இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
காகம் எந்த உணவையும் தனக்கென்று சேர்க்காமல், பிற காகங்களுக்கும் கொடுத்து பகிர்ந்து உண்ணும் சிறப்பியல்பை கொண்ட பறவையாகும். நமது அன்றாட வாழ்வில் தினம் காணும் பறவையாக உள்ள காகத்தை இறந்த நம் முன்னோரின் அம்சமாக கருதப்படுகிறது. வாழ்வில் காகத்தினால் ஏற்படும் ஒருசில சகுனங்களை பற்றி காண்போம்.
காகம் கரைவதற்கேற்ற பலன்கள் :
காகம் கிழக்கு நோக்கி கரைந்தால் லாபம் கிட்டும் மற்றும் குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும்.
மேற்கு நோக்கி கரைந்தால் மழை பொழியும் அதுமட்டுமல்லாமல் மேற்கு திசையை நோக்கி காகம் கரைந்தால், மாமிச உணவு, மது வகைகள், நெல் முதலான தானியங்கள், முத்து, பவளம் போன்று கடலில் விளையும் பொருட்கள், உலர்ந்த பழ வகைகள் கிடைக்கும்.
வடக்கு நோக்கி கரைந்தால் ஏதேனும் ஒரு விஷயமாக பயணம் உண்டாகும்.
தெற்கு நோக்கி கரைந்தால் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.
தென்கிழக்கு நோக்கி கரைந்தால் உங்களுக்கு பகையாக இருந்தவர்கள் விலகுவர்.
தென்மேற்கு நோக்கி கரைந்தால் திடீர் பண வரவு ஏற்படும்.
வடகிழக்கு நோக்கி கரைந்தால் தேவையில்லாத பயம் அவ்வப்போது ஏற்படும்.
வடமேற்கு நோக்கி கரைந்தால் அந்தக் குடும்பத்தில் கலகம் ஏற்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக