இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சுதந்திர இந்தியா வளரும் வேலையில்
உலகில் இரண்டு நாடுகள் வல்லாதிக்கம் செலுத்தி உலக நாடுகளை இரண்டாகப் பிரித்தது.
அதில் ஒன்று, ஐக்கிய அமெரிக்கா (முதாலிளித்துவத்தை முன் வைத்து உருவானது),
இன்னொன்று சோவியத் ரஷ்யா (தொழிலாளித்துவத்தை முன் வைத்து உருவானது)
எனினும், உலக நாடுகள் இரண்டாகப் பிரிய
இந்தியா மட்டும் புது பொருளாதார கொள்கையை நடைமுறைப்படுத்தியது. அது தான்,
முதலாளித்துவமும் - சமத்துவமும் இணைந்து செயல்படும் கலப்புப் பொருளாதாரம் ஆனது.
அந்த மூன்றாவது அணிக்கு இந்தியாவே
தலைமை தாங்கியது.
அவ்வாறு கலப்பு பொருளாதாரத்தை
கடைபிடிக்க என்ன காரணம் என்றால்....
ஏனைய உலக நாடுகள் ஒரு மொழி, ஒரு மதம்
என்று ஒன்றினைய கூடியது, இந்தியாவில் அது சாத்தியமே இல்லை, 2 ஆயிரம் மொழி, 3000
சாதீகள் 200 க்கும் மேற்பட்ட மத நம்பிக்கைகள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு சூழலை கொண்டது,
முதலாளித்துவமே இருந்தாள்,
சாதி மதத்தில் பின் தங்கி இருக்கும்
மக்கள் மேலும் அடிமை படுத்தப்படுவார்கள், பல அவதிகளுக்கு உள்ளாவார்கள்,
அதே தொழிலாளித்துவம் என்றால்
இந்தியாவில் நில உடைமையாளர்களை நம்பியே விவசாயம் என்ற நிலையில் அது முடங்கும்.
எனவே இந்தியாவிற்கு இரண்டும் வேண்டும் என்று முடிவு செய்து கலப்புப் பொருளாதாரமாக
ஒன்றாக இணைந்தது இந்தியா.
நேருக்கு பின் லால் பகதூர் சாஸ்திரி
பிரதமராக நியமிக்கப்பட்டு இரண்டு வருடத்தில் இறக்க, அவருக்கு பின் இந்திரா காந்தி
பிரதமராக தந்தை கொண்ட தலையிடா கொள்கையை உடைத்து தனிக் கொள்கையை வகுத்தார்.
ஆரம்பத்தில் அமெரிக்காவுடன் கூட்டு வைத்தார். பல நாட்டு முதலீடுகளை ஈர்க்க மானாடு
நடத்தினார். அப்பொழுது இந்திராவை இயக்கிய அன்றைய காங்கிரஸ் தலைவர் கர்ம வீரர்
எச்சரித்தார். இந்தியா விவசாயத்தை மட்டுமே நம்பிய மிகப் பெரும் நாடு, மற்ற நாடுகள்
எந்தப் பக்கம் இழப்பானாலும் பல வழிகளில் அதை ஈடு கட்டும். இந்தியப் பொருளாதாரம்
விவசாயத்தை நம்பி உள்ளது. எனவே இந்தியா, தொழில் துறைக்கு இரண்டாம் இடம் கொடுத்தாலே
போதுமானது என்று கூறினார்.
கர்ம வீரர் கூறியதை இந்திரா கேட்கவில்லை.
அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டால் அதிக அளவு கடன் கொடுப்பான் என்று நம்பினார்.
அமெரிக்காவும் கடன் கொடுக்க முன் வந்தது. ஆனால், மொத்தமாகக் கொடுக்கவில்லை. பிசிரு
பிசிராகக் கொடுத்தது. வியட்நாம் போர் ஏற்படவும் இந்தியாவை பகடை காயாக அமெரிக்கா
பயன்படுத்தியது
இந்திராவுக்கு தெரிய வந்தது. 4 ஆண்டுகளுக்கு முன் இந்தியா
சீனாவிடம் போரில் மரண அடி வாங்கியது. இந்திரா காந்தியும் பிரதமராகி இரண்டே வருடம்
ஆன நிலை நேக்காக அமெரிக்காவை கழட்டி விட்டு ரஷ்யாவுடன் கூட்டணி அமைத்தார், பின்னே
இந்திராவின் அசுர வளர்ச்சி அமெரிக்காவை அல்லோல பட வைத்தது. அமெரிக்கா பாக்கிஸ்தானுடன்
இணைந்து செயல்பட்டு இந்தியாவிற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளிலும் இறங்கியது.
விடுவாரா இந்திரா காந்தி! பாகிஸ்தானை இரண்டாக பிரித்து சிதறடித்தார்.
இந்திராவுக்கு பின் வந்த ராஜீவ் காந்தி
தெற்க்காசிய கூட்டமைப்பபை ஏற்படுத்தினார். இருந்தாலும் தொழில் மோகம் முதலீடுகளை
ஈர்க்கும் மோகம் குறைந்த பாடில்லை, அவரை தொடர்ந்து வி.பி.சிங், ஐ.கே. குஜ்ரால்,
நரசிம்ம ராவ், தேவ கவுடா, வாஜ் பேயி, மன்மோகன் சிங், மோடி உட்பட வெளி நாட்டு
முதலீடுகளை ஈர்க்க பலர் முனைந்தனர். அதற்கு அவர்கள் கொடுத்த விலை இந்தியாவின்
முதுகெழும்பான விவசாய நிலம், சுதந்திர இந்தியாவில் 35 கோடி பேருக்கு 80% விவசாய
நிலமாக இருந்த இந்தியா. 2015 ல் 120 கோடி பேருக்கு 35% முதல் 45% வரையாகக்
குறைந்தது.
இந்த நிலை தொடர்ந்தால்... இப்படியே
சென்றால்.... எங்கே செல்லும் இந்தியா? இன்னும் பத்து இருபது வருடத்தில் எல்லாம்
இறக்குமதி தான்.
சரி, இறக்குமதியான பொருளை வாங்க
வாங்கும் திறன் இருக்குமா என்றால்?
அரபு வளைகுடா நாடுகள் விவசாயமற்றது.
எண்ணெய்களை விற்று இறக்குமதி செய்கிறது. சரி, இந்தியாவில் விவசாயமே மூலாதராம்.
விவசாயத்தை அழித்து விட்டு வேறு நாட்டிடம் இருந்து விளை பொருட்களை விலைக்கு வாங்கினால்
எதை வைத்து வாங்குவீர்?
தொழில் தொடங்குவோம் என்றால் எத்தனை
பேர் எத்தனை தொழில் தொடங்குவீர்? வாங்க ஆள் வேண்டாமா? வாங்கும் சக்தி வேண்டாமா?
எங்கே போய் முடியப்போகிறது இந்தியப்
பொருளாதாரம். ஈசனுக்கே வெளிச்சம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக