இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
உலகையே ஆட்சி செய்யும் அன்னை பார்வதி,
அங்காளம்மனாக அவதாரம் எடுத்து திருப்பூர் அருகே முத்தனம் பாளையத்தில் ஆட்சி செய்து
வருகிறாள். திருவண்ணாமலை அருகே உள்ள தாய்வீடான மேல்மலையனூரிலிருந்து பக்தர்களுக்கு
அருள்பாலிப்பதற்காக இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளாள்.
மூலவர் : அங்காளம்மன்.
தல விருட்சம் : வேம்பு.
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்.
ஊர் : முத்தனம் பாளையம்.
மாவட்டம் : திருப்பூர்.
தல
வரலாறு :
இப்போது கோவில் அமைந்துள்ள இடத்தில் சுமார்
800 வருடங்களுக்கு முன் புதர்கள் மண்டிக்கிடந்த காடாக இருந்தது. இந்த காட்டிற்கு
அருகிலிருந்த கிராமத்தார்களின் ஆடு, மாடு மேய்ச்சலுக்கு வரும். அவ்வாறு
மேய்ச்சலுக்கு வரும் ஆடு, மாடுகளில், அருகிலிருக்கும் மணியம்பாளையத்தை சேர்ந்த பசு
ஒன்று, புற்று வடிவில் சுயம்புவாக எழுந்திருக்கும் கருநாகரூபிணிக்கு தானாக பால்
சுரந்து கொடுத்து விட்டு வந்து விடும்.
இதனால் தான் ஈன்ற கன்றுக்கு கூட பால் இல்லாத
நிலை ஏற்பட்டது. இதையறிந்த பசுவின் சொந்தக்காரர் மாடு மேய்ப்பவனை கண்டிக்கிறார்.
அத்துடன் பசுவையும் கண்காணிக்கிறார். அப்போது பசுவானது சுயம்புவுக்கு தானாக பால்
சுரப்பதை நேரில் கண்டார். அதே போல் அன்று இரவே வேறு ஒரு பக்தரின் கனவில்
அங்காளம்மன் தோன்றி, எனது பக்தர்கள் இங்கிருந்து மேல்மலையனூர் வந்து என்னை
தரிசிக்க நீண்ட தூரம் பயணம் செய்து, பல சிரமங்களை சந்திக்கிறார்கள். எனவே கொங்கு
மண்டலமான இப்பகுதியில் பசு பால் சுரந்த இடத்தில் சுயம்புவாக புற்று வடிவில்
எழுந்தருளியுள்ளேன், என கூறினாள்.
நடந்த இச்சம்பவங்களுக்காக புற்று
எழுந்தருளியிருக்கும் பெருமனை மாடகுல கவுண்டர்களுக்கு சொந்தமான பூமியை,
மணியம்பாளையம் ஓதாள குலக்கவுண்டர்கள் வாங்கி அவ்விடத்தில் சுயம்புவுடன் உள்ள
அங்காளம்மனுக்கு கோவில் கட்டி வழிபட்டார்கள். ஏராளமான குலத்தை சேர்ந்த பல லட்சம்
மக்களுக்கு அங்காள பரமேஸ்வரி குலதெய்வமாக விளங்கி காத்து வருகிறாள்.
தல
சிறப்பு :
1000 வருடங்களுக்கு முன் பழமையானது.
அங்காளம்மனின் அவதார ஸ்தலமான மேல்மலையனூரில்
அம்மனுக்கு முன்புறம் பிரம்மாண்டமான புற்று அமைந்துள்ளது. அதே போல் இத்தலத்தில்
மூலஸ்தானத்தில் மூலவருக்கு வலது பக்கம் சுயம்புவாக புற்று அமைந்துள்ளது.
பஞ்ச விநாயகர்களையும் தரிசனம் செய்தால்
துன்பங்கள் பஞ்சாய் பறக்கும் என்பது ஐதீகம். குழந்தையில்லாத பெண்கள் இந்த கணபதியை
வழிபட்டால் குழந்தை செல்வம் கிடைக்கும் என்பது கமலகிரிப்புலவரின் அருள்
வாக்காகும்.
பிராத்தனை
:
திருமணத் தடை, குடும்ப பிரச்சனை, செல்வ வளம்
விரும்புபவோர், தீராத நோய் உள்ளவர்கள், சர்ப்பம் மற்றும் பிற தோஷம் உள்ளவர்கள்,
குழந்தையில்லாத பெண்கள் குழந்தை செல்வம் பெறவும் அங்காளம்மனை மனதார வழிபட்டு
வந்தால் வேண்டியது கிடைக்கும்.
அங்காளம்மனை குல தெய்வமாக வழிபடுவர்கள்
தங்களது முதல் குழந்தைக்கு முத்தம்மாள், முத்துச்சாமி என பெயர் சூட்டுகிறார்கள்.
அம்மனின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் தலைக்கட்டு பொங்கல் வைத்து, முடி
காணிக்கை செலுத்தி, காது குத்தி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்துகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக