இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
அர்த்தநாரீஸ்வரர் சிவனும், பார்வதியும்
ஒரே உருவாய் சேர்ந்த அருள்பாலிக்கும் தோற்றமாகும். சிவன் இல்லையேல் சக்தியில்லை.
சக்தி இல்லையேல் சிவனில்லை என்ற விளக்கத்தை அளிக்கும் கூற்றாகவும் அர்த்தநாரீஸ்வரர்
திருவுருவம் விளங்குகிறது.
சிவனின் அவதாரங்களில் அர்த்தநாரீஸ்வரர்
அவதாரம் தனி சிறப்புடையதாகவும், தனித்தன்மை உடையதாகவும் திகழ்கிறது. ஆன்மீக
ரீதியாக மட்டுமின்றி, வாழ்வியல் ரீதியாகவும் கூட, ஆணின்றி பெண்ணும், பெண்ணின்றி
ஆணும் என்ற வாழ்க்கை சாத்தியமற்றது என்பதை விளக்கும் விதமாகவும் திகழ்கிறது
அர்த்தநாரீஸ்வரர் அவதாரம்.
அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயரில்,
அர்த்தம் என்றால் பாதி என்று பொருள்; நாரி என்றால் பெண் என்று பொருள். சிவன் பாதி,
பார்வதி பாதி என்று ஆணுருவம், பெண்ணுருவம் இணைந்து இருப்பதால் தான் அர்த்தநாரி+
ஈஸ்வரர் (சிவன்) என்பது அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயர் கொண்டது.
அர்த்தநாரீஸ்வரர் எனும் பெயர்
மட்டுமின்றி வேறு சில பெயர்களும் இருக்கின்றன.
1) உமையொரு பங்கன்
2) மங்கையொரு பாகன்
3) மாதொரு பாகன், என இந்த மூன்று பெயர்களாலும் கூட அர்த்தநாரீஸ்வரர் அழைக்கப்படுகிறார்.
1) உமையொரு பங்கன்
2) மங்கையொரு பாகன்
3) மாதொரு பாகன், என இந்த மூன்று பெயர்களாலும் கூட அர்த்தநாரீஸ்வரர் அழைக்கப்படுகிறார்.
சிவனின்றி சக்தியில்லை, சக்தியின்றி
சிவனில்லை என்பதை விளக்கும் உருவமாக திகழ்கிறது இந்த அர்த்தநாரீஸ்வரர் உருவம்.
வாழ்வியலில், ஆணின்றி பெண்ணும், பெண்ணின்றி ஆணும் சாத்தியமில்லை இல்லை என்ற
பொருளையும் தருகிறது அர்த்தநாரீஸ்வரர் உருவம்.
அர்த்தநாரீஸ்வரர் உருவ தோற்றத்துடன் பிருங்கி
முனிவரின் கதையும் தொடர்புடையது என்று கூறப்படுகிறது.
பிருங்கி முனிவர் சிவனை மட்டும்
வழிப்பட்டு வந்த தீவிரமான சிவன் பக்தர் ஆவார். கோபமடைந்த இறைவி (பெண் கடவுள்)
தொடர்ந்து தவம் செய்து அர்த்தநாரி வடிவம் பெற்ற போதும் கூட பிருங்கி முனிவர்
இறைவியையும் சேர்த்து வழிப்பட விரும்பாது, வண்டு வடிவத்திலே இறைவன் பகுதியைத்
துளைத்துத் தனிப்படுத்தி வழிப்பட்டு வந்தாராம்.
பிருங்கி முனிவரின் இந்த செயலைக் கண்டு
கோபமடைந்த இறைவி அவரை தன்னிலைப்படுத்தி அவரை வலிவிழந்து போகும்படி சாபமிட்டார்.
இறைவியின் சாபத்தினால் நடக்க முடியாமல்
ஆனார் பிருங்கி முனிவர். வலிவிழந்து போயினும் கூட தன்னிலை மாறாமல் இருந்தார்
பிருங்கி முனிவர். இதனைக் கண்டு சிவன், தன் பக்தனில் நிலையை கண்டு வருந்தி
மூன்றாவது காலை அருளினார் என்றும் கூறப்படுகிறது. இதனால் தான் பிருங்கி முனிவர்
மூன்று கால், மூன்று கையுடன் அமைக்கப்படுவதுண்டு என்றும் சில கூற்றுகள்
கூறுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக