Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

நீரில் நனையும் சிவலிங்கம்..!

 Image result for ஸ்ரீஜம்புகேஸ்வரர்

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


 சில ஆலயங்களைப் பற்றி படிக்கும்போதே, அவை நம்மை ஆச்சரியப்படுத்தக் கூடியதாகவும், பிரமிக்க வைக்க கூடியதாகவும் இருக்கும். அந்த கோவிலுக்கு சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசையும் ஏற்படும். அதுபோல நம்மைஅதிசயக்க வைக்கும் நீரில் நனையும் சிவ லிங்க ஆலயத்தை பற்றிப் பார்ப்போம்.....!

இந்த அருள்மிகு ஸ்ரீஜம்புகேஸ்வரர் கோவில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகிலுள்ள திருவானைக்காவல் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தில் ஜம்புகேஸ்வரரும், அகிலாண்டேஸ்வரியும் அருள்புரிகின்றனர். இக்கோவிலின் கோபுரமும் மிக அழகாக காட்சியளிக்கும்.

இக்கோவில் மூலவர் ஸ்ரீஜம்புகேஸ்வரர் லிங்கத்தைச் சுற்றி எப்பொழுதும் தண்ணீர் ஊற்றிக்கொண்டேயிருக்கும்.

லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும்.

லிங்கம் தண்ணீரில் மூழ்கி மறையாமலிருக்க நீரை அடிக்கடி முகந்து வெளியேற்றிக் கொண்டிருப்பார்கள். இந்த சிவலிங்கத்தை கருவறையின் மேற்குப் பகுதியில் உள்ள சாளரத்தின் வழியாகத் தான் தரிசிப்பார்கள்.

இக்கோவில் முற்றிய கோடையில், காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்பது இதன் சிறப்பாகும்.

ஐப்பசி மாதம் மழைக்காலம் என்பதால், வழக்கத்திற்கு மாறாக கருவறைக்குள் தண்ணீர் அதிகமாக இருக்கும். வைகாசி மாதத்தில் தண்ணீர் ஓரளவிற்கு குறைவாக காணப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!