Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 5 செப்டம்பர், 2019

நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் இந்தியன் வங்கி, அலகாபாத் வங்கி இணைப்பு: இந்தியன் வங்கி நிர்வாக இயக்குநர் தகவல்

 Image result for நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் இந்தியன் வங்கி, அலகாபாத் வங்கி இணைப்பு:

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

   

நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் இந்தியன் வங்கி, அலகாபாத் வங்கி இணைப்பு நடவடிக்கை நிறைவடையும். அது தொடர்பான வங்கி இயக்குநர்கள் கூட்டம் விரைவில் நடத்தப்படும் என்று இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் பத்மஜா சுந்துரு தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் மத்திய அரசு, 10 பொதுத் துறை வங்கிகளை இணைத்து 4 வங்கிகளாக மாற்று வதற்கான அறிவிப்பை வெளியிட் டது. அதன்படி இந்தியன் வங்கி யுடன் அலகாபாத் வங்கி இணைக்கப்பட உள்ளது.

இது குறித்து அவர் கூறிய போது, ‘இந்த நிதியாண்டின் இறுதி யில் அதாவது 2020 மார்ச் மாதம் முடிவுக்குள் இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப் படும். அதற்கான நடைமுறைச் செயல்பாடுகள் குறித்து இரு வங்கிகளின் இயக்குநர்கள் குழு கூடி விவாதிக்க உள்ளது’ என்று தெரிவித்தார்.

இந்தியன் வங்கி தென் இந்தியா விலும், அலகாபாத் வங்கி வட இந்தியா மற்றும் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளிலும் தனது சேவையை அதிக அளவில் வழங்கி வருகிறது. இந்நிலையில் இவ்விரு வங்கிகளும் ஒன்றாக இணைக்கப்பட உள்ளன.
7-வது பெரிய வங்கி
இணைப்புக்குப் பிறகு, அதன் மொத்த வருவாய் ரூ.8.08 லட்சம் கோடியாக இருக்கும். இது இந்தியாவின் 7-வது பெரிய பொதுத் துறை வங்கியாக இருக்கும். நாடு முழுவதும் 6,100 கிளைகளையும், 43,000 ஊழியர்களையும் இவ்வங்கி கொண்டிருக்கும்.

வங்கிகளின் நிதி மூலதனத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு ரூ.55,250 கோடி அளவில் வங்கி களுக்கு நிதி அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்து. அதில் இந்தியன் வங்கிக்கு ரூ.2,500 கோடி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து மேலும் அவர் கூறிய போது, ‘இந்த இரு வங்கிகளும் 
இணைக்கப்பட்ட பிறகு அதன் மொத்த நிதி ஆதாரம் பெரும் அளவில் உயரும். 

அதன் மூலம் நாடும் முழுவதும் பரந்துபட்ட சிறந்த சேவையை வழங்குவோம்.
இந்த இணைப்புக்குப் பிறகு வங்கியின் வளர்ச்சி, லாபம் இவற் றையெல்லாம் தாண்டி, ஊழியர்கள் மேலாண்மையே எங்களது முதன்மை குறிக்கோளாக இருக்கும். வங்கிக் கிளைகள் மூடப் படுவதோ, ஊழியர்கள் வேலை நீக்கம் செய்படுவதோ மேற் கொள்ளப்படாது’ என்று தெரி வித்தார்.

இணைப்பு மேற்கொள்ளப்பட இருக்கிற பிற வங்கிகளும் விரை வில் அதன் இயக்குநர்கள் குழு கூட்டத்தை நடத்த உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக