மேற்கு லண்டனை சேர்ந்த வில்லியம் கிளக். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் டெக்ஸாஸில் இருந்து லண்டனுக்கு விமானம் மூலம் சென்றுள்ளார். அப்போது விமானத்தில் ஏறிய இவர் விமானத்தில் கொடுக்கப்பட்ட மதுவை குடித்து உள்ளார்.
பின்னர் கொடுக்கப்பட்ட அளவைவிட அதிகமாக தனக்கு மது வேண்டும் என கோபத்தோடு தூக்க மாத்திரையை மதுவில் கலந்து குடித்தபடி இருந்தார். இதனால் போதை தலைக்கேறியதால் வில்லியம் தனது சட்டையை கழட்டி விமானத்தில் பயணிகளுக்காக பணி செய்யும் பணிப்பெண்கள் தலையில் சட்டையை போட்டு அநாகரிகமாக நடந்து கொண்டார்.
பின்னர் ஊழியர்கள் அவரை கட்டி வைத்தனர். ஆனாலும் கட்டை அவிழ்த்து விட்டு மீண்டும் வில்லியம் சக பயணிகள் மீது ஏறி நிற்பது. அவர்களின் தலையில் முட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டார்.இதையடுத்து விமானம் லண்டனுக்கு வந்த பின்னர் வில்லியம்ஸை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட வில்லியம்ஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது பேசிய வில்லியம்ஸ் வழக்கறிஞர்கள் தூக்கமின்மை காரணமாக அவர் அப்படி நடந்து கொண்டார் என கூறினார்.இதனால் இந்த வழக்கை நீதிமன்றம் அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக