இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
காஷ்மீர் பிரச்னையில் உலக நாடுகள் கவனம் செலுத்தாவிட்டால் அணு ஆயுதப் போரை சந்திக்க நேரிடும் என சில தினங்களுக்கு முன் மிரட்டிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தமாட்டோம் என திடீரென பின்வாங்கியுள்ளார்.
பாகிஸ்தானுடன்
மோதினால் இந்தியா 22 கூறுகளாக உடையும் என பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது கூறியுள்ளார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சாசன சட்டப்பிரிவு திரும்பப் பெறப்பட்ட விவகாரத்தை சர்வதேச மன்றங்களில் எழுப்ப முயன்று தோல்வி கிட்டியதால் பாகிஸ்தான் விரக்தி அடைந்துள்ளது. இதனால், காஷ்மீரில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நியூயார்க் டைம்ஸில் கட்டுரை எழுதிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்னையில் உலக நாடுகள் அக்கறை காட்டாவிட்டால் அணு ஆயுதப் போர் வெடிக்கும் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருந்தார். அதில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற நிலைப்பாடு சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறக்கூடும் என மறைமுகமாக மிரட்டல் விடுத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில் தன் கருத்தில் இருந்து திடீரென இம்ரான் கான் பின்வாங்கியுள்ளார். லாகூரில் சீக்கியர்கள் மத்தியில் உரையாற்றிய இம்ரான் கான், இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத நாடுகள் என்றும் தற்போது உள்ள பதற்றம் அதிகரிக்கும் பட்சத்தில், உலகத்திற்கு அது அச்சுறுத்தலாக அமையும் என்றும் கூறியதுடன் முதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்த மாட்டோம் என தெரிவித்ததாகவும் ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே சர்ச்சைகளுக்குப் பெயரெடுத்த பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது பாகிஸ்தானிடம் 150 கிராம் முதல் 250 கிராம் எடை கொண்ட அணுகுண்டுகள் தயாராக இருப்பதாகவும் இந்தியாவின் எந்த பகுதியையும் அதை கொண்டு தாக்கமுடியும் என்றும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அக்டோபரில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூளும் என பேசி ஏற்கெனவே சர்ச்சையை ஏற்படுத்திய இவர் மோடியை விமர்சித்து பேசிக் கொண்டிருந்தபோது ஷாக் அடித்த காட்சிகள் வெளியானதால் இந்தியாவில் ஏற்கெனவே பிரபலமாகியுள்ளார்
இந்நிலையில் செய்தியாளர்ளிடம் நேற்று பேசிய ஷேக் ரஷித் அகமது பாகிஸ்தானுடன் மோதினால் இந்தியா 22 கூறுகளாக உடையும் என கூறியுள்ளார். பிரதமர் இம்ரான் ஒரு புறம் அணு ஆயுதத்தை பயன்படுத்தமாட்டோம் எனக் கூறிய அதே நாளில் பாகிஸ்தான் அமைச்சர் ரஷித் அகமது தங்களிடமுள்ள 150 கிராம் அணு குண்டுகள் மூலம் இந்தியாவை 22 ஆக உடைப்போம் எனக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக