வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து
பல்வேறு புதிய வசதிகளை கொண்டுவந்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனம்
கொண்டுவரும் அனைத்து அம்சங்களும் பல்வேறு மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது
என்றுதான் கூறவேண்டும்.
பேஸ்புக்
நிறுவனம்
குறிப்பாக பேஸ்புக் நிறுவனம்
வாட்ஸ்ஆப் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதும், அடுத்தடுத்த புதிய அப்டேட்களை வழங்கி
வருகிறது. பின்பு பாதுகாப்பு வசதியை மேம்படுத்தும் நோக்கிலும், பயனாளர்களை கவரும்
விதத்திலும் இந்த புதிய அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன.
வாட்ஸ்ஆப்
பே சர்வீஸ்
அதன்படி ஏற்கெனவே சோதனையில்
உள்ள ஒரு அப்டேட் தான் வாட்ஸ்ஆப் பே சர்வீஸ். குறிப்பாக டிஜிட்டல்
பணப்பரிவர்த்தனைக்காக உருவாக்கப்பட்ட வாட்ஸ்ஆப் பே சர்வீஸ், பேடிஎம் மறறும் கூகுள்
போல செயல்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கடந்த ஒரு வருடங்களாக
சோதனை முயற்சியில் இருக்கும் வாட்ஸ்ஆப் பே சர்வீஸ் இன்னும் இரண்டு மாதத்திற்குள்
அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிகமான பயனாளர்களை கொண்டுள்ளதால்,
வாட்ஸ்ஆப் பணப்பரிவர்த்தனை நிச்சியம் பணம் அல்லாத பரிவத்தனையை ஊக்குவிக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக