இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
குழந்தைகள் ஒரு விளையாட்டை விளையாடும்போது நேரம் போவது கூட தெரியாமல் ஆர்வமாகவும், உற்சாகமாகவும், எல்லோருடன் சேர்ந்தும் விளையாடுவார்கள்.நாம் என்னதான் மொபைல்களிலும், கம்ப்யூட்டர்களிலும் புதுசு புதுசாக கேம் விளையாடினாலும், நாம் கிராமங்களில் விளையாடும் விளையாட்டிற்கு இணையாவதில்லை.
அதுபோல நாம் மறக்கமுடியாத விளையாட்டுகளில் ஒன்றான கல்லுப்பந்து விளையாட்டை பற்றி பார்க்கலாம்.
எத்தனை பேர் விளையாடலாம்?
இந்த விளையாட்டை எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம்.
விளையாடத் தேவையானப் பொருட்கள் :
செங்கல்
ஒரு பந்து
எப்படி விளையாடுவது?
இந்த விளையாட்டை விளையாடுவதற்கு முன்பு இரு குழுவாக பிரிந்துக் கொள்ள வேண்டும்.
அதன்பின் மைதானத்தில் ஒரு செங்கல்லை செங்குத்தாக நிற்க வைக்க வேண்டும். விளையாடும் இரு குழுவில் உள்ள நபர்கள் செங்கல்லை தள்ளி, இருபது அடி தூரத்தில் நின்றுக் கொள்ள வேண்டும்.
பிறகு இரு குழுவில் இருக்கும் நபர்கள் அவர்களின் கையில் இருக்கும் ரப்பர் பந்தால் மைதானத்தில் செங்குத்தாக நிற்கும் செங்கல்லை அவர்கள் நின்றுக் கொண்டிருக்கும் இடத்தில் இருந்து குறிப்பார்த்து அடிக்க வேண்டும்.
இதே மாறி குழுவில் உள்ள ஒவ்வொரு நபரும் ஒவ்வொருவராக மாறி மாறி செங்கல்லை அடிக்க முயற்சிக்க வேண்டும்.
அதன்பின் எந்த குழுவை சேர்ந்த நபர் செங்கல்லை முதலில் அடித்தாரோ, அந்தக் குழுவில் உள்ள அனைவரும் செங்கல்லைச் சுற்றி வட்டமாக நின்று கொண்டு ஒருவர் மீது ஒருவர் தோளோடு தோள் சேர்ந்து நெருக்கமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு செய்தபின் வெளியே இருக்கும் மற்றொரு குழுவுக்கு தெரியாத வகையில், செங்கல்லை முதலில் அடித்த குழுவில் இருக்கும் ஒருவரின் கையில் ரப்பர் பந்தை மறைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு செங்கல்லை முதலில் அடித்த குழுவில் இருக்கும் நபர்கள் அவர்களிடம் பந்து இருப்பது போலவும், மற்ற குழு நம்பும் வகையில் அனைவரும் கையை மூடி சட்டைக்குள் மறைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன்பின் செங்கல்லுக்கு ஒருவர் மட்டும் காவலிருக்க, மற்றவர்கள் அனைவரும் அடுத்த குழுவில் இருக்கும் நபர்களை விரட்டிச் செல்ல வேண்டும்.
பிறகு மற்ற குழுவில் இருக்கும் நபர்கள் யார் கையில் பந்து இருக்கிறது என்று தெரியாமல் பயந்து ஓடுவார்கள். பந்தை வைத்திருக்கும் நபர் எதிரில் இருக்கும் நபரை அடித்து விட்டால் அவர்கள் அவுட் ஆகிவிடுவார்.
இதே மாதிரி மற்ற குழுவில் இருக்கும் ஒவ்வொரு நபரையும் அவுட் செய்ய வேண்டும். பின்பு செங்கலுக்கு காவல் இருக்கும் ஒரு நபர் மற்ற குழுவில் இருக்கும் நபர்கள் செங்கலை தொடுவதற்கு வருவார்கள். அவர்களைத் தொட விடாமல் தடுக்கச் செய்ய வேண்டும்.
அதையும் மீறி மற்ற குழுவில் இருக்கும் நபர் செங்கலைத் தொட்டுவிட்டால், மீண்டும் ஆட்டத்தை முதலில் இருந்து தொடங்கி இதே மாதிரி விளையாட வேண்டும்.
பலன்கள் :
கால்கள் வலுப்பெறும்.
இலக்கை நிர்ணயிக்கும் திறன் மேம்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக