இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
வீரா என்றால் 'வீரன்' என்று பொருள். அதாவது வீராசனாவை தொடர்ந்து செய்து வர தைரியமும், துணிவும் ஏற்படும். இது சமதரையில் அமரும் முறையாகும். பத்மாசனம் செய்ய முடியாதவர்களும் பத்மாசனம் செய்ய சிரமப்படுவோரும் வீராசனம் செய்யலாம்.
செய்முறை:
முதலில் தரையில் மண்டியிட்டு உட்கார வேண்டும்.
முழங்கால்களுக்கு இடையே இடைவெளி இல்லாமல் சேர்ந்து இருக்க வேண்டும்.
உங்களது பின்புறமானது தரையில் பதிந்து இருக்க வேண்டும். கால்கள் இரண்டையும் தொடைகளுக்கு வெளியே கொண்டு வர வேண்டும்.
உள்ளங்கைகளை பாதங்களின் மீது வைக்க வேண்டும்.
சுவாசமானது இயல்பாக இருக்க வேண்டும்.
இதே நிலையில் சுமார் அரை நிமிடங்களாவது இருக்க வேண்டும். பின்னர் மெதுவாக கால்களை நீட்டி இயல்பு நிலைக்கு வர வேண்டும்.
பலன்கள்:
மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
தட்டைப்பாதம் குணமாகும். (Flat Feet)
தொடர்ந்து செய்து வர பாதத்தில் உள்ள பித்த வெடிப்புகள் சரியாகும்.
இந்த ஆசனத்தை சாப்பிட்ட பிறகும் செய்யலாம். வயிற்றின் கனம் குறைந்து லேசான உணர்வு கிடைக்கும்.
இடுப்பு பலப்படும்.
சுறுசுறுப்போடு இருக்கலாம்.
இரத்தம் நன்கு சுத்திகரிக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக