Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 21 செப்டம்பர், 2019

ஏத்தர் நிறுவனத்தையும் விட்டுவைக்காத கஷ்ட காலம்: சந்தையை விட்டு வெளியேறும் பிரபல மாடல்!!!


 Image result for ஏத்தர் நிறுவனத்தையும் விட்டுவைக்காத கஷ்ட காலம்: சந்தையை விட்டு வெளியேறும் பிரபல மாடல்!!!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


அண்மையில் சென்னையில் களமிறங்கிய ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் ஏத்தர் 340 மாடல் விற்பனையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனம் ஏத்தர் எனர்ஜி. இந்நிறுவனம், மின்சார வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது.
அந்தவகையில், ஏத்தர் 340 மற்றும் ஏத்தர் 450 ஆகிய இரு மாடல் மின்சார ஸ்கூட்டர்களை இந்நிறுவனம் விற்பனைச் செய்து வருகின்றது. இதில், ஏத்தர் 450 மாடலைக் காட்டிலும் 340 மாடல் குறைவான திறனைக் கொண்ட மாடலாக இருக்கின்றது.

ஆனால், ஸ்டைல் மற்றும் சிறப்பம்சத்தில் இரண்டும் ஒரே தரத்தில் காணப்படுகின்றது. இருப்பினும், இரு மாடல்களுக்கும் இடையே இருக்கும் விலை வித்தியாசத்தால், ஒரு சில அம்சங்கள் மட்டும் கூடுதல் சிறப்பு பெற்றதாக ஏத்தர் 450 மாடலில் காணப்படுகின்றது.
 
இதனால், ஏத்தர் 340 மாடலைக் காட்டிலும் 450 மாடலுக்கே இங்கு நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. அதேசமயம், ஏத்தர் நிறுவனம், முன்னதாக பெங்களூருவில் மட்டுமே அதன் தயாரிப்புகளை விற்பனைச் செய்து வந்தது. தற்போது, அதன் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் விதமாக சென்னையிலும் விற்பனை நிலையங்களைத் தொடங்கியுள்ளது.
இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டும் விதமான முயற்சிகளை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.
அதுமட்டுமின்றி, ஒரு சில வெளிநாடுகளுக்கும் ஏத்தர் மின்சார ஸ்கூட்டர்களை ஏற்றுமதி செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில், குறைவான விற்பனை விகித்தைப் பெற்று வரும் ஏத்தர் 340 மாடலை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் சந்தையில் இருந்து விலக்கிக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதற்கான அறிவிப்பை அந்நிறுவனம், அதன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
ஏத்தர் 340 மாடலில் பிஎல்டிசி எனப்படும் பிரஷ்லெஸ் டிசி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதே தரத்திலான மின்மோட்டார்தான் ஏத்தர் 450 மாடலிலும் காணப்படுகின்றது.
அதேசமயம், பேட்டரி திறனைப் பார்த்தோமேயானால் 340 மாடலில் 1.92kWh என்ற குறைவான அளவுடைய பேட்டரியே அதில் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு முழுமையான சார்ஜில் 60கிமீ தூரம் வரை பயணிக்கும்.
இதேபோன்று, 4.4kW திறன் கொண்ட மின் மோட்டார் அதிகபட்சமாக 70 கிமீ வேகத்தில் செல்ல உதவுகின்றது. இது 0-40 கிமீ வேகத்தை 5.1 விநாடிகளில் தொட்டுவிடும்.
அதேசமயம், டாப் ஸ்பெக் மாடலாக இருக்கும் ஏத்தர் 450 மாடல் ஒரு முழுமையான சார்ஜில் 75 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறனைக் கொண்டுள்ளது. இது அதிகபட்சமாக மணிக்கு 88 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. மேலும், 0-த்தில் இருந்து 40 கிமீ என்ற வேகத்தை வெறும் 3.9 செகண்டுகளில் தொட்டுவிடும்.
இதுபோன்ற பல காரணங்களால் ஏத்தர் 350 மாடலைக் காட்டிலும் 450 மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.
இதில், ஏத்தர் 350 மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 1,19,091 என்ற விலை விற்பனைச் செய்யப்பட்டு வந்தது. அதேபோன்று, 450 மாடல் எலக்ட்ரிக் சற்று கூடுதலான ரூ.1,31,683 என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இவை, ஆன்ரோடு விலையாகும்.
விலை சற்றே வித்தியாசமாக காணப்பட்டாலும், திறனில் 450 மின்சார ஸ்கூட்டர் வரவேற்கும் வகையில் இருப்பதும் அதன் அதிக விற்பனைக்கு ஓர் முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது.
மேற்கூறிய விலைகள் மத்திய அரசின் ஃபேம்-2 மானியத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் விலையாகும். ஆனால், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், பெங்களூருவில் ரூ. 8 ஆயிரம் முதல் ரூ. 9 ஆயிரம் வரை விலைக் குறைவாக விற்கப்படுகின்றது. இதற்கு, கர்நாடகா-தமிழ்நாடு இடையில் உள்ள விரி விதிப்பு வித்தியாசமே காரணமாக இருக்கின்றது.
ஏத்தர் நிறுவனம், 340 மாடலின் சந்தை விலகல்குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னதாகவே, அதன் மலிவு விலை மின்சார ஸ்கூட்டர்குறித்த அறிவிப்பை வெளியிட்டுவிட்டது.
இந்த மலிவு விலை மின்சார ஸ்கூட்டர் தற்போது விற்பனையில் இருக்கும் ஏத்தர் 340 மற்றும் 450 ஸ்கூட்டர்களின் விலையைக்காட்டிலும் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 22 ஆயிரம் வரை குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் தெரிவிக்கின்றன.
மலிவு விலைக்கேற்ப அதில் சிள சிறப்பம்சங்கள் தற்போது விற்பனையில் இருக்கும் மாடல்களைக் காட்டிலும் குறைவானதாகவே இருக்கும் என கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக