Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 30 டிசம்பர், 2019

மக்களே உஷார்.! இந்த ஆண்டில் பயன்படுத்தப்பட்ட மோசமான பாஸ்வோர்டு லிஸ்ட் இதோ.!

மக்களே உஷார்.! இந்த ஆண்டில் பயன்படுத்தப்பட்ட மோசமான பாஸ்வோர்டு லிஸ்ட் இதோ.!



நாம் பயன்படுத்தும் மொபைல், கணினிகள், டிஜிட்டல் வாலெட்கள், இ மெயில்கள், நெட்பேங்கிங் உள்ளிட்ட பலவற்றிற்கும் பாஸ்வோர்ட்களை நினைவில் வைத்திருப்பது சற்று கடினமான வேலை தான். மிக எளிதான முறையில் நினைவில் இருக்கும்படி பாஸ்வோர்ட்களை செட் செய்யவே பலரும் விரும்புவோம்.
இந்நிலையில், நமக்கு எளிதான முறையில் நினைவில் நிற்கும் நம் பாஸ்வோர்ட்கள், ஹேக்கர்ஸ் எனப்படும் சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் திருட்டு வேலைகளில் ஈடுபட அதைவிட மிக எளிதாக அனுமதிக்கிறோம் என்பதே உண்மை. சர்வதேச அளவில் 2019-ம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட எளிதாக கணிக்கக்கூடிய 10 பாஸ்வோர்ட்களின் பட்டியலை, (worst passwords of 2019) என்ற பெயரில் Splash Data நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதனிடையே ஆண்டுதோறும் இப்பட்டியல் வெளியிடப்பட்டாலும் இதில் இடம்பெறும் பாஸ்வோர்ட்களில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. டாப் 10-ல் உள்ளவையே மாறி மாறி மீண்டும் பட்டியலில் இடம் பிடித்து வருகிறது.
Splash Data நிறுவனம் வெளியிட்ட worst passwords of 2019 : 1. 123456, 2. 123456789, 3. qwerty, 4. password, 5. 1234567, 6. 12345678, 7. 12345, 8. iloveyou, 9. 111111, 10. 123123. மோசமான பாஸ்வோர்ட்கள் பட்டியலில் வழக்கம் போல இந்த ஆண்டும் 123456, 123456789, qwerty, மற்றும் password ஆகிய பாஸ்வோர்ட்கள் முதல் நான்கு இடங்களில் உள்ளன. இதில் நான்காம் இடத்தில் உள்ள password, கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக