இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கோவில்களில் நடக்கும் சில அதிசய நிகழ்விற்கு விஞ்ஞானத்தால் கூட இதுவரை பதில் கூற முடியவில்லை என்பதே உண்மை. அந்த வகையில் அவ்வப்போது வௌ;வேறு நிறங்களில் மாறும் ஒரு அதிசய கோவில் குளத்தை பற்றி பார்ப்போம்...
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிலிருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் காணப்படும் இடம் கீர் பவானி கோவில். இக்கோவிலை சுற்றியுள்ள மரங்களும், சுனையும் பார்ப்பவரை கவர்ந்திழுக்கும்.
இக்கோவிலில் பக்தர்கள் காணிக்கை அளிக்கும் கீர் என்ற இனிப்பு பதார்த்தத்தையும், பாலையும் கொண்டு இக்கோவில் இப்பெயரை பெற்றது. இந்த கோவிலில் பவானி அம்மன் சிவனோடு அருள்பாலிக்கிறார்.
இந்த கோவிலில் உள்ள குளத்தின் நீரில் பக்தர்கள் அபிஷேகம் செய்வது வழக்கம். இந்த குளத்தில் இருக்கும் நீரானது பச்சை, இளஞ்சிவப்பு, கறுப்பு, நீலம் என பல்வேறு நிறங்களில் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கிறது.
எந்த நிறத்தில் நீர் மாறினாலும் பிரச்சனை இல்லை. ஆனால் குளத்தின் நீர் கறுப்பு நிறத்தில் மட்டும் மாறவே கூடாது என்கிறார்கள். குளத்தின் நீர் கறுப்பு நிறத்தில் மாறினால் அது அழிவிற்கான அறிகுறியாம்.
ஆகையால், நீர் கறுப்பு நிறத்தில் மாறும் அறிகுறி தெரிந்தாலே சுவாமிக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்படுமாம். எவ்வளவு பெரிய ஆபத்தையும் முன்கூட்டியே உணர்த்தும் ஒரு அதிசய குளமாகவே இது பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக