இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
நான் பணக்காரனாவேன் எனக்கு எப்போதுமே தெரிந்திருந்தது.
அதைப்பற்றி ஒரு நிமிடம்கூட சந்தேகித்ததாக ஞாபகமில்லை – வாரன் பஃபெட்.
வாரன் பஃபெட் – 2008ல் உலக 1930ல் சாதாரணக் குடும்பத்தில் பிறந்த பஃபெட் தன் வயதுச் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது வியாபாரம் செய்து 11 வயதிலேயே பங்குச் சந்தைக்கு அறிமுகமாகி 17 வயதில் 5 ஆயிரம் டாலர் சம்பாதித்தவர்.
வாரன் பஃபெட் – 2008ல் உலக 1930ல் சாதாரணக் குடும்பத்தில் பிறந்த பஃபெட் தன் வயதுச் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது வியாபாரம் செய்து 11 வயதிலேயே பங்குச் சந்தைக்கு அறிமுகமாகி 17 வயதில் 5 ஆயிரம் டாலர் சம்பாதித்தவர்.
பென் க்ரஹாம்(ben graham)
|
கோடீஸ்வரர்களில்
முதலிடத்தில் இருந்தவர். பில்கேட்ஸினால் இன்று மூன்றாவது இடம். அமெரிக்காவிலுள்ள ஒமஹா நகரில்
பென் க்ரஹாம் என்ற பங்குச்சந்தை நிபுணரைக் குருவாக ஏற்ற ஏகலைவன். 1965ல் பெர்க்ஷ்யர் ஹாத்வே என்ற டெக்ஸ்டைல் கம்பெனியை வாங்கி அதன் தலையெழுத்தோடு அமெரிக்கப் பங்குச் சந்தையின் பிம்பத்தையும் மாற்றியவர். அவரது நிறுவனம் பல துறையில் முதலீடு செய்து அள்ள அள்ள பணம் என்ற ரீதியில் சம்பாதிக்கத் துவங்கி 2008ல் உலகின் முதல் பணக்காரானவர். இவரது நிறுவனத்தின் பங்குகளின் விலை ஏற்ற இறக்கம் அமெரிக்கப் பங்குச்சந்தையின் குறி யீட்டு எண்ணைவிட ஒவ்வொரு நிமிடமும் கவனிக்கப்படுமளவுக்குப் பிரபலமானது. இவர் தன் நிறுவன முதலீட்டாளாருக்கு எழுதும் கடிதத்தினால் அமெரிக்க பங்குச் சந்தையின் போக்கு மாறுவதால் உலகமே உற்றுக் கவனிக்கும் மனிதர் இவர்.
பென் க்ரஹாம் என்ற பங்குச்சந்தை நிபுணரைக் குருவாக ஏற்ற ஏகலைவன். 1965ல் பெர்க்ஷ்யர் ஹாத்வே என்ற டெக்ஸ்டைல் கம்பெனியை வாங்கி அதன் தலையெழுத்தோடு அமெரிக்கப் பங்குச் சந்தையின் பிம்பத்தையும் மாற்றியவர். அவரது நிறுவனம் பல துறையில் முதலீடு செய்து அள்ள அள்ள பணம் என்ற ரீதியில் சம்பாதிக்கத் துவங்கி 2008ல் உலகின் முதல் பணக்காரானவர். இவரது நிறுவனத்தின் பங்குகளின் விலை ஏற்ற இறக்கம் அமெரிக்கப் பங்குச்சந்தையின் குறி யீட்டு எண்ணைவிட ஒவ்வொரு நிமிடமும் கவனிக்கப்படுமளவுக்குப் பிரபலமானது. இவர் தன் நிறுவன முதலீட்டாளாருக்கு எழுதும் கடிதத்தினால் அமெரிக்க பங்குச் சந்தையின் போக்கு மாறுவதால் உலகமே உற்றுக் கவனிக்கும் மனிதர் இவர்.
பணக்காரர்கள் எப்போதும் வரிகட்ட விரும்ப மாட்டார்கள். வரியைக் குறைக்கும் அரசாங்கங்களைத் தான் அவர்களுக்குப் பிடிக்கும். இதுதான் உலகம் முழுவதும் எப்போதும் இருந்து வரும் நியதி. இந்த வார ஆச்சர்யமாகத் திகழ்பவர் உலகப்பெரும் பணக்காரரான வாரன் பஃபெ(ட்). உலகத்தின் மூன்றாம் பெரும் பணக்காரரான வாரன் ஏற்கெனவே தாம் இறப்பதற்கு முன் தம் சொத்தில் பாதியையாவது பொதுநலனுக்கு நன் கொடையாகக் கொடுத்துவிடப் போவதாக அறிவித்திருப்பவர்.
தற்போது அமெரிக்கா கடன் சுமையில் திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், அதைச் சமாளிக்க அமெரிக்க அரசு பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் என்று வாரன் பஃபெட் சொல்லியிருக்கிறார். பணக்காரர்கள் ஏதோ அழிந்து வரும் அபூர்வமான உயிரினம் போலவும் அதைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக விதவிதமான சலுகைகளை அமெரிக்க நாடாளுமன்றம் கொடுத்து வருவதாகவும் அவர் கிண்டல் செய்திருக்கிறார்.
தாம் கட்டிய வரி பெரும் தொகையென்றபோதும், அது தன் வரிவிதிப்புக்கான வருவாயில் வெறும் 17.4 சதவிகிதம் தான் என்றும் வாரன் சொல்லியிருக்கிறார். ஆனால் தம்மிடம் வேலை பார்க்கிற இருபது பேர் 41 சதவிகிதம் வரை வரி செலுத்தியிருப்பதை வாரன் சுட்டிக்காட்டினார்.
மிக அதிக வருமானம் உள்ள நானூறு அமெரிக்கர்கள் 19 வருடங்களுக்கு முன்னால் 29 சதவிகிதம் வரியாகச் செலுத்தினார்கள். இப்போது அவர்கள் வருமானம் ஆறு மடங்கு அதிகமாகிவிட்டது. ஆனால் வரிவிகிதம் குறைந்து 21 சதவிகிதமாகி விட்டது என்கிறார் வாரன். மாதச் சம்பளக்காரர்கள்தான் அதிக வரி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
புதிய வரிவிகிதங்களை
முடிவு செய்யப் போகும் 12 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாரன் ஒரு வேண்டுகோள்
விடுத்திருக்கிறார். “பத்து லட்சம் டாலருக்கு மேல் சம்பாதிக்கும் சுமார் இரண்டரை லட்சம்
குடும்பங்களுக்கும் வரியை உயர்த்துங்கள். ஒரு கோடி டாலருக்கு மேல் சம்பாதிக்கும் சுமார்
8500 பேருக்கும் வரியைக் கூட்டுங்கள். சாதாரண சம்பளக்காரர்களுக்கு வரி ஏற்றாதீர்கள்”
என்று கேட்டிருக்கிறார் வாரன்.
வாரன் பஃபெட்டைப் பற்றி ஒரு சிறுகுறிப்பு:
- அதிகமில்லை வெறும் 31 பில்லியன் டாலர்தான் உலக மக்களின் நலனுக்காக நன்கொடையாக கொடுத்துள்ளார்.
- பில்கேட்ஸ் இவரிடம் பேச அரைமணிநேரம் ஒதுக்கியிருந்தார். பஃபெட் பேச ஆரம்பித்த பின்னர் அந்த உரையாடல் 10 மணி நேரத்திற்கு நீண்டது.
- பஃபெட்டின் சமீபத்திய கோரிக்கை – பணக்காரர்கள் தங்களது செல்வத்தில் பாதியை நன்கொடையாகத் தாருங்கள் என்பதே.
- சி.என்.பி.ஸி தொலைக்காட்சி அவரிடம் எடுத்த பேட்டியின் சாராம்சம் இது.வாரன் பஃபெட் தனது 11ம் வயதில் பங்குச் சந்தையில் தனது முதல் பங்கை வாங்கினாராம்.. ரொம்ப லேட்டாக முதலீடு செய்துவிட்டேன் என இப்போது வருந்துகிறார்.
- பெரியவர்களுக்கு அவர் சொல்வது “குழந்தைகளை முதலீடு செய்ய ஊக்கப்படுத்துங்கள்.”
- தனது 14வது வயதில் வீடுகளுக்கு பேப்பர் போடுவதில் சேமித்த தொகையைக்கொண்டு ஒரு பண்ணைவீட்டை வாங்கினார்.
- அவர் சொல்வது சிறுகச் சிறுகச் சேர்த்தே பல பொருட்களை வாங்கிவிட முடியும்.
- உங்கள் குழந்தைகளை ஏதேனும் ஒரு தொழில் செய்ய ஊக்கப்படுத்துங்கள்.
- வாரன் பஃபெட் வசிப்பது மூன்று படுக்கை அறைகள் கொண்ட ஒரு வீட்டில். அதுவும் அதை அவர் 50 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆனபோது வாங்கியது. அவர் அதில் அவருக்கு வேண்டிய எல்லா வசதியும் இருக்கிறது என்கிறார். வீட்டைச் சுற்றி கோட்டைச் சுவரோ அல்லது வேலியோ கிடையாது. ஒரு பணக்காரர் எப்படிப்பட்ட வீட்டில் இருக்கவேண்டும் என நாம் நினைக்கிறோமோ அதற்கு நேரெதிரான வீட்டில்.
- அவர் சொல்வது உங்களது தேவைக்கு மேல் எதையுமே வாங்காதீர்கள். அதுபோன்றே உங்கள் குழந்தைகளை சிந்திக்கவும் செயல்படவும் வையுங்கள்.
- தனது காரை தானே ஓட்டிச் செல்கிறார். ஓட்டுனர் வைத்துக்கொள்வதில்லை. பாதுகாப்பிற்கும் ஆள் வைத்துக்கொள்வதில்லை.
அவர் சொல்வது “ நீங்க நீங்கதான்” நம்மால
ஓட்ட முடிஞ்சப்போ நமக்கு எதுக்கு டிரைவர்?
- அவர் வெளியூர் செல்ல தனக்கென பிரைவேட் ஜெட் வைத்துக் கொள்வதில்லை. இதென்ன பிரமாதம் என்கிறீர்களா?உலகின் மிகப்பெரிய ஜெட் கம்பெனியின் முதலாளி இவர்.
- அவர் சொல்வது உங்கள் வேலைகளை எவ்வளவு சிக்கனமாக ஆக்கிக்கொள்ள முடியுமோ அப்படி வைத்துக்கொள்ளுங்கள்.
- இவரது கம்பெனியின் பெயர் ”ஹாத்வே பெர்க்ஷையர்” 63 கம்பெனிகளைக் கொண்டது. இவர் அந்தந்த கம்பெனியின் மேலாளர்களுக்கு ஆண்டிற்கு ஒரே ஒருமுறை அடுத்த ஆண்டிற்கான வியாபாரக் குறிக்கோள்களைக் குறித்து கடிதம் எழுதுகிறார். மீட்டிங் போடுவதோ, அவ்வப்போது கூப்பிட்டுப் பேசுவதோ இல்லை
- அவர் சொல்வது சரியான இடத்தில் சரியான ஆளைப் போடுங்கள். திருவள்ளுவர் இதை 2000 வருஷம் முன்னாடியே சொல்லிவிட்டார். இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல் அப்படின்னு.
- அவரது கம்பெனியின் தலைமை செயல் அலுவலர்களுக்கு இரண்டே இரண்டு விதிமுறைகள்தான் கொடுத்துள்ளார்.
1.
விதிமுறை
ஒன்று: உங்கள் பங்காளர்களின் பணத்தை எப்போதும் இழக்காதே
2.
விதிமுறை
இரண்டு : விதிமுறை ஒன்றை மறக்காதே.
- அவர் சொல்வது, ஆட்களுக்கு குறிக்கோள்களைக் கொடுத்துவிடுங்கள். அவர்கள் அதன்மீதே கவனம் வைத்திருக்கிறார்களா என்பதை மட்டும் பாருங்கள்.
- பெரிய மனிதக் கூட்டத்துடன் சேர்ந்திருப்பதில்லை. வீட்டிற்கு வந்ததும் அவரது பொழுதுபோக்கு பாப்கார்னைப் பொரித்துக்கொண்டு தொலைக்காட்சி பார்ப்பதுதான்.
- அவர் சொல்ல வருவது…பெருமை பீற்றிக்கொள்ளாதீர்கள். பெருமைக்காக உங்கள் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்காதீர்கள். நீங்கள் நீங்களாக இருங்கள், உங்களுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள்.
- வாரன் பஃபெட் மொபைல்போன் வைத்துக்கொள்வதில்லை, ஒரு கம்ப்யூட்டர்கூட கிடையாது அவரது அலுவலகத்தில்.
- ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் முதல் பணக்காரர் பில்கேட்ஸ், வாரன் பஃபெட்டைச் சந்திக்க அரை மணி நேரம் ஒதுக்கியிருந்தார். இருவருக்குள்ளும் ஒத்த விஷயங்கள் என எதுவும் கிடையாது என நினைத்துக் கொண்டு. ஆனால் அந்த சந்திப்பு 10 மணி நேரத்திற்கு நீண்டது. சந்திப்பு முடிந்தபோது பில்கேட்ஸ், கிட்டத்தட்ட வாரன் பஃபெட்டின் பக்தனாகிவிட்டார்.
- இளம் வயதினருக்கு வாரன் பஃபெட் சொல்வது. கடன் அட்டைகளிலிருந்து தூர விலகி இருங்கள்.. உங்களையே நீங்கள் முதலீடாக்கி நீங்கள் நினைவில் கொள்ளவேண்டியது
1. பணம் மனிதனை உருவாக்கவில்லை, மனிதன்தான் பணத்தை உருவாக்கினான்.
2. எவ்வளவு எளிமையாய் வாழமுடியுமோ அவ்வளவு எளிமையாய் வாழுங்கள்.
3. மற்றவர்கள் சொல்வதைச் செய்யாதீர்கள், அவர்கள் சொல்வதைக் கேட்டுவிட்டு உங்களுக்குச் சரியெனப்படுவதைச் செய்யுங்கள்.
4. பெரிய கம்பெனியின் தயாரிப்பு என்பதற்காக எதையும் வாங்காதீர்கள். உங்களுக்கு சௌகரியப்படும் பொருட்கள் எங்கு கிடைத்தாலும், எவ்வளவு விலையிலும் வாங்கி அணியுங்கள்.
5. தேவைப்படும் செலவுகளைத் தவிர வேண்டாத செலவுகளைச் செய்யாதீர்கள்…
6. இது உங்கள் வாழ்க்கை, இன்னொருவர் உங்களை ஆள ஏன் வாய்ப்புத்தரவேண்டும்?
மகிழ்ச்சியான மக்களிடம் எல்லா சிறந்தவைகளும் இருக்கவேண்டியதில்லை..அவர்கள்
இருப்பதைக் கொண்டு மகிழ்வுடன் இருக்கிறார்கள்.
எளிமையான மற்றும் புத்திசாலித்தனமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்போம்.
எளிமையான மற்றும் புத்திசாலித்தனமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக