இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
திருநெல்வேலியிருந்து
ஏறத்தாழ 54கி.மீ தொலைவிலும், கல்லிடைக்குறிச்சியில் இருந்து ஏறத்தாழ 12கி.மீ
தொலைவிலும், மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள அழகிய அருவிதான் மணிமுத்தாறு அருவி.
சிறப்புகள் :
மலையில்
காடுகளைக் கடந்து சென்று அழகான மணிமுத்தாறு அருவியை அடைய வேண்டும். மாஞ்சோலை
எஸ்டேட் செல்லும் வழியில் இந்த அருவி இருக்கிறது.
அருவியில்
குளிப்பது என்பது மகிழ்ச்சியான அனுபவம். மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சியை
கொடுக்கும்.
அந்த
அனுபவத்திற்காக அருவிகளுக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை எப்போதுமே
அதிகரித்து வருகிறது.
மணிமுத்தாறு
அணை மற்றும் அருவி, பொதிகை மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
இயற்கை
வளம் கொண்ட இந்த இடம் வண்ணமயமான அழகை கொண்டுள்ளது. மேலும் இங்கே மலைகளும்,
தண்ணீரும், ஆகாயமும் ஒன்று சேர்ந்து காணப்படும் காட்சி, அழகுக்கு அழகு சேர்க்கும்
விதமாக இருக்கும்.
மணிமுத்தாறு
அருவி, அணையிலிருந்து சிறிது தூரம் தொலைவில்தான் உள்ளது. இதுவும் அணையின் அழகிற்கு
சிறிதும் சளைத்தது அல்ல.
நீண்ட
தொலைவில் உள்ள உயர்ந்த மலைகளில் இருந்து அரிய மூலிகைகள் கலந்து ஓடி வரும் இந்த
தண்ணீர் உடலில் பட்டதுமே மெய்சிலிர்க்க வைக்கும்.
இந்த
அருவி பகுதிக்கு அருகில் கோதையாறு அமைந்துள்ளது. இருசக்கர வாகனங்களில் சாகசம்
செய்பவர்கள் இப்பகுதியை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
இது
புகைப்படங்கள் எடுக்கவும், இயற்கை சுற்றுலாவிற்கும் மிகச் சிறந்த இடமாகும்.
எப்படி செல்வது?
திருநெல்வேலியில்
இருந்து மணிமுத்தாறு அருவிக்கு பேருந்து மூலமாகவும் செல்லலாம்.
கார்
அல்லது வாகனங்களின் மூலம் சென்றால் இயற்கையை ரசித்துக்கொண்டே செல்ல முடியும்.
எப்போது செல்வது?
அனைத்து
காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
திருநெல்வேலி
மற்றும் கல்லிடைக்குறிச்சியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள்
உள்ளன.
இதர சுற்றுலாத்தலங்கள் :
குற்றாலம்.
அகஸ்தியர்
அருவி.
கூந்தன்குளம்
பறவைகள் சரணாலயம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக