இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வளரும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் குடமிளகாய் சிக்கன் மசாலா
தேவையான பொருள்கள்:
- கோழிக்கறி அரை கிலோ
- இஞ்சி, பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி
- மிளகாய்த் தூள் இரண்டு தேக்கரண்டி
- குட மிளகாய் நான்கு
- பெரிய வெங்காயம் நான்கு
- சோயா சாஸ் அரை தேக்கரண்டி
- எலுமிச்சம் பழச் சாறு இரண்டு தேக்கரண்டி
- மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி
- கார்ன் ஃ பிளார் மாவு இரண்டு மேசைக்கரண்டி
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை:
- குட மிளகாயையும், வெங்காயத்தையும் அரை அங்குல துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- கோழியை துண்டு, துண்டாக வெட்டி, நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் சோயா சாஸ், எலுமிச்சை சாறு, உப்பு, சிக்கன், இஞ்சி, பூண்டு விழுது மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் என அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து அடுப்பில் வைக்கவும்.
- இப்படியாக சிக்கன் நன்கு வேகும் வரையில் அடுப்பில் இருக்க வேண்டும். விரும்பினால் அல்லது தேவைப்பட்டால் ஒரு கை தண்ணீர் தெளிக்கலாம்.
- நன்கு வெந்த மாத்திரத்தில் இறக்கி வைத்து விட்டு ஒரு கனமான வாணலியில் எண்ணெய்யை விட்டு வெங்காயத்தையும், குட மிளகாயையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
- குடமிளகாய் மற்றும் வெங்காயம் ஆகிய இவை இரண்டும் நன்கு வதங்கிய மாத்திரத்தில் வேகவைத்த சிக்கனை கொட்டி நன்கு கிளறவும்.
- இப்போது மேலும் கார்ன் ஃ பிளார் மாவைத் தூவி நன்கு கிளறி இறக்கவும். இதனை சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
- சிக்கனில் ஜிங்க் அதிகம் உள்ளதால், அது சரியான நேரத்தில் பசியை உண்டாக்கும். மேலும் இதனை சூப் செய்து குடித்தால் மிகவும் நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக