இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கிராமப்புறத்தில் விளையாடும் ஒவ்வொரு விளையாட்டிற்கும் ஒவ்வொரு தனிச்சிறப்புகள் உள்ளன. கிராமத்தில் உள்ள குழந்தைகள் ஒன்றுகூடி மகிழ்ச்சியுடன் விளையாடும்போது அதை காண கண்கோடி வேண்டும்.
குழுவாக விளையாடினாலும் சில விளையாட்டுகளில் ஒவ்வொரு குழந்தையும் தனித்தனியாக திறமையை காட்ட முடியும். அப்படி ஒரு விளையாட்டுதான் நொண்டி.
எத்தனை பேர் விளையாடலாம்?
இதில் எத்தனை பேர் வேண்டுமானாலும் கலந்துக்கொள்ளலாம். இரு அணிகளாக பிரிந்து விளையாட வேண்டும்.
எப்படி விளையாடுவது?
முதலில் வட்டம் வரைந்து கொள்ள வேண்டும். இதுதான் இவ்விளையாட்டின் எல்லைக்கோடு.
முதல் அணியினர் வட்டத்தினுள் ஓடுவார்கள். இரண்டாம் அணியினர் ஒவ்வொருவராக வட்டத்தினுள் நொண்டியத்து சென்று முதல் அணியினரை தொட வேண்டும்.
அப்படித் துரத்திச் செல்லும்போது, நொண்டியடிப்பவர் தடுமாறி, காலை தரையில் ஊன்றிவிட்டால் அவர் 'அவுட்". உடனே அவர் வெளியே செல்ல வேண்டியதுதான். பின்னர், அந்த குழுவிலிருந்து வேறொருவர் உள்ளே வந்து நொண்டியடித்தபடி, உள்ளே இருப்பவர்களை தொட முயற்சிக்கலாம்.
நொண்டியடிப்பவர் தொட்டுவிட்டாலோ, தொட வருபவரிடமிருந்து தப்பி ஓடுபவர் எல்லைக்கோட்டை தெரியாமல் காலால் மிதித்துவிட்டாலோ அவரும் 'அவுட்".
இப்படியாக, வெளிவட்டத்தில் இருப்பவர்கள் ஒவ்வொருவராக எல்லைக்கோட்டுக்குள் சென்று, அவர்களை தொடவேண்டும். எல்லோரையும் 'அவுட்" செய்துவிட்டால், வெளியே இருக்கும் குழுவே வெற்றி பெற்ற குழு.
வெளியே இருக்கும் குழுவினர் அனைவரும் நொண்டி வந்தும், உள்ளே இருப்பவர்கள் எல்லோரும் அவுட்டாகாமல் இருந்தால், உள்ளே இருக்கும் குழுவே வெற்றி பெற்ற குழு.
பலன்கள் :
குழந்தைகளுக்கு நல்ல உடற்பயிற்சி கிடைக்கும்.
புத்துணர்ச்சியை அளிக்கும்.
சோம்பேறித்தனத்தை குறைக்கும்.
கால்களுக்கு இடையே ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது.
தன்னம்பிக்கையையும் அதிகரிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக