புதிய
தொலைத்தொடர்பு கொள்கை 1999-ன்படி,
ஒவ்வொரு தொலைத் தொடர்பு நிறுவனங்களும், ஏ.ஜி.ஆர்., எனப்படும் சரிசெய்யப்பட்ட மொத்த
வருவாயில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஆண்டு உரிம கட்டணமாக மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும்.
மத்திய
அரசு விதிமுறைகள்
அதேபோல்,
மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 'ஸ்பெக்ட்ரம்'
எனப்படும் அலைக்கற்றை அளவுக்கு ஏற்ப பயன்பாட்டுக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
மொபைல் போன் மற்றும் தொலைத் தொடர்பு சேவையின் மூலம் கிடைக்கும் வருவாயைத் தவிர
மற்ற வழிகளில் கிடைக்கும் வருவாயையும் ஏ.ஜி.ஆர்., கணக்கில் சேர்க்க வேண்டும் என
விதிமுறைகள் விதிக்கப்பட்டது.
நிலுவையில்
இருந்த தொகை
அதன்படி,
பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிற தொலைதொடர்பு நிறுவனங்கள் மத்திய
அரசுக்கு அளிக்க வேண்டிய உரிம கட்டணமான ரூ.92 ஆயிரம் கோடி மற்றும் ஸ்பெக்ட்ரம்
பயன்பாட்டு கட்டணமான ரூ. 41 ஆயிரம் கோடி என மொத்தம் 1.33 லட்சம் கோடி நிலுவையில்
இருந்தது.
உச்சநீதிமன்றம்
உத்தரவு
இதுதொடர்பாக
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அக்டோபர் 24 ம் தேதி
தொலைதொடர்பு நிறுவனங்கள் ரூ. 92 ஆயிரம் கோடியை மத்திய அரசிடம் செலுத்த வேண்டும் என
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, ஏர்டெல் நிறுவனம் சுமார் ரூ.21 ஆயிரம்
கோடி, வோடபோன் ஐடியா நிறுவனம் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்
சுமார், ரூ.16 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும். அதோடு,
பி.எஸ்.என்.எல் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி, எம்.டி.என்.எல் சுமார் ரூ.2 ஆயிரம்
கோடியும் பாக்கி வைத்திருக்கிறது.
வரலாறு
காணாத நஷ்டம்
வோடபோன்,
ஐடியா கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. நடப்பு ஆண்டிற்கான இரண்டாவது காலாண்டில்
மட்டும் வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.50 ஆயிரத்து 922 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாக
கூறியுள்ளது. அண்மைக் காலக்கட்டத்தில் எந்த ஒரு நிறுவனமும் இவ்வளவு நஷ்டத்தை
சந்தித்தது இல்லை.
ஏர்டெல்
நிறுவனமும் நஷ்டம்
ஏர்டெல்
நிறுவனமும் இதுவரை இல்லாத அளவிற்கு இரண்டாம் காலாண்டில் 23 ஆயிரத்து 45 கோடி
ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்
தொகையை முழுமையாக செலுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் கடும் நெருக்கடி
சந்தித்து வருவதாக ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது.
வோடபோன்
கோரிக்கை
இந்தியாவில்
தொலைத் தொடர்பு தொழில் முதலீடு வாய்ப்பு மோசமான நிலையை நோக்கி சென்று
கொண்டிருப்பதாகவும், அதற்கு காரணம் இந்தியாவில் தொலைத் தொடர்பு நிறுவனம் தொடங்க
உரிமம் பெறுவதற்கு கூடுதல் கட்டணம், அதிக வரி, நெருக்கடியான விதிமுறைகள் என
வோடபோன் நிறுவனம் தெரிவித்தது. அதேபோல் அரசு, மற்ற நிறுவனங்களுக்கு வழங்கும்
சலுகைகளை தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் எனவும்
வோடபோன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது.
கட்டணத்தை
உயர்த்தத் திட்டம்
இதையடுத்து
நஷ்டத்தை சமாளிக்க அடுத்த சில தினங்களில் வோடபோன் ஐடியா, ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட
நிறுவனங்கள் வாடிக்கையாளருக்கான கட்டண சேவையை உயர்த்தப்போவதாக அறிவித்தது.
நிர்மலா
சீதாராமன் அறிவிப்பு
இதையடுத்து,
தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கோரிக்கைக்கு ஏற்ப ஒட்டுமொத்த வருமானத்தில் 8
சதவீதம் உரிமம் கட்டணமாக செலுத்த வேண்டும். ஆனால் அதை 5 சதவீதமாக குறைத்து மத்திய
அரசு அறிவித்தது. அதேபோல் எந்த நிறுவனம் சேவையை நிறுத்திக் கொள்ள வேண்டாம் எனவும்
சலுகைகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்
தெரிவித்தார்.
சலுகைகளை
அறிவித்த மத்திய அரசு
அதன்படி,
பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சற்று
ஆறுதல் அளிக்கும் வகையில் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை வசூலிக்கும் திட்டத்தை தற்போது
தள்ளி வைக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஆனால் ஸ்பெக்ட்ரம்
ஏலத்திற்கு வரும் போது ஸ்பெக்ட்ரம் கட்டணங்கள் முழுவதுமாக கட்டப்பட வேண்டும்
எனவும் அதில் குறிப்பிட்டார்.
தவணை
முறையிலும் செலுத்தலாம்...
அதேபோல்,
ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை தற்காலிகமாக ஒத்திவைக்க விரும்பும் நிறுவனங்கள் வங்கி
மூலமான உத்திரவாதத்தை சமர்பிக்க வேண்டும் எனவும் இந்த நிலுவை தொகையை திருப்பி
செலுத்த 2 ஆண்டுகள் வரை நிறுவனங்களுக்கு கால அவகாசம் அளிக்கவும் மத்திய
நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஒப்புதல் அளித்தார். அதேபோல் இந்த தொகையை
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இல்லாமல், தவணை முறையிலும் செலுத்தலாம் என சலுகைகளை
வழங்கினார். இதன்மூலம் மூன்று பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு கிடைக்கும்
நன்மை 42,000 கோடி ரூபாயாக இருக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சேவைக் கட்டணம் உயர்த்தப்படுமா
மன
அழுத்தத்தை போக்க ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ளுமாறு தொலைத்தொடர்பு
நிறுவனங்களை அரசாங்கம் கேட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக ஆபரேட்டர்கள் 2-3
நாட்களில் ஒரு கூட்டுக்கூட்டத்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அடுத்த சில நாட்களில் கட்டணங்களை
அதிகரிக்கும் என்று அறிவித்த நிலையில் மத்திய அரசு சலுகைகள் வழங்கியுள்ளது.
இதன்மூலம் கட்டண உயர்வு நிறுத்தப்படுமா என வாடிக்கையாளர் எதிர்பார்த்துக்
கொண்டிருக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக