Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 5 செப்டம்பர், 2019

மோடி அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள “அட்வைஸ்”

மோடி அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள “அட்வைஸ்”
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




பொருளாதார மந்தநிலை விவகாரத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சை கேட்குமாறு பாஜகவுக்கு சிவசேனா அறிவுறுத்தியுள்ளது.


முன்னாள் பிரதமரும் பொருளாதார வல்லுநருமான மன்மோகன் சிங், இந்திய பொருளாதார நிலை குறித்து சமீபத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில், “தற்போது இந்திய பொருளாதாரத்தின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. கடந்த காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதமாக குறைந்தது இந்தியாவில் நீண்ட நாட்களாக தேக்க நிலை நீடித்ததற்கான ஆதாராமாக உள்ளது. இந்திய பொருளாதாரம் இதைவிட வேகமாக வளர்க்க கூடிய சூழல் இருந்தும், மோடி அரசின் தவறான கொள்கைகளால் வளர்ச்சி குறைந்துள்ளது.

மேலும் உற்பத்தி துறையின் வளர்ச்சி வெறும் 0.6 சதவிகிதமாக இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. இதை வைத்து பார்க்கும் போது மோடி அரசு எடுத்த பணமதிப்பிழப்பு மற்றும் தவறான ஜிஎஸ்டி அமலாக்கம் ஆகியவற்றிலிருந்து இந்திய பொருளாதாரம் மீளவில்லை என்று தெரிகிறது. இந்திய பொருளாதாரத்தில் தற்போதைய நிலை நீடிக்க கூடாது. ஆகவே மத்திய அரசு உடனடியாக தலையிட்டு பொருளாதாரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட வேண்டும்” எனத் தெரிவித்து இருந்தார்.

ஆனால், மன்மோகன் சிங்கின் இந்த விமர்சனத்தையும் அறிவுரையும் பாஜக நேற்று நிராகரித்தது. இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “மன்மோகன் சிங்கின் ஆய்வை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. உலகின் 11வது பெரிய பொருளாதாரமாக சக்தியாக இந்தியா இருந்தது. தற்போது, ஐந்தாவது இடத்தை நாம் பிடித்துள்ளோம். மூன்றாவது இடத்தை நோக்கி பயணித்து வருகிறோம்” என்று கூறினார்.

இந்நிலையில், மன்மோகன் சிங்கின் பேச்சை பாஜக ஏற்க வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சாம்னா இதழில், “பொருளாதார மந்தநிலை விவகாரத்தில் அரசியல் செய்யக் கூடாது என மன்மோகன் சிங் போன்ற ஒருவரே கூறியிருக்கிறார். நிபுணர்களின் ஆலோசனைகளை நாம் எடுத்துக் கொண்டு பிரச்னைகளை தீர்க்க வேண்டும். அவருடைய ஆலோசனைகளை கேட்க வேண்டிய நேரம் இது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக