இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
முனையடுவார்
நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவர். சோழநாட்டில் திருநீடூரில் வேளாள குலத்தில்
தோன்றியவர். "அறைகொண்டவேல் நம்பி முனையடுவார்க் கடியேன்” என்று திருத்தொண்டத்
தொகை இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
சிவபெருமான்
திருவடியில் நிறைந்த பேரன்புடையவர்; பகைவர்களைப் போர் முனையில் வென்று அதன் மூலம்
பெற்ற பெரு நிதியங்களைச் சிவனடியார்களுக்கு மனதார கொடுத்த சிவத் தொண்டர். போரில்
பகைவர்களுக்குத் தோற்றவர்கள் தம்மிடம் வந்து துணை வேண்டினால் நடுவு நிலையில்
நின்று அவர்களோடு ஆள்வினையாற் கூலி பேசிக் கொண்டு அவர்களுக்காகப் போர் செய்து
பொருள் ஈட்டிச் சிவனடியார்களுக்குச் சொன்னபடியே நிறையக் கொடுத்து அவர்களை
அறுசுவைக்கறிகளுடன் திருவமுது செய்வித்துக் கொண்டிருந்தார். இப்படியாக வாழ் நாள்
முழுதும் ஈசனை நினைத்து ஈசனுக்காகவும், ஈசனின் அடியவர்களுக்காகவும் வாழ்ந்து
வந்தார் இறுதியில் ஈசனின் அருளால் முக்தி அடைந்தார். இதுவே முனையடுவார் நாயனார்
வரலாறு என்று அறிக.
மேற்கண்ட
கதையில் காணப்படும் நுண்பொருள்:-
1.
போர் முனையிற் கொல்லும் தொழிலே புரினும் அடியர்க்கு அமுதளித்தல் பெரும்பேறாம்.
முனையடுவார்
நாயனார் குருபூசை நாள்; பங்குனிப் பூசம் அன்று கொண்டாடப் படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக