இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
புகலூர் என்ற ஊரில் அனிதா என்ற இளம்பெண் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் தினமும் வெகுதொலைவில் இருக்கும் கிணற்றிலிருந்து நீர் கொண்டு வருவாள். கிணறு வெகுதொலைவில் இருந்ததால் ஒரு நீண்ட கொம்பின் இரு முனைகளிலும் குடத்தைக் கட்டி அதை தோளில் வைத்துத் தூக்கிக் கொண்டு வருவாள்.
சிறிது நாள் கழித்து அந்த இரண்டு குடங்களில் ஒன்று ஓட்டையாகி விட்டது. அதனால் அந்த குடத்தில் உள்ள பாதி நீர், வரும் வழியெங்கும் சிந்திக் கொண்டே இருந்தது. வீட்டிற்கு வந்து பார்த்தால் அந்தக் குடத்தில் பாதி நீர்தான் இருக்கும்.
ஒருநாள் நீர் நிறைந்த குடத்தின் அருகில் பாதி நீர் இருந்த குடம் இருந்தது. அப்போது பாதி நீர் இருந்த குடத்தைப் பார்த்து அந்த நீர் நிறைந்த குடம், ஐயோ! பாவம் உன்னால் நிறைய நீர் கொண்டு வர முடியவில்லை. ஆனால், என்னைப் பார். நான் அந்த எஜமானிக்கு எவ்வளவு நீர் கொண்டு வருகிறேன் என்று கர்வமாகப் பேசி தினமும் ஏளனம் செய்தது.
அதற்கு அந்த ஓட்டைக் குடம் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக சில நாட்கள் வரை பொறுமையாக இருந்தது. நாம் ஓட்டையாகிவிட்ட போதும் எஜமானி ஏன் நம்மை தூக்கி வருகிறாள் என்று திகைத்தபடி இருந்தது.
ஒருநாள் மனம் பொறுக்காமல் அந்த ஓட்டைக் குடம், அனிதாவிடம்! அம்மா, என்னால் குடம் நிறையத் தண்ணீர் கொண்டு வர முடியவில்லை. அதனால் என்னை உடைத்துவிட்டு வேறு குடத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்றது.
அதற்கு அனிதா புன்சிரிப்புடன், உன்னால் எனக்கு பயன் குறைவு என்றுதானே நீ நினைக்கிறாய். ஆனால், அப்படியெல்லாம் இல்லை, இதோ பார்! கிணற்றிலிருந்து வீட்டிற்கு வரும் வரை பூக்களாக இருக்கிறதே அதைப் பார்த்தாயா?
உன்னிடமிருந்து சிந்தும் தண்ணீர் விழும் இடத்தில்தான் நான் பூக்களின் விதைகளைப் போட்டேன். அதுதான் வழியெங்கும் பூக்களாகச் சிரித்து நம்மை மகிழ்விக்கின்றன.
உன்னால் ஏதும் பயனில்லையென்று வருந்தாதே என்றாள். அதைக்கேட்டு அந்த ஓட்டைக் குடம், நம்மால் ஏதோ ஒரு பயன் இருக்கிறது என்று புரிந்துக்கொண்டு நிம்மதி அடைந்தது. அதைக்கேட்ட நல்ல குடமும், ஓட்டைக் குடத்தை பார்த்து நட்புடன் சிரித்தது.
நீதி :
இறைவனின் படைப்பில் பயனற்றது என்பது எதுவுமில்லை. அதைப் புரிந்துக்கொண்டு செயல்பட்டால் வாழ்க்கையில் முன்னேறலாம்.
இறைவன் படைப்பில் ஒவ்வொரு உயிர்க்கும் ஒவ்வொரு தனித்தன்மை உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக