இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
நமக்கு தெரிந்த கோவில்களில் நமக்கே தெரியாத பல அதிசயங்கள் காணப்படும். அத்தவகையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோவிலில் நடக்கும் அதிசயத்தைப் பற்றி பார்ப்போம்.
இந்த அருள்மிகு விஸ்வநாத சுவாமி கோவில் தேப்பெருமாநல்லூர், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. குடந்தை நாகேஸ்வரம் திருக்கோயிலிலிருந்து சுமார் நான்கு கி.மீ. தொலைவில் உள்ள தேப்பெருமாநல்லூர் தலத்தின் புராணப் பெயர் தேவராஜபுரம். இந்த கோவில் 1000 - 2000 வருடங்களுக்கு மிக பழமையான கோவில் ஆகும். இக்கோவிலின் மூலவராக விஸ்வநாத சுவாமியும், வேதாந்த நாயகி அம்மனும் அருள்பாலித்து வருகின்றனர்.
அணைத்து தானாக எரியும் தீபம் :
மகா மண்டபத்திற்குள் தெற்குத் திசை நோக்கி தனிச் சன்னதியில் வேதாந்த நாயகி அம்பாள் வேறெங்கும் காணக்கிட்டாத காட்சியாக அம்பாள் அருள்புரிகிறாள்.
அம்பாள் சன்னதியில் நான்குவருடங்களுக்கு முன் தீபம் காலை 7 மணிமுதல் 9 மணி வரையில் அணைவதும் மீண்டும் தானாக எரிவதுமாக இருந்தது பெரும் அதிசய நிகழ்வாக இருந்தது.
தினமும் சூரிய பகவான் வழிபடுகிறார்:
தினமும் காலையில் சூரிய பகவான் தன் ஒளிக்கதிர்களை சிவலிங்கத்தின்மீது படரச் செய்து வழிபடுகிறார். அதற்குப் பின்தான் காலை ஏழு மணி அளவில் கோவில் திறக்கப்படுகிறது. சூரிய ஒளி சிவலிங்கத்தின்மீது விழுவதற்கு ஏற்ப கிழக்கு வாசல் சாளரம் போல் அமைக்கப்பட்டுள்ளது.
நாகம் வந்து வழிபடுகிறது :
சூரிய கிரகணத்தின்போது ஒரு பெரிய நாகம் எங்கிருந்தோ வந்து தலமரமான வில்வத்தில் ஏறி, வில்வதளத்தைப் பறித்து வாயில் கவ்விக் கொண்டு, கிழக்கு வாசல் வழியாக நுழைந்து சிவலிங்கத்தின்மீது ஏறி வில்வதளத்தை வைத்தபின், கீழே இறங்கிப் படம் எடுத்து வழிபட்டபின், வந்த வழியே சென்று மறைந்துவிடுமாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக