Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 5 செப்டம்பர், 2019

விடுதி மாணவர்களும்..! வீட்டு மாணவர்களும்..!


Image result for விடுதி மாணவர்களை வீட்டு மாணவர்கள்


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




நகரில் பெயர் பெற்ற பெரிய பள்ளி. பெரிய பெரிய கட்டிடம், நூற்றாண்டு பழமை மிக்க வெள்ளைக்காரன் காலத்தில் கட்டிய கட்டிடங்கள், பிரமாண்டமான நுழைவாயில் வளைவு. இதையெல்லாம் பார்க்கும் போது இது ஒரு சிறந்த பள்ளி என்று அனைவரும் அறிந்து கொள்வர். சிறந்த பள்ளிக்கூடம் என்றால் அங்கு கல்வி, ஒழுக்கம், கட்டுபாடு நன்றாக இருக்கும். மாட்டைக் கொம்பை பார்த்தாலே பயம் வருமே, அது மாதிரி.

அதுமட்டுமல்ல விளையாட்டு மைதானத்தில் ஒவ்வொரு விளையாட்டுக்கென்று தனித்தனி இடம். புட்பால் கிரவுண்ட், வாலிபால் கிரவுண்ட், கோகோ கிரவுண்ட், பேஸ்கட்பால் கிரவுண்;ட், கபடி கிரவுண்ட் என்று மைதானம் பார்ப்பதற்கே பிரமாதமாக இருக்கும். இங்கு தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைப்பதற்கு வெளியூர் மட்டுமல்ல, வெளி மாவட்டங்களில் இருந்தும் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க ஆசைப்படுவார்கள். ஆசைப்படுவார்கள் என்பதை விட பெருமைப்படுவார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

தூரத்து ஊர்களில் இருந்து படிக்க வரும் மாணவர்களுக்கு வசதியாக மாணவர் விடுதியும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது மாணவர்கள் மட்டுமே படிக்கும் மேல்நிலைப்பள்ளி.

இந்த மாணவர் விடுதியில் மூன்று பெரிய நீளமான கட்டிடம் உண்டு. ஒன்று படிக்கும் அறை. அதில் நூற்றைம்பது மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கு வசதியாக டெஸ்க் பெஞ்ச் போடப்பட்டிருக்கும். டெஸ்க்கில் நான்கு பேர் தங்கள் புத்தகங்களை வைத்துக் கொள்ள வசதியாக திறந்து மூடும் வசதியுள்ளது. மார்னிங் ஸ்டடி, ஈவ்னிங் ஸ்டடி இருக்கும். மாணவர்கள் அமைதியாக அமர்ந்து படிக்க, எழுத தங்கள் படிப்பு சம்பந்தமான வேலைகளை செய்து கொள்ள வேண்டும்.

இன்னொரு கட்டிடம், இதில் மாணவர்கள் தங்கள் துணிமணிகள் அடங்கிய பெட்டியை வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு பெயரே பெட்டியறைதான். பெட்டிகளை வைத்துக் கொள்ள வசதியாக, மரத்தாலான உயரமாக பல அடுக்கு ரேக் இருக்கும்.

மூன்றாவதாக ஒரு கட்டிடம், உள்ளே குறுக்குச் சுவர் எதுவும் இருக்காது. இதுதான் டைனிங் கால். டைனிங்கால் என்றால் மேசை, நாற்காலி எதுவும் இருக்காது. கீழே தான் அமர்ந்து சாப்பிட வேண்டும். நூற்றைம்பது மாணவர்கள் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிப்பவர்களாவார்கள். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் இங்கு தங்கி படிக்க மாட்டார்கள். அவர்கள் பழக்க வழக்கத்திற்கும், சாப்பாடு சவுரியங்களுக்கும் இந்த விடுதி சரிப்பட்டு வராது. ருசியாக சாப்பிட இந்த விடுதி சரிப்பட்டு வராது. ருசியாக சாப்பிட இங்கு எதுவும் இருக்காது. பசியோடுதான் மாணவர்கள் சாப்பிட முடியும். சாப்பிடுகிறார்கள் என்று சொல்வதை விட சாப்பாட்டை விழுங்குகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வு விடுமுறைக்கு மட்டும் தான் வீடுகளுக்குச் செல்ல முடியும். மற்ற படி வெளியே செல்லக் கூட அனுமதி கிடையாது. விடுதியில் தங்கிப் படித்து பெரியவனாகி, வேலைக்கு சென்று, திருமணமாகி தங்கள் குழந்தைகளை எக்காரணத்தைக் கொண்டும் விடுதியில் தங்க வைத்து படிக்க வைக்க மாட்டார்கள் என்று அடித்துக் கூறலாம்.

வார்டன் மாற்றம் சில சமயங்களில் மாணவர்களுக்கு சாதகமாகவும், சில சமயங்களில் பாதகமாகவும் இருக்கும். வார்டன் யாராக இருந்தாலும் சமையல் மாஸ்டர் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. அப்படியே சமையல் மாஸ்டர் மாறினாலும் சாப்பாடு மெனு மாறப்போவதில்லை.

இந்த மாணவர்கள் விடுதியில் மாணவர்கள் தான் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டும். ஒரு காய்ச்சல் தலைவலி என்றாலும் யாரும் கவனிக்க மாட்டார்கள். அவற்றையும் மாணவர்களே தான் பார்த்துக் கொள்வார்கள்.

யாருக்காவது சுகமில்லை என்றால், தமிழ்நாடு அரசு பாரசிட்டமால் மாத்திரை ஒன்று கொடுப்பார் வார்டன். அதை வாங்கிப் போட்டுக்கொண்டு சிக் ரூமில் படுத்துக்கொள்ள வேண்டும். சிக் ரூமில் எப்போதும் நான்கைந்து பேர் படுத்திருப்பார்கள். அந்த ரூமில் மூத்திர வாடையும், மாத்திர வாடையும் குமட்டும். கவர்மெண்ட் ஆஸ்பத்திரிலயாவது துப்புரவு பணியாளர்கள் இருப்பார்கள். இங்கு துப்புரவா, பணியாளர்களே இருக்க மாட்டர்கள். வார்டன்களும் ஜெயில் வார்டன் மாதிரி தான் நடந்து கொள்வார்கள். கையில் தார்கம்பு, அதை சுழற்றியபடியே தான் வருவார்கள்.

காலையில் ஜந்து மணிக்கு ஒரு பெல் அடித்து எழுப்பி விடுவார்கள். பெல் அடித்தவுடன் எழுந்து பல் துலக்கி குளித்து விட்டு வந்து ஸ்டடி ஹாலில் படிக்க உட்கார்ந்து விட வேண்டும். குத்துது, குடையுது, குளிருது என்று படுக்கையை விட்டு எழுந்திருக்காமல் படுத்திருந்தால் தார்க்கம்பால் அடி விழும்.

பள்ளி வளாகத்திற்குள்ளே ஒரு நூறு மீட்டர் தொலைவில் அமைந்திருந்த மாணவர் விடுதி. காலை உணவு கஞ்சி, தொவையல். சாபப்பிட்டுவிட்டு எட்டரைக்கெல்லாம் புத்தகப்பையைத் தூக்கிக் கொண்டு பள்ளிக்கூடம் செல்வதற்கு வரிசையில் நிற்க வேண்டும். வார்டன் அல்லது விடுதி மாணவத்தலைவன் விசில் அடிக்க வரிசையாக செல்ல வேண்டும். வரிசையில் தவறி சென்றால் பெயரைக் குறித்துக் கொண்டு வார்டன் கையில் தாளைக் கொடுத்து விடுவான், மாணவத்தலைவன். மாலையில் பள்ளி முடிந்து திரும்பி வந்தவுடன் பெயரை வாசித்து வார்டன் தார்க்கம்பால் இரண்டு கைகளிலும் நான்கைந்து அடி கொடுப்பார். விடுதியில் தங்கிப் படிப்பவர்களென்றால் கேட்பதற்கு நாதியில்லாதவர்கள் என்று வார்டன் மட்டுமல்ல பள்ளி ஆசிரியர்களும் தங்கள் கோபத்தை அவர்களிடம்தான் தாராளமாகக் காட்டுவார்கள். ஏனென்றால் இந்த விடுதியில் தங்கிப் படிப்போர் பாதிபேர் இலவசமாகவும் பாதிபேர் மிகக் குறைந்த கட்டணமே கட்டுவார்கள்;. நடுத்தரக் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவர் கூட இங்குத் தங்கிப் படிக்க மாட்டார்கள். நடுத்தரத்திற்கும் கீழ் உள்ளவர்களுக்குத்தான் இப்படிப்பட்ட விடுதி என்பது எழுதாத விதி.

காலையில் அசெம்பிளி முடிந்து மாணவர்கள் வரிசையாக வகுப்பறைக்குள் செல்கின்றனர். ஒன்பதாம் வகுப்பு 'இ" பிரிவு முதல் பீரிடே கணக்குத்தான். கணக்கு வாத்தியாரைப் பார்த்தாலே பயமாக இருக்கும், மாணவர்களுக்கு. அவர் முகத்தில் சிரிப்பைப் பார்க்க முடியாது. அதனால்தான் துரைச்சாமி சார் என்றால் பள்ளிக்கூடமே பயப்படும். எட்டாவது முடித்து ஒன்பதாம் வகுப்பு போகிறவர்களுக்கு வகுப்பு ஒதுக்கி கொடுக்கும் போது 'சி" பிரிவு வந்துவிட்டால் அவ்வளவுதான். அந்த மாணவர்கள் முகத்தில் ஒரு பயம் வந்துவிடும். சிலர் அழுதுவிடுவார்கள். விடுதியில் தங்கிப் படிப்போருக்கு சொல்லவே வேண்டாம். வார்டனிடம் சொல்லாமலே, ஏன் சக நண்பர்களிடம் கூட சொல்லாமலே ஊருக்கு ஓடிவிடுவார்கள். ஜெயிலில் இருந்து தப்பி ஓடிய கைதியை பிடித்து மீண்டும் ஜெயிலில் கொண்டு வந்து அடைப்பது போல் பெற்றோர் மீண்டும் கொண்டு வந்து மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு பிள்ளைகளை எச்சரித்துவிட்டு செல்வது வழக்கம்.

மற்ற வகுப்புகள் எல்லாம் கலகலவென்று இருக்கும் போது ஒன்பது 'சி" மட்டும் மயான அமைதியாக இருக்கும். மூச்சி விடுவதில் கூட கவனம் செலுத்துவார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஆசிரியர் துரைச்சாமி, வகுப்புக்குள் நுழைகிறார். மாணவர்கள் அமைதியாக எழுந்து நிற்கின்றனர். சாக்பீசைக் கையில் எடுத்தார். அல்ஜீப்ரா கணக்கை நடத்த ஆரம்பித்தார். மாணவர்கள் கணக்கு நோட்டு, பேனா, பென்சில், புத்தகம் என்று சகலத்தையும் தயார் நிலையில் வைத்துக் கொண்டனர். விடுதி மாணவர்கள் இந்த வகுப்பில் மூன்று மாணவர்கள் படிக்கின்றனர். இதில் குமரேசன் தனது புத்தகப்பையில் கையை விட்டு எல்லாத்தையும் எடுத்துவிட்டான். கணக்கு நோட்டை மட்டும் காணவில்லை. பயம் தொற்றிக் கொண்டது. ஒவ்வொரு நோட்டாக எடுத்;துப் பார்த்தான். உறுதியாகிவிட்டது கணக்கு நோட்டை காணவில்லை. முட்டுச் சந்தில் மூத்திரம் பெய்துவிட்டு திரும்பியவன் எதிரில் பாம்பு படம் எடுத்துக் கொண்டு நின்றால் அவனது நாடித்துடிப்பு எப்படி இருக்கும். அவனது முகம் எப்படி பீதியில் உறைந்து போகும். அது போல, குமரேசன் அசைவற்று இருந்தான். பொதுவாக ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது, டேய் பேசாத… டேய் பேசாத.

அங்க எவன்டா பேசிக்கிட்டு இருக்கிறது. வந்தேம்னா முதுகுத் தோலை உறிச்சிடுவேன் என்ற குரல் அனிச்சைச் செயலாக வந்து கொண்டே இருக்கும். ஆனால் ஆசிரியர் துரைச்சாமி இந்த வார்த்தைகளைச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. அவர் சொல்வதும் இல்லை. அல்ஜிப்ராவில் ஒரு கணக்கை நடத்தி முடித்தார். அதே மாடலில் மற்றொரு கணக்கை கரும்பலகையில் எழுதிப் போட்டார். மாதிரி கணக்கை நோட்ல எழுதிக் கொள்ளுங்கள். அதே மாதிரி இந்த கணக்கையும் உடனே செய்து காட்டுங்கள் என்று கூறிவிட்டு மாணவர்களை நோட்டமிட்டார். யாரும் அடுத்தவர்களைப் பார்த்து எழுதிவிடக் கூடாது. பார்த்துவிட்டால் அவ்வளவு தான். மற்ற ஆசிரியர்களைப் போல் முதுகுத் தோலை உறித்துவிடுவேன் என்று சொல்ல மாட்டார். தார்க்கம்பால் முதுகில் இருந்து கால் வரை விளாசி விடுவார். எத்தனை அடி விழுந்தது என்று யாராலும் சரியாக எண்ண முடியாது. ஒவ்வொரு அடிக்கும், அடிவாங்கும் மாணவன் அலறித் துடிப்பது பக்கத்து வகுப்பு மாணவர்களை அமைதிப்படுத்திவிடும். குமரேசனுக்கு வியர்த்து கொட்டியது. துரைச்சாமி சார் டெஸ்க் வரிசைகளுக்கிடையில் மாணவர்களை நோட்டமிட்டவாறு அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு முன்னும் பின்னும் நடந்தார். மூன்றாவது டெஸ்க் அருகில் நின்றார். குமரேசனைப் பார்த்துவிட்டார். ஆசிரியரின் பார்வை மாறியது. கணக்கு செய்யலையா, நோட்டு எங்கே என்றார்? அதட்டலாக.

சார் நோட்டக் காங்கல சார்... குமரேசன் குரல் நடுக்கத்தில் உளறியது. வெளியே வா... என்றவாறு மேசைக்கருகில் சென்றார். பிரம்பை கையில் எடுத்தார். அது தார்க்கம்பு.

சார்... சார்... சார்... ஹோம் ஒர்க் செஞ்சிட்டு மறந்து போய் விடுதியில வச்சிட்டு வந்துட்டேன் சார். சார்சார்... மன்னிச்சிடுங்க சார். சார்சார் மன்னிச்சிடுங்க சார். கையில் கட்டியிருந்த வாட்சைக் கழட்டி மேசை மேல் வைத்துவிட்டு, குமரேசனின் இடது கையைத் தனது இடது கையால் பிடித்துக் கொண்டு துடிக்க துடிக்க அடித்தார்.

சார்சார்... அடிக்காதீங்க சார். சார்சார் அடிக்காதீங்க சார்!.. அலறித் துடித்தான் குமரேசன். புயல் கரையைத் தாண்டி ஆவேசமாக வரும் போது, குடிசை வீடு எவ்வளவு நேரம் தாக்கு பிடிக்கும். குமரேசன் சுருண்டு விழுந்தான். எவ்வளவு தைரியம் இருந்தால் நோட்டை மறந்து வச்சிட்டு வந்துவிட்டேன் என்று சொல்லுவ. மீண்டும் பிரம்பால் அடிக்க பிரம்பு ஒடிந்து விட்டது. ஆசிரியர், மாணவர்கள் பக்கம் திரும்பினார். மாணவர்கள் கணக்கு செய்து கொண்டிருந்தனர். வாட்சை எடுத்து கையில் கட்டிக் கொண்டார்.

குமரேசன் கையைக் கும்பிட்டவாறு முகத்தை கண்ணீரால் கழுவிக் கொண்டே சத்தம் வெளியே வராமல் அடக்கிக் கொண்டு அழுது கொண்டிருந்தான்.

முதல் பீரியட் முடிந்து இரண்டாவது பீரியட் தொடங்குவதற்கு பெல் அடித்தது. ஆசிரியர் துரைச்சாமி, பயிற்சி ஒன்றில் எட்டுக் கணக்கும் ஹோம் ஒர்க், என்று சொல்லிவிட்டு வகுப்பை விட்டு வெளியேறினார், பத்தாம் வகுப்பிற்கு கணக்கு நடத்த.

குமரேசனுக்கு விழுந்த அடியைப் பார்த்து முதல் பெஞ்சு இளகிய மனசுகாரர்களுக்கு கண்ணீர் வந்துவிட்டது. குமரேசனின் விடுதி நண்பன் தமிழரசன், கண்ணீரோடு அவனை அருகில் அமரச் செய்து, எப்படிடா குமரேசா நோட்ட மறந்த.

மாலை பள்ளி விட்டதும் மாணவர்கள் அவரவர் வீடுகளுக்கும், விடுதி மாணவர்கள் விடுதிக்கும் சென்றனர். விளையாட்டு மைதானத்தில் ஓர் மூலையில் பரந்து விரிந்த மரத்தடிக்கு குமரேசனும் அவனது வகுப்பு தோழர்களும் சென்றனர். குமரேசன் தனது சட்டையை கழற்றினான். முதுகில் வரிவரியாக சிவந்தும், தடித்தும் காணப்பட்டது. அதுபோல, காலிலும் ரத்தம் கட்டியிருந்தது. தொடப் பொருக்க மாட்டாமல் வலியால் நெளிந்தான். டேய் மருந்து போட்டால்தான் வலி குறையும் என்றான் தமிழரசன். மருந்து வாங்க காசு வேணும். வார்டன் கிட்ட காசு கேட்டால் எதற்கு என்று கேட்பார். மருந்து வாங்க என்று சொல்ல முடியாது. கணக்கு சார் அடித்தார் என்றால், ஏனென்று கேட்பார், ஏன் நோட்டை எடுத்துக் கொண்டு போகவில்லை என்று திட்டி இவரும் பிரம்பால் நாலு அடி கொடுப்பார், என்றான் மற்றொரு நண்பன்.

அதனால, அதெல்லாம் சரிப்பட்டு வராது. அடிப்பட்ட இடத்தில் வீக்கம் இருந்தால் வெந்நீர் வைத்து ஒத்தடம் கொடுத்தால் வலியும் குறையும். மூவரும் இவனப் பார்த்தனர். நிஜாமாத்தண்டா செல்றேன். எங்க அப்பா சைக்கிள் ஓட்டும் போது நாய் குறுக்கே வந்ததால் கீழே விழுந்து காலில் அடிபட்டு வீக்கம் இருந்தது. அப்போது எங்க அம்மா வெந்நீர் வைத்து தான் ஒத்தடம் போட்டார், சரியாகிவிட்டது.

தமிழரசன் எழுந்தான். தனது பேண்டை சற்று மேலே தூக்கி நிறுத்தினான். பேண்ட் கரண்டைக் காலுக்கு வந்தது. டேய்! நான் போய் சமையல் மாஸ்டர் கிட்ட, பிராஜக்ட் ஓர்க்குக்கு என்று சொல்லி, வெந்நீர் வாங்கி வருகிறேன். துண்டை நனைத்து ஒத்தடம் கொடுப்போம், என்று சொல்லியவன், நண்பர்களின் ஒப்புதலுக்காக சிறிதும் தாமதிக்காமல் ஓடினான். ஜந்தே நிமிடத்தில் வெந்நீரோடு வந்தான்.

நண்பனுக்கு வைத்தியம் நடந்தது. குமரேசனுக்கு உடம்பு வலி குறைந்தது. நண்பர்களுக்கு மனது வலித்தது.

குமரேசன், கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. அப்போது நினைத்தான். துரைச்சாமி சார்! நீங்க நூறாண்டுக்கு எந்த குறையும் இல்லாமல் நலமுடன் வாழனும். நட்புக்கு ஜாதி இல்லை என்று இதை விட யாரும் எங்களுக்கு பாடம் நடத்தியிருக்க முடியாது.

கதையை தொகுத்தவர்,
அகஸ்டியன் ஆசிரியர்,
தென்காசி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக