இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இரவு
நேரத்தில் வானில் நட்சத்திரங்கள் ஒளிரும், நிலா ஒளிரும் என்று
கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், மலை ஒளிரும் என்று நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?
என்ன? இரவில் மலை ஒளிர்கின்றதா?
இது
என்ன விசித்திரமா இருக்கு... இது உண்மையா? பொய்யா? எப்படி இரவில் மலை ஒளிரும்?...
என உங்களுக்குள் பல கேள்விகள் எழுகின்றதா?
இது
உண்மைதாங்க... வடக்கு கரோலினா பகுதியில் அமைந்துள்ள பிரவுன் மவுண்டென் என்ற மலை
தினந்தோறும் இரவு நேரத்தில் விசித்திரமாக ஒளிர்கிறதாம்.
சில
நூற்றாண்டுகளாகவே தினந்தோறும் இரவு நேரத்தின்போது, இப்படித்தான் இந்த மலை
ஒளிர்கிறதாம்.
இந்த
மலைப்பகுதியில் பந்து போன்ற ஒளி தெரிவதும், பின்னர் மத்தாப்பு போலச் சிதறுவதுமாகச்
சில விநாடிகள் நீடிக்கிறதாம்.
மலை
ஒளிரும் என்பதை நினைத்துப் பார்க்கவே வியப்பாக இருக்கிறது. இதில் இந்த மலை பல்வேறு
வண்ணங்களில் ஒளிரும் என்பது வியப்பின் உச்சத்திற்கே நம்மை அழைத்துச் செல்கிறது.
பெரும்பாலும்
ஊதா நிறம் மற்றும் காவி நிறத்தில் இந்த மலை ஒளிருமாம். சில நேரங்களில் மஞ்சள்,
சிவப்பு, பச்சை என வௌ;வேறு நிறங்களிலும் மலை ஒளிருமாம்.
இப்படி
ஒளிர்வதை மலையின் வெகு தூரத்திலிருந்தே பார்க்க முடிகிறதாம். சில சமயங்களில் இந்த
மலை முழு நிலவு போன்ற வடிவில் ஜொலிப்பதாக அங்கு வாழும் மக்கள் கூறுகிறார்கள்.
ஆரம்பக்காலத்தில்
மலைக்காட்டுக்குள் ஏற்படும் தீ விபத்தினால் இந்த ஒளி ஏற்படுகிறது என்றே பலரும்
நினைத்தார்கள். ஆனால், இந்த மலையை ஆராய்ந்தபோது இது உண்மை இல்லை என்பது
தெரியவந்தது.
இம்மலையில்
உள்ள கற்கள் பளிங்குக்கற்கள் போல உள்ளதால் இரவில் நட்சத்திரங்களின் எதிரொலிப்பால்
இந்த மலை ஒளிர்கின்றது என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும்,
சில ஆய்வுகளில் அடர்ந்த காட்டுப்பகுதியில் உள்ள மின்மினிப் பூச்சிகள் போன்ற சில
உயிரினங்கள் இருப்பதினால் இரவில் மட்டுமே ஒளிர்வதாகவும் கூறப்படுகிறது.
ஆனால்,
இந்த மலை எப்படி ஒளிர்கிறது என்பதற்கான காரணம் இன்று வரை யாருக்கும் தெரியவில்லை...
இந்த
விநோதமான, விசித்திரமான மலையைப் பற்றிய ஆய்வுகள் இன்றும் நடந்து கொண்டுதான்
இருக்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக