இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஒரு துறவி கங்கையில் குளித்துவிட்டுக் கரையேறும் போது அக்கரையோரத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், சத்தம் போட்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருந்தனர்.
அதைப் பார்த்த துறவி, தன் சீடர்களிடம் திரும்பி சிரித்துக்கொண்டே ஏன் இந்த மனிதர்கள் கோபத்தில் இருக்கும்போது ஒருவரை ஒருவர் பார்த்து சத்தம்போட்டு சண்டை போடுகிறார்கள் எனக் கேட்டார்.
உடனே சீடர்களில் ஒருவர், கோபத்தில் நாம் அமைதியை இழக்கிறோம். அதனால் மற்றவரைப் பார்த்து சத்தமிடுகிறோம் என்றான்.
துறவி, அச்சீடர்களிடம் அவர்கள் உன்னருகில்தானே இருக்கிறார்கள், நீ சொல்ல வேண்டியதை அவர்களுக்கு மட்டும் கேட்கும் விதமாக எடுத்துரைக்கலாமே. ஏன் மற்றவர்களுக்கும் கேட்கும்படி சத்தமாக கூறுகிறாய் என்றார்.
சிறிது நேரத்திற்குப் பின் ஒவ்வொரு சீடரும் ஒரு காரணத்தைக் கூறினார்கள். ஆனால் துறவிக்கோ சீடர்கள் கூறிய பதிலில் சிறிதும் உடன்பாடில்லை.
கடைசியாக துறவியே பதிலைக் கூறினார். என்னவென்றால், எப்பொழுது இரண்டு மனிதர்கள், ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்கிறார்களோ, அப்பொழுது அவர்களின் மனது இரண்டும் வெகு தொலைவுக்குச் சென்றுவிடுகிறது. எனவே தூரத்தில் இருக்கும் மனதுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே, சத்தமிட்டு பேசுகிறார்கள்.
மனது எவ்வளவு தூரம் விலகி இருக்கிறதோ, அவ்வளவு தூரம் இவர்கள் தங்கள் ஆற்றலை உபயோகித்து சத்தம்போட வேண்டியிருக்கும். அப்பொழுது தானே தங்கள் கருத்து வெகு தொலைவில் இருக்கும் மனதைச் சென்றடையும் என்றார்.
ஆனால் இதுவே, இரண்டு மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பாக இருக்கும்போது என்ன நடக்கிறது? அவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் சத்தமிடுவதில்லை. அமைதியாகவும், அன்பான முறையிலும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவார்கள். காரணம் என்னவென்றால், அவர்களின் மனது இரண்டும் மிக அருகில் இருக்கும். மனதிற்கு இடையேயான தூரம், மிகக் குறைவாக இருக்கும் அல்லது இரண்டு மனதும் ஒன்றோடு ஒன்று இணைந்தே இருக்கும் என்றார்.
இதைவிடவும் அதிகமாக ஒருவர் மீது ஒருவர் அன்பாக இருக்கும் போது என்ன நடக்கும்? அவர்கள் ஒருவருக்கொருவர் சத்தமாக பேச தேவையிருக்காது. அவர்களின் மனது இரண்டும் மௌனமாக பேசுவதில் இருந்தே, அவர்களின் கருத்துக்கள் பரிமாறப்படும்.
துறவி கடைசியாக சீடர்களைப் பார்த்து, அதனால் நீங்கள் ஒருவருடன் ஒருவர் வாதிடும்போது, உங்கள் மனமிரண்டும் தொலைவாகப் போய்விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். மனதின் தொலைவை அதிகப்படுத்தும் வார்த்தைகளை உபயோகப்படுத்தாதீர்கள் என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக