ஏர் இந்தியா நிறுவனத்தை யாரும் வாங்க
முன்வராவிட்டால், 6 மாதங்களுக்குள் இழுத்து முட வேண்டியிருக்கும் என்று மூத்த
அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
செயல்பாட்டு செலவுக்காக ரூ.2400 கோடி
கேட்டிருந்த நிலையில், மத்திய அரசு ரூ.500 கோடி மட்டும் வழங்கியதாக அவர் கூறினார்.
பின்னர் என்ஜின் மாற்றத்திற்காக தரையிறக்கப்பட்ட 12 விமானங்களை மீண்டும் இயக்க
1100 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2011 – 2012-ம் நிதி ஆண்டில்
இருந்து நடப்பு ஆண்டின் டிசம்பர் மாதம் வரை மத்திய அரசு 30 ஆயிரத்து 520 கோடி
ரூபாயை மூலதனமாக அளித்துள்ளது.
இதனிடையே கடந்த நிதி ஆண்டில் மட்டும்
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.8556 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சுமார் ரூ.60
ஆயிரம் கோடி கடன் சுமையில் திணறி வரும் ஏர் இந்தியாவை, தனியாரிடம் விற்க மத்திய
அரசு முயன்று வருகிறது என தெரிய வந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக