இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பத்மநாபபுர அரண்மனை, கேரளாவின் திருவனந்தபுரம் நகரத்தில் இருந்து தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி நகரத்திற்குச் செல்லும் வழியில் பத்மநாபபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.
கன்னியாகுமரியிலிருந்து ஏறத்தாழ 33கி.மீ தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து 13கி.மீ தொலைவிலும், தக்கலையிலிருந்து 2கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள ஒரு அழகிய அரண்மனைதான் பத்மநாபபுர அரண்மனை.
சிறப்புகள் :
இந்த அரண்மனையைச் சுற்றி கிரானைட் கற்களால் ஆன கோட்டை அமைந்துள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
காண்போரைக் கொள்ளை கொள்ளும் விதத்திலேயே எளிமையான கேரளக் கட்டிடக்கலையைப் பிரதிபலிக்கும் இந்த அரண்மனை, 6.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது.
வெளியிலிருந்து அரண்மனை சன்னல்கள டாகப் பார்த்தால், உள்ளே நடப்பது எதுவும் தெரியாது. ஆனால், உள்ளிருந்து பார்த்தால் வெளி வீதியில் நடப்பவற்றை நன்கு பார்க்கலாம்.
அரண்மனையின் முகப்பாகிய பூமுகத்துக்குச் செல்லும் முதன்மை வாசல் பிரமாண்டமானது. மர வேலைப்பாடுகளுடைய பெரிய இரட்டைக்கதவையும் கருங்கற்தூண்களையும் உடையது.
கேரளப் பாரம்பரியத்துக்கே உரித்தான கலை நயத்துடன் அமைக்கப்பட்ட பூமுகத்தில் உள்ள மரச்செதுக்கல் வேலைப்பாடுகள் பார்ப்போரைப் பிரமிக்க வைக்கும்.
பூமுகத்தின் முதலாவது மாடியில் மந்திரசாலை காணப்படுகிறது. மந்திரசாலைக்குச் செல்லும் படிக்கட்டு மிகவும் ஒடுக்கமானது.
பழங்கால மன்னர் மற்றும் வாழ்க்கை முறையை படம் பிடித்து காட்டும் வகையில் இந்த அரண்மனை அமைந்துள்ளது.
தொல்லியல்துறையில் ஆர்வமுடைய எவரையும் உடனே ஈர்க்கும் வல்லமை படைத்ததாக பத்மநாபபுர அரண்மனை திகழ்கிறது.
ஏறத்தாழ 400 வருடங்கள் பழமையான இந்த பத்மநாபபுர அரண்மனையில் இன்றும்கூட மின்விளக்குகளைக் காணமுடிகிறது.
எப்படி செல்வது?
கன்னியாகுமரியிலிருந்தும், நாகர்கோவிலில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.
விமானம் வழியாக :
தூத்துக்குடி விமான நிலையம்.
ரயில் வழியாக :
கன்னியாகுமரி ரயில் நிலையம்.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
கன்னியாகுமரி, நாகர்கோவிலில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
பார்க்க வேண்டிய இடங்கள் :
மந்திர சாலை.
தாய்க் கொட்டாரம்.
நாடக சாலை.
நான்கடுக்கு.
மாளிகை(உப்பரிகை மாளிகை).
தெகீ கொட்டாரம் (தெற்கு கொட்டாரம்).
இதர சுற்றுலாத்தலங்கள் :
கன்னியாகுமரி கடற்கரை.
விவேகானந்தர் பாறை.
திருவள்ளுவர் சிலை.
திற்பரப்பு அருவி.
மகாத்மா காந்தி மண்டபம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக