இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
வாட்ஸ்அப்பில்
வந்திருக்கும் புதிய அப்டேட்டில், ஸ்டேட்டஸ் பதிவுகளை நேரடியாகவே மற்ற தளங்களில் பகிர்ந்துகொள்ளும்
வசதி கொடுக்கப்பட்டுள்ளது. சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட வாட்ஸ்அப், தற்போது
மக்களின் முக்கியத் தகவல்தொடர்புத் தளமாக இயங்கிவருகிறது. அதனாலேயே இந்த ஆப், தேவைகளுக்கேற்ப
பல வகையில் தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. பிரைவசி மற்றும் பயனாளர்களுக்கு
உதவும் வசதிகள் போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு, வாட்ஸ்அப் அப்டேட் ஆகிக்கொண்டே
இருக்கிறது.
கடந்த செப்டம்பர்
3-ம் தேதி, வாட்ஸ்அப்பின் வெர்ஷன் 2.19.244 வெளியானது. அப்டேட் அவ்வப்போது வருவதுதானே,
இதில் என்ன ஸ்பெஷல் என நீங்கள் கேட்கலாம். இதில், முன்பில்லாத சில புதிய அம்சங்கள்
கொண்டுவரப்பட்டுள்ளன. இனி குரூப், பிரைவேட் சாட்டிலும் நமக்கு வரும் ஆடியோக்களை ஒவ்வொன்றாக
ப்ளே செய்யத் தேவையிருக்காது. வரும் ஆடியோக்கள் மியூசிக் பிளேயர் போல வரிசையாய் ப்ளே
ஆகும் புதிய வசதி இந்த அப்டேட்டில் இடம்பெற்றிருக்கிறது. இந்த வெர்ஷனில் இன்னொரு புதிய
வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.
இனிமேல், நாம்
பதிவுசெய்யும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்கள் அனைத்தையும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில்
நேரடியாகப் பகிரமுடியும். வாட்ஸ்அப் பகிர்வாக அல்லாமல், அந்தந்தத் தளங்களின் ஸ்டேட்டஸாகவே
அதை நாம் அந்த ஆப்களில் பகிரமுடியும். முன்பு, ஒரு புகைப்படத்தையோ வீடியோவையோ, எழுத்துப்பதிவுகளையோ
ஒருமுறை வாட்ஸ்அப்பில் பதிவிடுவோம். பின்னர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆப்
சென்று, அதிலும் மீண்டும் அதைப் பதிவிடுவோம். வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டால் அந்த
வேலை மிச்சப்படும்.
மேலும், ஃபைல்
ட்ரான்ஸ்ஃபர் லிமிட்டை 100 MB-யாக உயர்த்தியிருக்கிறது வாட்ஸ்அப். இந்தப் புதிய வசதிகள்,
வாட்ஸ்அப் பயனாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக