>>
  • சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள் என்ன என்று தெரியுமா?
  • >>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 5 செப்டம்பர், 2019

    கிருஷ்ணகிரி அருங்காட்சியகம் !!

     Image result for கிருஷ்ணகிரி அருங்காட்சியகம் !!

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com


    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்திற்கு கிருஷ்ணகிரியிலிருந்து காந்தி சாலை வழியாகவும், சேலம் மற்றும் தருமபுரியிலிருந்து கிருஷ்ணகிரி வந்தும் செல்லலாம்.

    சிறப்புகள் :

    கலை மற்றும் தொல்லியல், மானிடவியல், மண்ணியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பிரிவுகளைச் சேர்ந்த பொருட்கள் இவ்வருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    இம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ள நடுகற்கள், இவ்வருங்காட்சியகத்தின் முக்கிய காட்சிப்பொருட்களாக அமைந்துள்ளது.

    இங்குள்ள காட்சிப்பொருட்களின் வழியாக பழைய கற்காலம் தொடங்கி புதிய கற்காலம், பெருங்கற்படைக்காலம் மற்றும் வரலாற்றுக்காலம் என இம்மாவட்டத்தின் தொடர்ச்சியான வரலாற்றினை தெரிந்து கொள்ள முடிகிறது.

    புதிய கற்காலத்தைத் தொடர்ந்து இம்மாவட்டத்தில் பெருங்கற்படைக்கால கலாச்சாரம் பரவியிருந்ததை இங்குக் காணக் கிடைக்கும் பல்வேறு வகையான சின்னங்கள், பாறை மற்றும் கல் திட்டைகளில் காணப்படும் ஓவியங்கள், இரும்பு ஆயுதம் மற்றும் கருப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் வாயிலாகத் தெரிந்துக்கொள்ள முடிகிறது.

    இந்த அருங்காட்சியகத்தில், பழங்கால மக்கள் பயன்படுத்திய பானைகள், சுடுமண் படிமங்கள், இருளர் பொருட்கள், நடுகல் (வீரக்கல்), பதப்படுத்தப்பட்ட விலங்குகள், கல் சிலைகள், மரப் படிமங்கள், உலர் தாவரங்கள், மூலிகைப்பொருட்கள், கூத்துக் கலைப்பொருட்கள், பனையோலைகள், அருங்காட்சியக வெளியீடுகள் போன்ற பல வகையான பொருட்கள் இங்கு உள்ளன.

    பேருஹள்ளி, நெடுசால், காவேரிப்பட்டணம் மற்றும் பீமாண்டப்பள்ளி ஆகிய இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட கற்சிலைகள் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவர்கின்றன.

    கங்காதரர், பைரவர் உள்ளிட்ட மரச்சிற்பங்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள தேர்களில் இருந்து கொண்டுவந்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    பாறை, கனிமம் மற்றும் கல்மாறி ஆகிய மண்ணியல் பொருட்கள், தாவரவியலின் மருத்துவத் தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள், புதர்க்காடு, ஊர்வன, சில விலங்கு மற்றும் பறவைகளின் மண்டை ஓடுகள், பறவைகளின் இயற்கை சூழல் போன்ற விலங்கியல் காட்சிப்பொருட்கள் என பொதுமக்களை மட்டுமல்லாமல் மாணவர்களையும் ஈர்க்கும் வகையில் உள்ளன.

    எப்படி செல்வது?

    கிருஷ்ணகிரிக்கு சேலம், தர்மபுரி, சென்னை போன்ற முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. கிருஷ்ணகிரியிலிருந்து கார் அல்லது பேருந்து மூலம் அரசு அருங்காட்சியகத்திற்கு செல்லலாம்.

    எங்கு தங்குவது?

    கிருஷ்ணகிரியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.




    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக