இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கிஷ்கிந்தா
தீம் பார்க் சென்னையிலிருந்து ஏறத்தாழ 35கி.மீ தொலைவிலும், தாம்பரத்திலிருந்து
7கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
கண்ணுக்கினிய
தாவரங்கள், நீரூற்றுக்கள் ஆகியவற்றைக் கொண்டு அலங்காரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தப்
பூங்காவில் அலை குளங்கள், நீர் சவாரிகள், ரோலர் கோஸ்டர், சிறுவர் தொடர்வண்டி
முதலியன உள்ளன. குறிப்பாக சுற்றுலா வரும் குழந்தைகளைக் கவரும் பல்வேறு
பொழுதுப்போக்கு அம்சங்கள் இங்கு உள்ளன.
சிறப்புகள் :
கிஷ்கிந்தா
தீம் பார்க் சென்னையில் உள்ள ஒரு முக்கியமான தனியார் பொழுதுப்போக்கு மையமாகும்.
இங்கு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ரசிக்கக்கூடிய ஏராளமான சவாரி அம்சங்கள்
உள்ளன.
வார
இறுதியில் பொழுதுப்போக்குவதற்காக ஏராளமான மக்கள் இந்த கிஷ்கிந்தாவுக்கு வருகை தருகின்றனர்.
பூங்காவை
போன்ற அழகிய சூழல், இயற்கை அழகு, பொழுதுப்போக்கு சவாரி அம்சங்கள் போன்றவை
நிறைந்துள்ளதால் இந்த பொழுதுப்போக்கு பூங்கா சென்னையில் பிரசித்தமான
பொழுதுப்போக்கு இடமாக அறியப்படுகிறது.
எல்லாத்தரப்பினரும்
விரும்பக்கூடிய அம்சங்கள் இந்த பூங்காவில் நிரம்பியுள்ளன. பம்பர் கார் சவாரி,
பம்பி காட்டெர்பில்லர் சவாரி, விளையாட்டு ரயில் மற்றும் அலை நீச்சல் குளம் போன்றவை
இங்குள்ள சில அம்சங்களாகும்.
ரோலர்
கோஸ்டர், டிவிஸ்டர் போன்ற அதிசாகச சவாரி அமைப்புகளும் இங்கு
அமைக்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு உணவு வகைகள் பரிமாறப்படும் ஒரு உணவு வளாகமும்
இதன் உள்ளேயே இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு சவாரிகளுக்கு தனியாக
கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.
எப்படி செல்வது?
சென்னை
மற்றும் தாம்பரத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
விமானம் வழியாக :
மீனம்பாக்கம்
விமான நிலையம்.
ரயில் வழியாக :
தாம்பரம்
ரயில் நிலையம்.
எங்கு தங்குவது?
தாம்பரம்
மற்றும் சென்னையில் பல்வேறு கட்டணங்களுடன் தங்குவதற்கு விடுதி வசதிகள் உள்ளன.
பார்க்க வேண்டிய இடங்கள் :
பம்பர்
கார் சவாரி
படகு
பயணம்
அருவி
கப்பல்கொடி
என்னும் கோபுர வீழ்ச்சி சவாரி
கம்பிவட
கூண்டுப் பயணம்
இதர சுற்றுலாத்தலங்கள் :
வண்டலூர்
உயிரியல் பூங்கா.
வேடந்தாங்கல்.
கிண்டி
தேசிய பூங்கா.
பிர்லா
கோளாரங்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக