Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 30 டிசம்பர், 2019

11 மர்ம தற்கொலைகள்: மருத்துவ மையமாக மாறிய திகில் வீடு!!

டெல்லியில் 11 பேர் மர்ம தற்கொலைகள் நடந்த வீட்டை மருத்துவர் ஒருவர் வாங்கி மருத்துவ பரிசோதனை மையமாக மாற்றியுள்ளார். 

டெல்லியில் புராரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கடந்த ஆண்டு இரவு கூட்டாக தற்கொலை செய்து கொண்டனர். இவர்களில் 7 பேர் பெண்கள். 10 பேர் தூக்கில் தொங்கியும், முதியவரான ஒருவர் மட்டும் படுக்கையிலும் இறந்து கிடந்தனர். 
 
வீட்டில் கைப்பற்ற டைரியின் மூலம் சொர்க்கத்தை அடைவதற்காக அவர்கள் தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் அதன் பின்னர் கடவுளைச் சந்திப்பதற்காகத்தான் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகின. 
 
மேலும் அந்த குடும்பத்தினரின் டைரி குறிப்புகள் அமானுஷிய கதைகளை உருவாக்கி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வந்தாலும் முழுமையான விபரங்கள் கிடைக்காமல் மர்மம் நீடித்து வருகிறது.
 
இந்நிலையில் மோகன் சிங் என்ற மருத்துவர் இந்த வீட்டை வாங்கி மருத்துவ பரிசோதனை மையமாக மாற்றியுள்ளார். மேலும் தனக்கு மூட நம்பிக்கை இல்லாததால் இந்த வீட்டை வாங்கியதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் இந்த மருத்துவ மையத்திற்கு நோயாளிகள் மருத்துவம் பார்க்க வருவார்களா என்பதுதான் தெரியவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக