இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
நெற்றி முதல் கால் விரல்கள் வரை உள்ள பகுதிகள் நன்றாக செயல்பட உதவும் ஆசனம் பூர்வத்தாசனம். கண் பார்வை நன்கு கூர்மையடைய உதவும் ஆசனம்.
செய்முறை:
- முதலில் தரையில் கால்கள் இரண்டையும் நீட்டி நேராக அமரவும்.
- பின்னர், கைகள் இரண்டையும் பின் பக்கமாக கொண்டு சென்று உள்ளங்கைகளை தரையில் பதியுமாறு செய்ய வேண்டும்.
- உள்ளங்கைகளுக்கு இடையே உள்ள தூரமும் தோள்களுக்கு இடையே உள்ள தூரமும் சமமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
- இதே நிலையில் மூச்சை நன்றாக உள் இழுத்தவாறு, இடுப்பு பகுதியை தரையில் இருந்து எவ்வளவு இயலுமோ அந்த அளவு மேல்நோக்கி உயர்த்த வேண்டும்.
- கால்கள் இரண்டும் வளைய கூடாது. நேராக இருக்க வேண்டும். கால் விரல்கள் தரையை தொட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
- கால் விரல்கள் மற்றும் உள்ளங்கை பகுதி இவை மட்டுமே தரையை தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். மற்ற உடல் பகுதிகள் படத்தில் காட்டியுள்ளவாறு மேல்நோக்கி இருக்க வேண்டும்.
- பின்னர், தலையை மெதுவாக பின்புறமாக தொங்கவிட வேண்டும்.
- சுவாசமானது இயல்பாக இருக்க வேண்டும். இதே நிலையில் சுமார் ஐந்து சுவாசங்கள் அல்லது 20 வினாடிகள் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.
- பின்னர், மெதுவாக மூச்சை வெளி விட்டுக்கொண்டே தரையில் அமர்ந்து இயல்பான நிலைக்கு வரவும்.
- கண் பார்வைத்திறன் அதிகரிக்க மிகச்சிறந்த ஆசனம்.
- முழங்கை மூட்டுகள், மணிக்கட்டுகள், தோள்கள், விரல்கள் இவைகளுக்கு சிறந்த பயிற்சி அளிக்கப்பட்டு வலுப்பெற செய்கிறது.
- மேலும், முன் புறமாக வளைந்து செய்யக்கூடிய அனைத்து ஆசனங்களும் சிறந்த மாற்று ஆசனமாக இது விளங்குகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக