இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
குழந்தைகள்
விளையாடும் விளையாட்டுகளில் ஒவ்வொன்றும் பலவிதங்களில் இருக்கும். அந்த
விளையாட்டுகளை விளையாடும்போது குழந்தைகளின் ஆரவாரம் அந்த இடமானது களைகட்டிவிடும்
என்றே சொல்லலாம்.
குழந்தைகள்
எல்லோருடன் சேர்ந்து விளையாடும் போது எவ்வித மன அழுத்தமும் இன்றி உற்சாகமாக
விளையாடுவார்கள்.
அவ்வாறு
குழந்தைகள் ஆர்வமாகவும், உற்சாகமாகவும் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்றுதான்
கோழிக்குஞ்சை தூக்கி வா!
எத்தனை பேர் விளையாடலாம்?
8
முதல் 10 குழந்தைகள் ஒன்றாக சேர்ந்து இந்த விளையாட்டை விளையாடலாம்.
எப்படி விளையாடுவது?
இந்த
விளையாட்டை தொடங்குவதற்கு முன்பாக முதல் போட்டியாளரை தேர்வு செய்து கொள்ள
வேண்டும்.
பிறகு
விளையாட்டில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் காவல்காரர், உதவியாளர், அப்பா
கோழி, அம்மா கோழி என்று ஒருவரை பிரித்துக் கொள்ள வேண்டும். மீதமுள்ள
போட்டியாளர்கள் அனைவரும் கோழிகுஞ்சுகளாக இருக்க வேண்டும்.
தேர்வு
செய்த முதல் போட்டியாளர் தான் இந்த விளையாட்டின் கழுகு ஆவார். தேர்வு செய்த பிறகு
விளையாட்டைத் தொடங்கலாம்.
'கழுகுராஜா...
கழுகுராஜா... காவலுக்கு யாருமில்லை. கோழிக்குஞ்சை தூக்கிப் போ..!" என்று
விளையாட்டில் உள்ள எல்லா குழந்தைகளும் ஒன்றாகச் சேர்ந்து சொல்லிவிட்டு ஆங்காங்கே
கலைந்து நின்றுக் கொள்ள வேண்டும்.
பின்பு
முதல் போட்டியாளராக தேர்வு செய்த கழுகு, சுற்றி நிற்கும் மீதமுள்ள
போட்டியாளர்களில் உதவியாளர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும்.
அவ்வாறு
கழுகு, உதவியாளரை கண்டறியும் பொழுது 'அக்கா, அக்கா பசியெடுக்குது. என்னோட உதவிக்கு
வா..!" என்று கேட்க வேண்டும். தவறானவரிடம் கேட்டுவிட்டால், 'நான் வர
மாட்டேன்... நீ போ..!" என்று விளையாட்டில் இருக்கும் போட்டியாளர்கள்
கழுகுவிடம் கூறுவார்கள்.
இவ்வாறு
கழுகுக்கு இரண்டு வாய்ப்புகள் இருக்கும். மூன்றாவது முறை தவறான உதவியாளரை கழுகு
சொன்னால் அவர்களிடம் மாட்டி கொள்ளும். பின்பு அவர்களிடமிருந்து கழுகு தப்பிக்க
முயற்சி செய்ய வேண்டும்.
உதவியாளரை
கழுகு சரியாக அடையாளம் சொல்லி விட்டால் 'எனக்கும்தான் பசிக்குது. வா... சேர்ந்து
இரை தேடலாம்..." என்று உதவியாளர் கூற வேண்டும். கழுகுடன் உதவியாளர் வந்துவிட
வேண்டும். இவர்கள் இருவரும் சேர்ந்து கோழிக்குஞ்சுகளை தூக்கிவர வேண்டும்.
பிறகு
போட்டியாளர்கள் அனைவரும் 'முடிஞ்சா எங்களைப் பிடி மூச்சு முட்ட ஓடிப் பிடி"
என்று பாடிக்கொண்டே அனைவரும் ஓடிச் செல்வார்கள்.
உதவியாளரும்,
கழுகும் கோழிக்குஞ்சுகளை தூக்கிச் செல்லும்போது அவர்களை தடுக்க காவல்காரர், அப்பா
கோழி, அம்மா கோழி முயற்சி செய்ய வேண்டும்.
அவர்கள்
கோழிக்குஞ்சுகளை தூக்கவிடாமல் அப்படியும் இப்படியுமாகப் போக்கு காட்டி தடுக்க
முயற்சி செய்ய வேண்டும். ஆனால், கோழிக்குஞ்சை கழுகும், உதவியாளரும் தூக்கி
வெற்றிபெற வேண்டும்.
அவ்வாறு
வென்றுவிட்டால் வேறொருவர் கழுகாக மாறி, விளையாட்டை மறுபடியும் இதே மாதிரி மீண்டும்
விளையாட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக