Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 4 அக்டோபர், 2019

திருடனின் “பலே” கைவரிசை..!

 Image result for திருடனின் “பலே” கைவரிசை..!


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


தூத்துக்குடி, ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர், வெளிநாடுகளுக்கு மக்காச்சோளம் ஏற்றுமதி செய்து வருகிறார். கடந்த மாதம் 28-ம் தேதி தன் மனைவியுடன் சென்னையில் உள்ள மகன் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
இந்நிலையில், உள்ளூரில் உள்ள மற்றொரு மகனான மணிமாறன் தற்செயலாக தந்தையின் வீட்டுக்குச் சென்றபோது வீட்டின் முன்பக்க கிரில் கேட் உடைக்கப்பட்டிருந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு உள்ளே வைக்கப்பட்டிருந்த பொருள்கள் கட்டிலில் சிதறிக் கிடந்தன. பீரோவில் இருந்த தங்க நகைகளும் திருடு போனது தெரிய வந்தது.
வீட்டின் பின்புற கதவை உடைக்க முயன்ற கொள்ளையர்கள், உடைக்க முடியாதபோது முன்பக்க கிரில் கேட் மற்றும் கதவை உடைத்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து வடபாகம் போலீஸில் புகார் அளித்துள்ளார் மணிமாறன்.
வீட்டின் வெளிப்பகுதியில் கொள்ளையர்கள் சிவப்பு நிற கைப்பை ஒன்றை விட்டுச் சென்றுள்ளனர். போலீஸாரின் சோதனையில் அந்தப் பையைத் திறந்து பார்த்தபோது அதில், ஒரு ரூபாய் முதல் 10 ரூபாய் வரையிலான சுமார் 10,000 மதிப்புள்ள நாணயங்கள் இருந்துள்ளன.

இதற்கிடையில், கொள்ளை நடந்த வீட்டின் அருகில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்துக்குள் புகுந்து அங்கு வைக்கப்பட்டிருந்த இரண்டு உண்டியல்களை உடைத்து அதிலிருந்த சுமார் 20,000 மதிப்புள்ள பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
ஜெயபிரகாஷின் வீட்டில் நகைகளைக் கொள்ளையடித்த கொள்ளைக் கும்பல்தான் தேவாலயத்திலும் காணிக்கை உண்டியலை உடைத்து பணத்தைக் கொள்ளை அடித்திருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.
தேவாலயத்தில் கொள்ளை அடித்த பிறகு, பூட்டிக்கிடந்த ஜெயப்பிரகாஷ் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகைகளைத் திருடி இருக்கலாம் எனப் போலீஸார் தெரிவிக்கின்றனர்.

எதிர்பார்த்ததைவிட, அதிக அளவு நகைகள் கிடைத்ததால், உண்டியலில் கிடைத்த நாணயங்கள், ரூபாய் நோட்டுகளில் நோட்டுகளை மட்டும் எடுத்துக்கொண்டு நாணயங்களைக் கொள்ளையர்கள் பையுடன் விட்டுச் சென்றுவிட்டனர்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக