Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 16 நவம்பர், 2019

நீங்க உண்மைனு நம்பி பயப்படுகிற 10 அமானுஷ்ய மூடநம்பிக்கைகள்... சுத்தப்பொய்...

 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


உலக நாடுகள் முழுவதும் பல்வேறு வகையான மூடநம்பிக்கைகள் நிலவி வருகின்றன. அதில் நிறைய பெரும் அச்சத்தையும் செயல் தடைகளையும் உண்டாக்குபவை. ஆனால் அவை சுத்தப் பொய். அதுபற்றி தான் இந்த தொகுப்பில் நாம் பார்க்கப் போகிறோம்.

மூடநம்பிக்கைகள்


நாம் பலரும் பல விதமான மூடநம்பிக்கைகளைக் கேட்டு வளர்ந்திருக்கிறோம். பூனை குறுக்கே வந்தால் வெளியே செல்வதைத் தவிர்க்கவும். ஏணிக்கு அடியில் சென்றால் கெட்டது, எனப் பலவகையான மூடநம்பிக்கைகள் நமது நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பல பரவிக் கிடக்கின்றன.
குறிப்பாக வெள்ளிக்கிழமை 13ம் தேதி என்பது வெளிநாடுகளில் பலரும் வெறுக்கும் ஒரு நாள் பலர் வெள்ளிக்கிழமை 13ஆம் தேதி என்றால் ஒருசிலருக்கு மனதில் பயம் உண்டாகும். வெள்ளிக்கிழமை 13 ஆம் தேதியை மையம் கொண்டு வெளிநாடுகளில் பல திகில் படங்கள் வெளிவந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் தும்மல் போடும் போது காட் பிலஸ் யூ எனச் சொல்வதும் சிலர் வழக்கமாக வைத்துள்ளனர்.
ஆனால் இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளுக்குப் பின்னால் பல ஆச்சரியமான காரணங்கள் உள்ளது. அவற்றில் சுவாரசியமான சில மூடநம்பிக்கைகளைப் பற்றியும் அது உண்மையா எனவும் சிறிது ஆராய்ந்து பார்ப்போம்.

வெள்ளிக்கிழமை 13ம் தேதி



வெளிநாடுகளில் வெள்ளிக்கிழமை 13ஆம் தேதி என்பது பலருக்கு மிகவும் துரதிர்ஷ்டவசமான நாள் என்றும் நம்புகின்றனர், வெள்ளிக்கிழமை 13ம் தேதி பொதுவாகக் கெட்ட விஷயங்கள் நடக்கும் என்றும் சிலர் இன்றும் அளவும் நம்புகின்றனர். சில விடுதிகளில் 13நம்பர் அறை முற்றிலும் தவிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் சில விமானங்களில் 13ஆவது வரிசை இல்லாமலும் உள்ளது. இந்தப் 13 கெட்ட எண் என்பது 2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியவை எனச் சொல்கின்றனர். அதாவது இயேசுவின் 13ஆம் சீடரான யூதாஸ் என்பவரே இயேசுவைக் காட்டிக் கொடுத்தார் அவர் இயேசு கடைசியாக உணவருந்தும் போது 13 ஆவது நபராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை மனதில் வைத்து சிலர் 13 ராசி ஏற்ற என் எனக் கிளப்பிவிட இன்றும் அளவும் அதைப் பலபேர் நம்புகின்றனர். வெளிநாடுகளில் மட்டுமில்லாமல் நம் ஊர்களிலும் ஒரு சிலர் 13 கெட்ட என்ன நம்புகின்றனர்.

உள்ளங்கை அரித்தால் யோகம்


உள்ளங்கை அரித்தால் யோகம் எனவும் மூடநம்பிக்கைக்குப் பல வித்தியாசமான காரணங்கள் உள்ளது. பலரும் பலவிதமாக இதைக் கூறுகின்றனர். இது ஷேக்ஸ்பியர் எழுதிய ஜூலியஸ் சீசர் எனும் நூலிலிருந்து உருவானது எனக் கூறுகின்றனர். உள்ளங்கை அரித்தால் நீங்கள் புது நபரைப் பார்க்கப் போகிறீர்கள் என்று ஒரு சிலர் கூறுவார்கள். வலது கை அரித்தால் பணம் வரும் என்று சிலர் கூறுவார்கள். இடது கை அரித்தால் பணம் செலவழியும் என்று சிலர் கூறுவார்கள். இது போன்று பல பேர் பல விதமாக உள்ளங்கை அரிப்பு பற்றி மூடநம்பிக்கைகளைப் பரப்பியுள்ளனர் அது இன்றளவும் உண்மையா என நிரூபிக்கவில்லை. ஆனாலும் சிலர் இதை இன்றும் பின்பற்றி வருகின்றனர்.

ஏணிக்கு அடியில் சென்றால் கெட்டது

 

இங்கு நாம் குறிப்பிடுவது முக்கோண வடிவிலான இருபக்க ஏணி. நம் நாட்டிலும் பல வெளிநாடுகளிலும் இருப்பதாக எனக்கு அடியில் சென்றால் கெட்டது நடக்கும் எனப் பல பேர் கூறி வருகின்றனர். பலர் அதை நம்பியும் வருகின்றனர். ஏணிக்கு அடியில் சென்றால் அது மடங்கி கீழே விழும் என்பதனால் சொல்கின்றனர் என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் பல மூட நம்பிக்கை கொண்ட காரணங்கள் அதில் உள்ளன.
அதில் முக்கியமான காரணம் என்பது, இருபக்க ஏணி முக்கோண வடிவில் ஆனவை. வெளிநாடுகளில் முக்கோண வடிவம் என்பது தீய சக்தியைக் குறிக்கும் ஒரு வடிவமாகப் பார்க்கப்படுகிறது. முக்கோண வடிவில் சாத்தான்கள் போன்ற தீய சக்திகள் இருக்கும் எனப் பலரும் என்றும் நம்புகின்றனர். எனவே முக்கோண வடிவில் இருக்கும் இருபக்க ஏணிக்கு அடியில் செல்லும் போது, அங்கு இருக்கும் தீய சக்திகளை நாம் எழுப்பி விட்டு விடுவோம் என்றும் அதனால் நமக்குக் கெடுதல் நேரும் என்றும் நம்புகின்றனர். ஒருவேளை நாம் தவறுதலாக இருபக்க ஏணிக்கு அடியில் சென்று விட்டோம் என்றால், நாம் கட்டைவிரலைநடு விரலுக்குள் நுழைத்து குறைந்தபட்சம் ஒரு ஐந்து நொடி வைத்துக்கொண்டால், கெடுதல் நடப்பதைத் தவிர்க்கலாம் எனவும் கூறுகின்றனர்.

கண்ணாடி உடைந்தால் கெட்டது


பல மூட நம்பிக்கை வாய்ந்த மக்கள், கண்ணாடி உடைவது பெரும் கெட்டது எனக் கூறுகின்றனர். அதுவும் சிலர் கண்ணாடி உடைந்தால் 7 வருடம் நமக்குக் கெட்டது நடக்கும் எனவும் அதன் பின்னர்தான் அது சரியாகும் என்றும் கூறுகின்றனர். ஏழு வருடம் என்பது நம் உடலில் உள்ள செல்கள் புதிதாக முழுமையாக மாறும் காலம் ஆகும். கண்ணாடி உடைந்தால் நமக்குக் கெடுதல் என அவர்கள் கூறும் காரணம் என்னவென்றால் கண்ணாடியில் நமது உருவம் தெரியும் எனவும் அது சுக்கு நூறாக உடையும் பொழுது, நமது ஆன்மாவுக்கு அது கேடு விளைவிக்கும் என்றும் கூறுகின்றனர். மேலும் கண்ணாடி தவறி உடைந்து விட்டால் அதிலிருந்து அதில் நடக்கும் தீயதிலிருந்து விடுபட, உடைந்த கண்ணாடியை இரவு நேரம் நிலா வெளிச்சத்தில் குழிதோண்டிப் புதைத்து விடுமாறு கூறுகின்றனர். அப்படிச் செய்தால் தோஷம் விலகும் என்று நம்புகின்றனர்.

குதிரை லாடம் நல்லது


ஒரு சில நாடுகளில் குதிரை லாடம் கண்டால் , அதைக் கண்டவருக்கு மிகவும் நல்லது எனக் கூறுகின்றனர். குதிரை லாடம் யு வடிவிலானது, அந்த யூ வடிவு பலரும் ஒரு நல்ல வடிவாகக் கருதுகின்றனர். எத்தனை லாடம் கிடைக்கின்றதோ அத்தனை வருடம் அவருக்கு நல்லது நடக்கும் எனவும் பலர் இன்றளவும் நம்புகின்றனர். குதிரை லாடம் கிடைத்தால் அதில் ஒரு முனையில் துப்பிவிட்டு நமது இடது தோளில் வைத்துக்கொண்டு, அது எங்குக் கிடைத்ததோ அங்கே விட்டுவிட்டால் மிகவும் நல்லது என்று கூறுகின்றனர். அல்லது அதை நம் வீட்டு வாசலில் திறந்தவெளியில் தொங்க விட்டால் நமக்கு நல்லது நடக்கும் எனவும் நம்புகின்றனர்.

வீட்டிற்குள் குடை பிடித்தால் ஆபத்து


வீட்டுக்குள் குடை பிடித்தால் கெட்டது என்று சிலர் கூறுவது நமக்கு முட்டாள்தனமாக ஒரு காரியமாகத் தெரியும், சிலர் வீட்டிற்குள் இருக்கும் பொழுது அருகில் இருக்கும் யார் கண்ணிலும் பட்டு விடாமல் இருப்பதற்காக இது பரப்பப்பட்ட ஒரு வதந்தி எனக் கூறுகின்றனர். ஆனால் ஒரு சிலர் வீட்டிற்குள் குடை பிடித்தால் குடை பிடிப்பவர்கள் இறந்து விடுவார்கள் எனச் சொல்கின்றனர். ஏனென்றால் குடை, வெயிலில் சூரியனிடம் இருந்து நம்மைப் பாதுகாக்கும். அதே குடையை வீட்டிற்குள்ளும் நாம் பிடித்தால், சூரியக் கடவுளை நாம் அவமானம் செய்துவிட்டதாகக் கருதி நமக்குத் தண்டனை கிடைக்கும் என நம்புகின்றனர்.

கதவை இரண்டு தடவை தட்டினால் கெட்டது


இந்த மூடநம்பிக்கை சில காலங்களுக்கு முன் மரங்களைத் தெய்வமாக வணங்கிய போது ஆரம்பித்ததாகச் சொல்கின்றனர். அப்பொழுது தமக்கு வேண்டியவற்றைக் கடவுளிடம் அதாவது மர கடவுளிடம் கேட்குமுன், ஒரு முறை தட்டிவிட்டுக் கேட்பார்களாம், பின்பு அந்தக் காரியம் விட்டால் கடவுளுக்கு நன்றி சொல்வதற்காக மீண்டும் தட்டுவார்கள். எனவே நாம் இருமுறை தட்டினாள் நமக்கு நான் கேட்டது கிடைத்து விட்டது என்று கடவுள் ஏதும் செய்ய மாட்டாராம். இந்த மூட நம்பிக்கையும் பலர் இன்னும் பின்பற்றி வருவது மிகவும் ஆச்சரியம் அளிக்கிறது.

தோளில் உப்பு விழுந்தால் நல்லது


உப்பு மிகவும் முக்கியமான ஒரு பொருளாக மனித வரலாற்றிலிருந்து வருகிறது தீய சக்திகளை விரட்டும் பல பூஜைகளில் உப்பைப் பயன்படுத்துவார்கள், அந்த உப்பு நமது தோளில் சிந்தினால், நல்லது நடக்கும் எனவும் தீயசக்திகளிடமிருந்து அது நம்மைப் பாதுகாக்கும் எனவும் நம்புகின்றனர். கைகளில் சிறிதளவு உப்பு சிந்தினாலும் அதை எடுத்து நமது இடது தோளில் போட்டு விட்டால் நமக்கு நடக்கவிருக்கும் கெட்ட விஷயம் மறைந்து விடும் எனவும் மூடநம்பிக்கை பின்பற்றுபவர்கள் நம்பி வருகின்றனர்.

கருப்பு பூனை கெட்டது


பூனை வளர்க்க விரும்புவார்கள் இதை இந்த காலகட்டத்தில் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் ஆனால் சில வருடங்களுக்கு முன் கருப்பு பூனை என்பது பெரிதும் ஒரு கெட்ட சகுனமாகப் பார்த்துள்ளார்கள். கர்ப்ப பூனை ஏழு வருடங்களில் ஒரு அமானுஷ்ய சக்தியாக மாறும் எனப் பலரும் நம்பி உள்ளனர். பல நாடுகளை ஆக்கிரமித்த சக்திவாய்ந்த மனிதர்களான ஹிட்லர், நெப்போலியன் போன்றவர்களும் கருப்பு பூனையைக் கண்டு பயம் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தும்மினால் நல்ல விஷயம்



தும்மினால் என்னங்க நல்ல விஷயம், ஜலதோஷம் இருக்கும் போது ஏழு நாளும் பலர் தும்மிக் கொண்டே இருப்பார்கள், ஆனால் ரோம் போன்ற சில நாடுகளில் தும்மினால் நல்ல விஷயம் எனவும் தும்மல் போட்டவர்களுக்கு காட் பிளஸ் யூ எனச் சிலர் வாழ்த்தும் தெரிவிப்பார்கள். 1665 ஆம் ஆண்டு மக்கள் பலரும் கொடிய பிளேக் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளனர். அப்பொழுது பலர் தும்மல் போட்டு உள்ளனர், தும்மல் படுவது நோய் முற்றி இறக்கும் நேரத்தை என கூறுகின்றனர். அப்பொழுது பிளேக் நோயால் அவதிப் படுவதை விட இறப்பதே மேல் என்று பலர் எண்ணினர் தும்மல் போடுபவர்கள் உடனடியாக நிம்மதியாக இறந்துவிட்டார் என்று நம்பினர் எனவே தும்மல் போடும் போது காட் பிளஸ் யூ என்று சொல்வதை அந்நாடுகளில் அப்பொழுது பலர் வழக்கமாக வைத்துள்ளனர்.
இது போன்று நமது நாடுகளிலும் வித்தியாசமான பல மூடநம்பிக்கைகள் இன்றளவும் உள்ளன அதில் நீங்கள் இவற்றையெல்லாம் பின்பற்றுகிறீர்கள் என்று சொல்லவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக