ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்தவர் சின்ன நரசையா. இவருக்கு சுவர்தா (19) என்கிற மனைவியும், 2 வயது பெண் குழந்தையும் இருந்துள்ளனர். சுவர்த்தவிற்கு டிக் டாக் உபயோகப்படுத்தும் பழக்கம் அதிகமாக இருந்துள்ளதாக தெரிகிறது.
அதிலும், தினமும் பல விடீயோக்களை பதிவேற்றம் செய்யும் அளவிற்கு டிக் டாக்கினை அதிகமாக உபயோகப்படுத்திவந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை எழுந்துள்ளது.
இதில் 2 வயது பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு கணவரை பிரிந்து விடுதியில் தங்கியுள்ளார் சுவர்தா. அதன் பிறகும் டிக் டாக் வீடியோக்களை தொடர்ந்து பதிவேற்று வரவே, கோபமடைந்த சின்ன நரசையா, தன் தம்பியுடன் சேர்ந்து சுவர்த்தவை கொன்று சுடுகாட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டார்.
இந்த சம்பவம் அறிந்து போலீசார் அண்ணன் சின்ன நரசையா, மற்றும் அவரது தம்பியையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக