இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சென்னை,
தி.நகர் உஸ்மான் ரோட்டில் சரவணா ஸ்டோர்ஸ் எலைட் என்ற பெயரில் நகைக்கடை
செயல்பட்டுவருகிறது. இந்தக் கடையின் நிர்வாக இயக்குநர் சிவஅருள்துரை மாம்பலம்
காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய
போலீஸார், திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த தனசேகர், புதுப்பேட்டையைச் சேர்ந்த
சையது அபுதாகீர், எண்ணூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகதீசன், புதுப்பேட்டையைச்
சேர்ந்த வழக்கறிஞர் அமானுல்லா, கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீராம்,
தாம்பரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் முருகன், வடபழனியைச் சேர்ந்த அ.திமு.க பிரமுகர்
முருகன், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமால், பல்லாவரத்தைச் சேர்ந்த
டிரைவர் தண்டபாணி, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வெங்கடேசன் ஆகிய 10 பேரை கைது
செய்துள்ளனர்.
இந்தச்
சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய போலீஸார், ``திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த
தனசேகர், யுனிவர்சல் பிரஸ் மீடியா என்ற அமைப்பின் துணைத் தலைவராக இருப்பதாக ஐ.டி
கார்டுகளை வைத்துள்ளார். இவர், கடந்த 3.11.2019-ல் பழைய தங்க நாணயங்களைக் கொடுத்து
3 சவரன் தங்கச் செயினை வாங்கியுள்ளார். அப்போது, `தங்கச் செயின் போலி' என்று
கூறியதோடு பிரஸில் தகவலைச் சொல்லி அசிங்கப்படுத்திவிடுவதாக மிரட்டி 15 லட்சம்
ரூபாய் வாங்கியுள்ளார்.
அதன்பிறகு
13-ம் தேதி மீண்டும் தனசேகர் உட்பட சிலர் கடைக்கு வந்து ஒரு கோடி ரூபாயைக் கேட்டு
மிரட்டியுள்ளனர். இதையடுத்து கடையிலிருந்து காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு
போனில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில்
சம்பவ இடத்துக்கு மாம்பலம் போலீஸார் சென்று விசாரித்தனர். அப்போது சிலர்
அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். 10 பேரை மடக்கிப்பிடித்து காவல் நிலையத்துக்கு
அழைத்து வந்து விசாரித்தோம். பிடிப்பட்டவர்களிடமிருந்து பிரஸ் ஐ.டி கார்டுகள்,
காவல்துறை ஐ.டி கார்டு உட்பட மேலும் சில கார்டுகளைப் பறிமுதல் செய்துள்ளோம்.
மேலும், ஏர்கன், கைத்துப்பாக்கி, இரண்டு பட்டன் கத்திகள், 1,10,000 ரூபாய், இரண்டு
கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம். இவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
செய்யப்பட்டுள்ளது. 10 பேரையும் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்
அடைத்துள்ளோம்" என்றனர்.
இதுகுறித்து
சம்பந்தப்பட்ட ஜூவல்லரியின் மேலாளர் பாலுவிடம் பேசியபோது, ``காவல் நிலையத்தில்
முழுவிவரங்களையும் தெரிவித்துள்ளோம்" என்று மட்டும் பதில் அளித்தார்.
தமிழ்நாடு
வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரம ராஜாவிடம் பேசினோம். ``சென்னையில்
வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாக நடந்துவருகின்றன.
இந்தச் சம்பவங்களில் ஈடுபடுகின்றவர்களில் சிலர், வழக்கறிஞர்களாக உள்ளனர்.
தி.நகரில்
உள்ள ஜூவல்லரி கடையிலும் மிரட்டியவர்கள், முதலில் பணத்தைப் பெற்றுக்கொண்டு
சென்றுள்ளனர். அதன்பிறகு மீண்டும் பணம் கேட்டு மிரட்டியதால்தான் காவல் நிலையத்தில்
புகார் கொடுக்கப்பட்டது.
கடந்த
சில மாதங்களுக்கு முன், பாரிமுனையில் உள்ள பிரபலமான இட்லிகடையில் சாப்பிட்ட
வழக்கறிஞர் ஒருவர் புழு கிடப்பதாகக் கூறி கடையின் உரிமையாளரை மிரட்டினார். அடுத்து
குரோம்பேட்டையில் உள்ள பிரபலமான கடையிலும் இதுபோன்ற மிரட்டல் சம்பவம் நடந்தது.
பிரபலமான மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வந்த டீக்கடையை வழக்கறிஞர் டீம்
ஒன்று, ஜே.சி.பி மூலம் இடித்துத் தள்ளியது.
அப்போது
டீக்கடையிலிருந்த ஊழியர்களும் பொதுமக்களும் தப்பியோடினர். தற்போது தி.நகரில் உள்ள
ஜூவல்லரி கடையிலும் மிரட்டியவர்கள், முதலில் பணத்தைப் பெற்றுக்கொண்டு
சென்றுள்ளனர். அதன்பிறகு மீண்டும் பணம் கேட்டு மிரட்டியதால்தான் காவல் நிலையத்தில்
புகார் கொடுக்கப்பட்டது. வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பவர்கள் மீது கடும்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனைச் சந்தித்து
மனு அளிக்க உள்ளோம்" என்றார் கொதிப்புடன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக