிபட்ட காமாட்சி அம்மன் திருவுருவத்துடன் வெளியேறி, தன் உடன்பிறந்தவர்கள் வசித்த காளையார் கோவிலுக்கு வந்தாள்.
அங்குள்ள சில குடுகுடுப்பைக்காரர்கள் அவளை பாதுகாப்பாக ஊருக்குள் அழைத்து வந்தார்கள். பத்து வருடங்களுக்கு பிறகு அவள் மகன் விளையாடுவதற்காக தாயிடம் உடுக்கு ஒன்று வாங்கித் தரும்படி கேட்டான். அம்மாவும் மகனுக்கு அதை அன்புடன் வாங்கிக் கொடுத்தாள். அதை அடித்துக் கொண்டே சிறுவன் விளையாடிய போது, வீட்டில் சிலையாய் இருந்த அன்னை காமாட்சி ரசித்துக் கொண்டிருந்தாள்.
அதற்கு பரிசாக அக்குழந்தை உடுக்கடித்தபடியே எது சொன்னாலும், பலிக்கும் பாக்கியத்தை அவனுக்குக் கொடுத்தாள். அச்சமயம் மன்னரின் மனைவிக்கு நோய் ஏற்பட்டது. அரண்மனை வைத்தியர்கள் எவ்வளவு முயன்றும், நோயை தீர்க்க முடியவில்லை. உடனே அந்த சிறுவன் அரசனிடம் சென்று, காமாட்சியின் அருளுடன் நோய்க்கான காரணத்தையும், அது தீர்வதற்கான வழியையும் சொன்னான். நோயும் குணமானது.
மகிழ்ச்சி அடைந்த மன்னன், சிறுவனிடம் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்ட போது, தனக்கு ஓர் உடுக்கு பரிசாகத் தர வேண்டும் என்று கேட்டான். அவ்வாறே மன்னரும் செய்தார். காமாட்சியின் அருளால் குறி சொல்லி வந்த அச்சிறுவனின் மரபில் வந்த நான்கு பேர், அவனது அன்னை வணங்கி வந்த காமாட்சிக்கு பிற்காலத்தில் புதுக்கோட்டையில் கோவில் எழுப்பினர்.
தல பெருமை :
இறைவனின் அருள் வடிவாகிய சக்தியாகிய காமாட்சியம்மன், உயிருள்ள பெண் போல இங்கு அலங்கார கோலத்தில் காட்சியளிக்கிறாள். இறைவனின் அருள் வடிவாக இருப்பவளே சக்தியாகும். அம்மன் கோவில்களில் நவராத்திரியே சிறப்பான ஒன்றாகும். ஆனால், சக்தியின்றி சிவன் இல்லை என்ற அடிப்படையில் இங்கு சிவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பிராத்தனை :
இக்கோவிலில் திருமணம் நடக்க வேண்டியும், குழந்தைப்பேறு வேண்டும் என்றும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடனை செய்வார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக