இந்தியாவில்
சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் சம்பவங்கள் அதிகரித்து
வருகின்றன. இந்த சம்பவங்களை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து
எடுத்துக் கொண்டு வருகின்றன.ஆனாலும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து தான்
இருக்கிறது.
இந்நிலையில்
உத்தரபிரதேச கான்பூரில் உள்ள ஒரு பள்ளி சிறுமிகளை சிலர் கிண்டல் செய்ததற்காக
புகார் கொடுக்கப்பட்டது. அப்போது அந்த பகுதியில் ஒரு பெண் கான்ஸ்டபிள் ஒருவரை
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.
இதை
தொடர்ந்து பள்ளிக்கு வந்த சிறுமிகளை சிலர் கிண்டல் செய்வதை பார்த்து உள்ளார்.
கிண்டல் செய்தவர்களை பிடிக்க முயன்றபோது ஒரு இளைஞரை மட்டும்
சிக்கினார்.சிக்கிய இளைஞரை பெண் கான்ஸ்டபிள் தனது காலணிகளால் அடித்து
உள்ளார்.
பெண்
கான்ஸ்டபிள் தனது காலணிகளால் அடிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது. அந்த
வீடியோவில், கிண்டல் செய்த இளைஞரை 20 தடவைகளுக்கு மேல் காலணிகளால்
அடித்து உள்ளார். அப்போது பெண் கான்ஸ்டபிள் “உனக்கு பைத்தியம்
பிடித்திருக்கிறதா..? உங்கள் வீட்டில் உனக்கு அம்மா மற்றும் சகோதரி இல்லையா?
என கேட்டுக்கொண்ட காலணிகளால் அடித்தார். இளைஞரை பிடித்து அடித்த அந்த பெண்
காவலருக்கு பலர் பாராட்டி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக