இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
A-Z எல்லாமே இங்கு கிடைக்கும்..
ஒரு பொருள் வாங்கவேண்டும் என்றால் கடை கடையாக ஏறி அலைந்து, திரிந்து அந்த பொருளை வாங்குவதற்குள் ஒரு வழியாகிவிடுவோம்.
எந்தப் பொருளாக இருந்தாலும் சரி, அதை வாங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே திட்டமிட்டு விடுமுறை நாட்கள் வரை காத்திருந்து, விடுமுறை நாள் வந்தவுடன் கடைக்குச் சென்றால் அந்த ஒரு நாள் அங்கேயே கழிந்துவிடும்.
விடுமுறை நாட்களை சந்தோஷமாக கழிக்கவேண்டும் என்று திட்டமிட்டால், அது இந்த கடைகளிலேயே முடிந்துவிடும்.
ஆனால், இப்போது பொருட்களை கடைகளில் சென்று வாங்கிய காலம் போய், ஏதேனும் பொருள் வாங்க வேண்டும் என்றால்ஆன்லைன் ஸாப்பிங் செய்து கொள்கிறோம்.
ஆன்லைன் ஸாப்பிங் செய்வதால் நேரம் மற்றும் பணம் மிச்சமாகிறது. வீட்டிலிருந்தபடியே ஸ்மார்ட்போன்களில் உள்ள ஆன்லைன் ஸாப்பிங் செயலிகளின் மூலம் தேவையானவற்றை வாங்கிக் கொள்கிறோம்.
இப்படி ஆன்லைன் ஸாப்பிங் என்றால் நம் நினைவுக்கு வரும் பெயர்களில் ஒன்று தான் அமேசான் அமேசான் முதலில் புத்தகங்களை ஆன்லைனில் விற்பனை செய்ய ஆரம்பித்து, தற்போது அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கும் அளவிற்கு முன்னேறி இருக்கிறது. இந்த கம்பெனியை உருவாக்கியவர் ஜெப் பெசோஸ் ஆவார்.
ஜெப் பெசோஸ்-ன் முதல் நிறுவனம்
உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெசோஸ் முதலிடம் பிடித்துள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 141.9 பில்லியன் டாலர் ஆகும்.
ஜெப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தை 1994-ம் ஆண்டு தொடங்கினார். தற்போது இந்த நிறுவனம் உலகின் மிகப்பெரிய வணிக நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. உலகின் மிகப்பெரிய மதிப்பு கொண்ட நிறுவனங்களின் பட்டியலில் ஆப்பிளுக்கு அடுத்த படியாக அமேசான் 2-வது இடத்தை பிடித்துள்ளது.
அமேசான் எப்படி உருவானது?
ஜெப் பெசோஸ் 1964ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார். இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, நியூயார்க்கில் ஒரு நிதி குழுமத்தில் பணிபுரிந்து வந்தார்.
1994-ல் இன்டர்நெட்டின் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டிருந்தது. இதை கண்டு வியந்த ஜெப் பெசோஸ் தனது வேலையிலிருந்து விலகி ஆன்லைனில் தொழில் துவங்க எண்ணினார். அப்போது எந்த பிசினஸ்-ஐ துவங்குவது என்று யோசித்தபோது கம்ப்யூட்டர் ஹார்டுவேர்& சாப்ட்வேர் புத்தகம் &இசைகள் இவற்றையெல்லாம் ஆன்லைனில் விற்கலாம் என எண்ணினார். பின் புத்தகங்களைதான் முதலில் விற்பனை செய்யவேண்டும் என்ற முடிவிற்கு வந்தார். தனது முடிவை தனது பெற்றோர்களிடம் சொன்னபோது, அவர்களும் சிறிது தயங்கி பின் ஒப்புக்கொண்டனர்.
முதலில் தன் நிறுவனத்திற்கு Cadabra என்ற பெயரை தேர்வு செய்தார். இதனை அவரின் வழக்கறிஞரிடம் அறிவித்த போது அவர் இந்த பெயர் பொருத்தமானதாக இல்லை. மக்களிடம் உடனடியாக சென்றடையக்கூடிய நல்ல பெயரை தேர்ந்தெடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பின் டிக்சேனரி யில் அமேசான் என்ற பெயரை பார்த்து இதுதான் தன் நிறுவனத்தின் பெயர் என தீர்மானித்தார். இவ்வாறு தான் உலகின் மிகப்பெரிய ஆன்லைன் புக் ஸாப்பிங் ஸ்டோர் உருவானது.
1995-ல் தனது இல்லத்தில் ஆரம்பித்த அமேசான் கம்பெனிக்கு அடுத்த ஒரு வருடத்திற்கு தனது சொந்த பணத்தையே செலவு செய்து வந்தார். இந்த கம்பெனியில் ஊழியர்கள் யாரும் இல்லை. இவர் மட்டுமே இந்த கம்பெனியின் ஊழியர், முதலாளியாக இருந்து வந்தார்.
தனது கம்பெனியின் வளர்ச்சிக்கு ஏற்ற பொருளாதார நிலை இல்லாதபோது அவர் மிகவும் மனமுடைந்து, ஒரு நல்ல முதலீட்டாளரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது 1996-ல் Kleiner Perkins Caufield Byers என்ற கம்பெனி 8 மில்லியன் டாலரை அமேசான் மீது முதலீடு செய்தது. அந்த முதலீட்டாளர்களிடம் முதல் 5 வருடங்களுக்கு எந்த இலாபத்தையும் எதிர்பார்க்காதீர்கள் என்று தெளிவாக கூறிவிட்டார், ஜெப் பெசோஸ்.
அடுத்தடுத்த வருடங்களில் அமேசான் நல்ல வளர்ச்சி அடைந்தது. 1999-ல் டைமஸ் மேகசின் மக்கள் செல்வாக்கு நிறைந்த ஒரு மனிதர் என்ற விருதை இவருக்கு வழங்கியது. இதன்பின் ஜெப் பெசோஸ்-ன் வளர்ச்சி இன்னும் அதிகரித்துக்கொண்டே இருந்தது.
டெக் வணிகம் ஜெப் பெசோஸ்-ன் அமேசான் நிறுவனத்துக்கு 17 சதவீத பங்குகளை அளித்துள்ளது. ஆனால், இப்போது கிளவுட் கம்ப்யூட்டிங், இணையதள வீடியோ சேவை, கணினி வன்பொருள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய டெக் பிரிவுகளில் அதிகக் கவனத்தினை அமேசான் திருப்பியுள்ளது. பழைய அருங்காட்சியகங்களை வாங்கும் ஆர்வத்தில் 23 மில்லியன் டாலரை கொடுத்து இவர் வாங்கிய பழைய ஜவுளி அருங்காட்சியகம் வாஷிங்டன் டிசி-யில் அமைந்துள்ளது.
ஜெப் பெசோஸ் ஸ்டார் டெக் ரசிகர். பேண்டசி திரைப்படங்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். எனவே, திரைப்படங்களில் சிறிய கதாபத்திரம் ஒன்றிலும் நடித்துள்ளார்.
பூமியிலிருக்கும் அனைத்து மனிதர்களையும் செவ்வாய் கிரகத்தில் குடியேற்ற வேண்டும் என்பது இவரது மிகப்பெரிய கனவாக இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு வருடமும் பல பில்லியன் டாலர்களை செலவு செய்து கொண்டிருக்கிறார். அவரது கனவுகள் காலப்போக்கில் பெரிதாகி விட்டன. பெசோஸ் விண்வெளிக்குச் செல்லவும் திட்டமிட்டுள்ளார். ப்ளூ ஆரிஜின் அவரை அழைத்துச் செல்ல தயாராக உள்ளது.
இவரது கனவு நனவாகுமா? என்பது காலத்தின் கையில்தான் உள்ளது. இவரது கனவுகளுக்கு செயல்வடிவம் கொடுத்து, அதை நடைமுறைப்படுத்துவது என்பது மிகப்பெரிய விஷயம் ஆகும். சாத்தியமற்ற ஒன்றையும் சாத்தியமாக்கி காட்ட வேண்டும் என்பது இவரின் கனவாக உள்ளது.
அமேசான் என்பது ஆன்லைனில் புத்தகங்கள், சிடிக்கள், வீடியோக்கள் மட்டும் விற்கும் ஒரு நிறுவனம் அல்ல. அதையும் தாண்டி இன்னொரு மிகப்பெரிய பிசினஸ்-ம் உள்ளது. அது தான் அமேசான் வெப் சர்விஸ் இந்த வெப் சர்விஸ் மலம் பல லட்சம் ரூபாய் லாபம் இவருக்கு கிடைத்தது.
அடுத்து இவர் Alexa.com என்ற கம்பெனியையும் ஆரம்பித்தார். இதில் அனைத்து வெப்சைட்டுகளின் Analytics பார்க்க உதவியாக இருந்தது. வெப்சைட்டுகளை எத்தனை பயனாளர்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது. இதன்மூலம் எவ்வளவு லாபம் வருகிறது என்பதனை பார்க்க இந்த alexa.comபயன்பட்டது.
இதையடுத்து அமேசான் நிறுவனம், அமேசான் ப்ரைம் வீடியோஸ் 'கிண்டில் (Kindle)எனும் புதிய புதிய திட்டங்களை வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது.அமேசான் கோ ஸ்டோர்ஸ் (Amazon Go Stories) எனும் சூப்பர் மார்க்கெட்டை அமெரிக்காவில் உருவாக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் உலகில் உள்ள நிறைய கம்பெனிகளை கையகப்படுத்தியுள்ளது, அமேசான் நிறுவனம்.
2015ஆம் ஆண்டின் முடிவில், முந்நூற்று நான்கு மில்லியன் உறுப்பினர் கணக்குகள் அமேசான்க்கு இருப்பதாக, அமேசான் அறிவித்தது. 2018ஆம் ஆண்டு, அமேசான்-ன் பங்குகள் அறுபது சதவிகிதம் கூடியது. மேலும், அதன் சந்தை விலை 890 பில்லியன் டாலர்கள் ஆனது. ஜெப் பெசோஸ்-க்கு அமேசானில் 16% பங்குகள் இருக்கின்றன. வாஷிங்டன் போஸ்ட் மற்றும் ப்ளூ ஆரிஜின் ஆகிய நிறுவனங்களையும் ஜெப் பெசோஸ் பார்த்துக் கொள்கிறார்.
இவருடைய சொத்தின் நிகர மதிப்பு 83 பில்லியன் டாலர்கள் என்று புளூம்பர்க் மதிப்பீட்டு நிறுவனம் கணித்துள்ளது.
1994ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அமேசான் நிறுவனம் தற்போதைய சூழலில் உலகின் மின்னணு வர்த்தக நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் கிட்டத்தட்ட 5 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலில் ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக அமேசான் நிறுவனம் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக