Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 31 டிசம்பர், 2019

பிரியங்கா வழக்கில் என்கவுன்டர் செய்யப்பட்ட சின்னகேசவலு தந்தையின் தற்போது நிலைமை என்ன தெரியுமா ..?

பிரியங்கா வழக்கில் என்கவுன்டர் செய்யப்பட்ட சின்னகேசவலு தந்தையின் தற்போது நிலைமை என்ன தெரியுமா ..?



மீபத்தில் ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பிரியங்கா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

4 பேரும் கடந்த 6-ம் தேதி போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். இறந்த நான்கு பேரில் சின்னகேசவலு என்பவர் மட்டும் திருமணம் ஆனவர். இவர் மனைவி ரேணுகா தற்போது கர்ப்பமாக உள்ளார்.

இந்நிலையில் சின்னகேசவலு தந்தையும் , ரேணுகாவின் மாமனாருமான குர்மன்னா சில தினங்களுக்கு முன்பு பைக்கில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் குர்மன்னா சென்ற பைக் மீது மோதியது.

இந்த விபத்தில் குர்மன்னா தலையில் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நிசாம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார். அவரின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் குர்மன்னாவிற்கு  தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக